NEW
Font size
WorksheetsUPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
விளக்கத்திற்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.
செய்யும் செயலில் மனத்துணிவைக் கைவிடாதே.
ஓதுவ தொழியேல்
உடையது விளம்பேல்
ஆறுவது சினம்
ஊக்கமது கைவிடேல்
சாலை விபத்தில் காயமடைந்த _________ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்றும் இன்றும்
இன்ப துன்பம்
ஆறுவது சினம்
தாயும் சேயும்
__________ என விழித்த திருடன் போலீஸ் விசாரனைக்குப் பிறகு உண்மையை ___________ என்று கூறினான்.
கடுகடு, கிடுகிடு
சிடுசிடு, தடதட
தகதக, மடமட
திருதிரு, மளமள
கீழ்க்காணும் திருக்குறளில் உயிர் எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
உடுக்கை, இழந்தவன், ஆங்கே, இடுக்கண்
கைபோல, களைவதாம், நட்பு
உடுக்கை, இடுக்கண், நட்பு
இடுக்கண், களைவதாம், நட்பு
கீழ்க்காணும் காலி இடத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
தமக்கு எதிராக அரசாட்சியைக் கைப்பற்ற தம் உடன்பிறந்த தம்பியே சதித்திட்டம் தீட்டுகிறான் என்பதை அறிந்த குமண மன்னர் ________வேதனைப்பட்டார்.
அனலில் இட்ட மெழுகு போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
வேலியே பயிரை மேய்ந்தது போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
கீழ்க்காணும் காலி இடத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
தருண்குமார் மாணவர் தலைவனாகத் தேர்வு பெற்றதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவனுடைய நற்குணமும் கடமையுணர்வும் _________ அனைவராலும் அறியப்பட்டவைதாமே!
இலைமறை காய் போல
சிலைமேல் எழுத்து போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
தவறான இணைமொழியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும் மனந்தளராமல் உழைத்த சுந்தரம் இன்று மிகச் சிறந்த வணிகராகத் திகழ்கிறார்.
திரைப்பட நடிகைகள் அணியும் சில வகை ஆடை அணிகள் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வசதியற்ற மாணவர்களுக்குக் கைகொடுக்க செல்வர்கள் முன்வர வேண்டும்.
சத்தான உணவும் நிறைவான வாழ்க்கையும் கொண்ட அந்தச் செல்வர் எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள வெற்றிவேற்கைக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
கல்விக் கழகு கசடற மொழிதல்.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
ஒருவரிடம் இனிமையாகவும் பண்பாகவும் பேச வேண்டும்.
பொருத்தமான மரபுத்தொடரை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
படிப்பிலும் விளையாட்டிலும் பல பரிசுகளைப் பெறும் மகனைப் பார்த்துப் பரிமளா உச்சிக் குளிர்ந்தாள்.
பூப்பந்தாட்டப் போட்டியில் தான் வெற்றி பெற போவதாக மாறன் கடுக்காய் கொடுத்தான்.
அகிலன் ஆழம் பார்த்துப் பணத்தைச் சேமித்துத் தான் விரும்பிய மிதிவண்டியை வாங்கினான்.
மதிவாணி ஒரு செயலைக் கிள்ளுக் கீரையெனத் தொடங்கிவிட்டு, அதனை முடிக்க முடியாமல் திண்டாடுவாள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிவேற்கை செய்யுளின் மையக்கரு என்ன?
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
நட்பு
கல்வி
செல்வம்
நல்லாட்சி
