NEW
Font size
Worksheetsபுதிர்ப்போட்டி பயிற்சி 1 - மகேந்திரன் நவமணி
Total questions: 10
Worksheet time: 5mins
அமுதா கண்கவர் ஓவியங்களைத் தீட்டுவதில் கைத்தேர்ந்தவள்.
படர்க்கை சொல்லைக் குறிக்கும் விடையைத் தெரிவு செய்க.
அமுதா
ஓவியங்களை
தீட்டுவதில்
கைத்தேர்ந்தவள்
"நாம் குடியிருப்பின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்"
மேற்காணும் கூற்று குறிக்கும் பழமொழி யாது?
ஊருடன் கூடி வாழ்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமையே பலம்
ஈறுக்கெட்ட எதிர்மறை பெயரெச்சம் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சுற்றுலா செல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
பந்தயத்தில் ஓடாக் குதிரைகள் தனித்து வைக்கப்பட்டன.
தம்பி எழுதாத பக்கங்களில் கிறுக்கினான்.
யாரும் நுழையாத அடர்ந்த காட்டுக்குள் வீரன் தனியே சென்றான்.
'ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு'
கொன்றைவேந்தனின் பொருளை விளக்கும் விடையைத் தெரிவு செய்க.
விடாமுயற்சியோடு செயல்படும் எண்ணம் வாழ்க்கையை வளப்படுத்தும்
விடாமுயற்சியில்லாமல் இருப்பது வாழ்க்கையை வளப்படுத்தும்
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்
விடாமுயற்சியோடு இருந்தால் எண்ணம் வளமாக இருக்கும்
மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த அம்பு வேடனைத் தாக்கியது.
வாக்கியத்தில் எழுவாயைக் குறிக்கும் விடையைத் தெரிவு செய்க.
மின்னல்
அம்பு
வேடனைத்
தாக்கியது
விழைவு வாக்கியம் என்பவை யாவை?
வேண்டுகோள், கட்டளை, வாழ்த்துதல், செய்தி
வேண்டுகோள், கட்டளை, வாழ்த்துதல், சபித்தல்
வேண்டுகோள், கட்டளை, வாழ்த்துதல், வியத்தல்
வினைமுற்று காட்டும் கூறுகள் யாவை ?
காலம், திணை, பால், இடம், எண்
காலம், புணர்ச்சி, பால், இடம், எண்
காலம், திணை, பால், இடம்
காலம், திணை, மோனை, இடம், எண்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
மேற்காணும் திருக்குறளில் இடுக்கண் என்ற சொல்லின் பொருள் யாது?
துன்பம்
அதிர்ச்சி
உதவி
இன்பம்
உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
அகிலன் தன் தாத்தாவுடன் தோட்டத்திற்குப் பழங்களைப் பறிக்கச் சென்றான்.
கோடிடப்பட்ட சொற்கள் குறிக்கும் விடையைத் தெரிவு செய்க.
வினைமுற்று
பெயர்ச்சொல்
வினையெச்சம்
பெயரெச்சம்
