wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை அணிச்சிறப்புகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கவிதையில் அணிச்சிறப்பு என்றால் என்ன?

a)

மிகையான ஒப்பனை

b)

அணிகலம்

c)

கவிதைக்கு அழகுச் சேர்ப்பவை

2.

ஒரு சொல்லுக்கு அல்லது பொருளுக்கு உருவம் தருவது ………. ஆகும்.

a)

உவமை அணி

b)

உருவக அணி

3.

ஒரு பொருள் அல்லது ஒரு செயலை அதைப் போன்ற தன்மையுடைய இன்னொரு பொருள் அல்லது செயலோடு ஒப்பிட்டுக் கூறுவது ………. ஆகும்.

a)

உவமை அணி

b)

உருவக அணி

4.

அஃறிணைப் பொருளை உயர்திணையாய் உருவகம் செய்து கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவது ………. ஆகும்.

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

தற்குறிப்பேற்ற அணி

5.

உள்ளதை உள்ளவாறு உரைப்பது ………. ஆகும்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

தன்மை நவிற்சி அணி

6.

வந்த சொல் மீண்டும் வருவதை ………. என்று அழைப்போம்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

பின்வருநிலை அணி

c)

தன்மை நவிற்சி அணி

7.

கருத்தை நம்ப முடியாத அளவிற்கு உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ மிகையாக நவிலுதல் ………... ஆகும்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

பின்வருநிலை அணி

c)

தன்மை நவிற்சி அணி

d)

உயர்வு நவிற்சி அணி

8.

ஓர் அடியில் வந்த சொல் அதே அடியில் அல்லது பின்வரும் அடிகளில் மீண்டும் வந்து பொருள் மாறுபட்டு இருக்கும்.

a)

மடக்கு அணி

b)

அங்கத முரண் அணி

9.

சொல்வது ஒன்றாகவும் உண்மையில் சொல்ல வருவது வேறொன்றாகவும் இருக்கும்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

அங்கத முரண் அணி

c)

உயர்வு நவிற்சி அணி

10.

ஒரு சொல் இரு பொருள் தருவது .............. ஆகும்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

அங்கத முரண் அணி

c)

உயர்வு நவிற்சி அணி

d)

இரட்டுறமொழிதல் அணி

11.

சீர்களில் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருவது .............. ஆகும்.

a)

பின்வருநிலை அணி

b)

தற்குறிப்பேற்ற அணி

c)

திரிபு அணி

d)

இரட்டுறமொழிதல் அணி

12.

எந்த எந்த நாளும் – என்னைப்

பிரியாதே என்னுயிராய்


வண்ணமிடப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை அணிச்சிறப்பை ஏற்றுள்ளன?

a)

பின்வருநிலை அணி

b)

தற்குறிப்பேற்ற அணி

c)

திரிபு அணி

d)

இரட்டுறமொழிதல் அணி

13.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே


வண்ணமிடப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை அணிச்சிறப்பை ஏற்றுள்ளன?

a)

பின்வருநிலை அணி

b)

தற்குறிப்பேற்ற அணி

c)

இரட்டுறமொழிதல் அணி

d)

திரிபு அணி

14.

வானை இடிக்கும் மலை மேல் – ஏறி

நின்று பாரடா எங்கும்


வண்ணமிடப்பட்டுள்ள அடி எவ்வகை அணிச்சிறப்பை ஏற்றுள்ளது?

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

உயர்வு நவிற்சி அணி

15.

முழுமதி அவளது முகமாகும்


வண்ணமிடப்பட்டுள்ள அடி எவ்வகை அணிச்சிறப்பை ஏற்றுள்ளது?

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

உயர்வு நவிற்சி அணி