wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ephesians Quiz by MM

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

எபேசு நிருபத்தின் படிதேவன் எப்போது நம்மை தெரிந்துகொண்டார்?

According to the book of Ephesians, when did God choose us?

a)

உலகத்தோற்றத்துக்குமுன்னே

before the foundation of the world

b)

எலும்புகள் உருவாகுமுன்னே

before the bones grow in the womb

c)

தாயின் கருவிலே

in the mother’s womb

d)

நம்மை உருவாக்குமுன்னே

Before He formed us in the belly

2.

இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே அவருடைய ---------- பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

In Jesus Christ we have redemption through His-------------, the forgiveness of sins, according to the riches of His grace.

a)

ஜிவனாலே

life

b)

இரத்தத்தினாலே

blood

c)

மரணத்தினாலே

death

d)

கீழ்படிதலினாலே

obedience

3.

எதைக் குறித்து தான் கேள்விப்பட்டு ஸ்தோத்திரம்பண்ணினேன் பவுல் எபேசியரிடம் எழுதுகிறார்?

What had Paul heard (about Ephesians), that prompted his prayers in their behalf?

a)

மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தது

extreme generous in their giving

b)

ஏழைகளுக்கு இரங்கியது

pity for the poor

c)

அன்பும் விசுவாசமும்

their faith and Love

d)

சபை கூடிவருதலை

church gethering

4.

பிதாவானவர் எப்படிப்பட்ட ஆவியை எபேசியருக்கு தந்தருள வேண்டுமென்று ஜெபித்ததாக பவுல் கூறுகிறான்?

According to Paul, what kind of Spirit should be given to Ephesiansby Father God?

a)

புத்திர சுவிகார ஆவி

Spirit of adoption

b)

ஆவிகளை பகுத்தறியும் ஆவி

Spirit of discerning of spirits

c)

அந்நியபாஷை தீர்க்கதரிசன ஆவி

tongues and prophesy

d)

ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவி

Spirit of wisdom and revelation

5.

கிறிஸ்துவுக்குள்ளான சபை என்பது என்ன?

What is the church in relation to Christ?

a)

அவர் சரீரம்

His body

b)

அவர் ஜனங்கள்

His People

c)

ஆசாரியர்கள்

Priest

d)

அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

people chosen by Him

6.

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த எபேசியரை தேவன் என்ன செய்தார்?

What did God do to those who were once dead in trespasses and sins?

a)

மன்னித்தார்

had forgiven

b)

உயிர்ப்பித்தார்

had made you alive

c)

தண்டித்தார்

had punished

d)

ரட்சித்தார்

had redeemed

7.

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பிக்க தேவனை தூண்டியது எது?

What motivated God to maமந us alive together with Christ?

a)

இரக்கம்

kindness

b)

கிருபை

grace

c)

அன்பு

Love

d)

சாந்தம்

politeness

8.

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களிலே யாரோடு கூட நம்மை உட்காரவும் செய்தார்?

God has raised us up together in Christ Jesus and made us sit together in the heavenlies With ----------------.

a)

சகல பரிசுத்தவான்கள்

all Saints

b)

பரிசுத்த ஆவி

Holy Spirit

c)

சகல பரிசுத்தவான்கள்

all Saints

d)

இயேசுக்கிறிஸ்து

Jesus Christ

9.

முன்னே தூரமாயிருந்த நாம் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் ---------------ஆலே சமீபமாகியிருக்கிறோம்.

But now in Christ Jesus you who were once afar off are made near by the ------ of Christ.

a)

இரத்தத்தினாலே

blood

b)

மரணத்தினாலே

death

c)

கிழ்படிதலினாலே

obedience

d)

உயிர்ப்பினாலே

resurrection

10.

எந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள் என்று பவுல் எபேசியரைப் குறிப்பிடுகிறார்?

Ephesians are built upon the foundation of the -------------.

a)

பிதா நியாயப்பிரமாணம்

Father God and Law

b)

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள்

apostles and prophets

c)

அவரின் கிருபை அன்பு

His grace and love

d)

அவரின் வசனம் அன்பு

His word and love

11.

மூன்றாம் அத்தியாயத்தைத் தொடங்கும்போது பவுல் தன்னை எவ்வாறு அடையாளம் காட்டுகிறார்?

How does Paul identify himself as he begins the third chapter?

a)

கிறுஸ்துவுக்குள் அப்போஸ்தலனாக

Apostle in Christ

b)

அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாக

a called apostle

c)

இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக

the prisoner of Jesus Christ

d)

இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக

an apostle of Jesus Christ

12.

இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. என்ன அந்த இரகசியம்

What is the "mystery" that has now been revealed?

a)

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே

Christ in you, the hope of glory

b)

சுத்த மனச்சாட்சியிலே விசுவாசத்தின் இரகசியம்

the mystery of the faith in a pure conscience

c)

தேவபக்திக்குரிய இரகசியம்

the mystery of godliness

d)

புறஜாதிகள் ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய் இருப்பது

Gentiles being a part of the same body

13.

பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய பவுலுக்கு கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக என்ன அளிக்கப்பட்டிருக்கிறது?

What is given to me (who am less than the least of all saints) to preach the gospel of the unsearchable riches of Christ among the nations?

a)

கிருபை

Grace

b)

பரிசுத்த ஆவி

Holy Spirit

c)

உத்தரவு

Order

d)

வெளிப்பாடு

revelation

14.

எதினாலே நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது?

we have boldness and access with confidence through what?

a)

கிருபையால்

grace

b)

விசுவாசத்தால்

faith

c)

சிலுவையால்

cross

d)

இரத்தத்தால்

blood

15.

தேவன் என்ன செய்ய வல்லவராயிருக்கிறார் என்று பவுல் கூறுகிறார்?

What does Paul say God is able to do?

a)

அற்புதங்கள் செய்ய

Miracles

b)

மன்னிக்க

forgive

c)

மிகவும் அதிகமாய் செய்ய

Exceeding abundantly

d)

ஆசிர்வதிக்க

bless

16.

நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென பவுல் கூறுகிறார்?

How does Paul say that we should walk?

a)

பரிசுத்தத்திற்கு பாத்திரவான்களாய்

worthy of the holiness

b)

இரட்சிப்புக்குப் பாத்திரவான்களாய்

worthy of the salvation

c)

கிருபைக்குப் பாத்திரவான்களாய்

worthy of the grace

d)

அழைப்புக்குப் பாத்திரவான்களாய்

worthy of the calling

17.

“ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டது போல“ என்பதைப் போன்று எத்தனை “ஒரே காரியங்களை“ பவுல் தெரிவிக்கிறார்?

As Paul says “you are called in one hope of your calling” how many ‘one maters’ are mentioned by Paul?

a)

7

b)

8

c)

5

d)

6

18.

பவுல் குறிப்பிடுகிற ஊழிய வரங்களில் மூன்றாவதாக வருவது எது?

According to Paul Which ministry comes third in the order?

a)

தீர்க்கதரிசிகள்

prophets

b)

சுவிசேஷகர்

evangelists

c)

மேய்ப்பர்

pastors

d)

போதகர்

teachers

19.

யார் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள் என்று பவுல் கூறுகின்றார்?

Paul says that you should not walk from now on as ----------- walk, in the vanity of their mind.

a)

கள்ள தீர்க்கதரிசிகள்

false prophet

b)

அந்நிய போதகர்கள்

foreign preachers

c)

மற்றப் புறஜாதிகள்

other nations

d)

கிறிஸ்துவுக்குள் இல்லாதவர்கள்

those not in Christ

20.

எந்த நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என பவுல் கூறுகிறார்?

And do not grieve the Holy Spirit of God, by whom you are sealed until the------------

a)

கர்த்தரின் நாள்

the day of the Lord

b)

வருகையின் நாள்

the day of His coming

c)

கடைசிகால நாள்

the day of lastdays

d)

மீட்கப்படும் நாள்

day of redemption

21.

நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, எப்படி நடந்துகொள்ள வேண்டுமென பவுல் கூறுகிறார்?

Therefore be followers of God, as dear children, and walk in ---------

a)

அன்பிலே

love

b)

விசுவாசத்திலே

faith

c)

பரிசுத்தத்திலே

holiness

d)

கிருபையிலே

grace

22.

யார் மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என பவுல் கூறுகிறார்?

Let no man deceive you with vain words, for because of these things the wrath of God comes upon the ------------

a)

கீழ்படியாத ஜனங்கள்

disobedient people

b)

கீழ்ப்படியாத பிள்ளைகள்

disobedient children

c)

கீழ்படியாத விசுவாசிகள்

disobedient believers

d)

கீழ்படியாத ஆசாரியர்கள்

disobedient priest

23.

அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், என்ன செய்ய வேண்டும்?

Have no fellowship with the unfruitful works of darkness, but rather -------------- .

a)

விட்டு விலக வேண்டும்

quit them

b)

எதிர்த்து நில்லுங்கள்

resist them

c)

கடிந்துகொள்ள வேண்டும்

reprove them

d)

ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

give thanks

24.

ஒருவருக்கொருவர் எப்படி கீழ்ப்படிந்திருங்கள் என்று பவுல் கூறுகிறார்?

How does Paul say that we should obey each other?

a)

அன்போடு

with love

b)

பக்தியோடு

with pious

c)

பணிவோடு

with humility

d)

தெய்வ பயத்தோடு

with fear of God

25.

கிறிஸ்து திருச்சபைக்கு, என்னவாய் இருக்கிறார் என பவுல் கூறுகிறார்?

What is revealed about the relation of Christ to His church?

a)

தலை

head

b)

கட்டடம்

building

c)

அஸ்திபாரம்

foundation

d)

ஆசாரியர்

high priest

26.

வேலைக்காரர்கள் தங்கள் எஜமானர்களுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?

In what way are servants to be obedient to their masters?

a)

பணிவோடும் மரியாதையோடும்

With humility and respect

b)

பயத்தோடும் நடுக்கத்தோடும்

With fear and trembling

c)

அறிவோடும் ஞானத்தோடும்

With knowledge and wisdom

d)

உண்மையாகவும் ஒழுக்கமாகவும்

Truthfully and morally

27.

எஜமானர்கள் எப்படி தங்கள் ஊழியர்களை நடத்த வேண்டுமென பவுல் கூறுகிறார்?

How were masters to treat their servants?

a)

அலட்சியம் செய்யாமல்

Without neglect

b)

கோபப்படுத்தாமல்

Without Irritating

c)

கடுஞ்சொல் இல்லாமல்

Without threatening

d)

மரியாதையுடன்

With respect

28.

பொருத்துக

1.சத்தியம் –A.பாதரட்சை 2.ஆயத்தம் – B.தலைசீரா 3.நீதி – C.கச்சை 4.இரட்சண்யம் – D.மார்கவசம்

Match 1. Truth - A. Feet 2. preparation – B. Helmet 3. righteousness – C. Loins 4. Salvation – D. Breastplate

a)

CBDA

b)

CBAD

c)

CABD

d)

CADB

29.

பவுல் தனக்காக ஜெபிக்கும் படி எதற்காக கேட்டுக்கொண்டார்?

For what did Paul ask that they pray for in his behalf?

a)

தைரியத்திற்காக

For boldness

b)

இரட்சிப்பிற்காக

For salvation

c)

ஊழியத்திற்காக

For ministry

d)

விடுதலைக்காக

For his release

30.

பவுலின் சுகசெய்தி குறித்து அவர்களிடம் யார் அறிவிப்பான் என பவுல் கூறுகிறான்?

Who was going to tell them more about Paul's condition?

a)

ஒநேசிமு

Onesimus

b)

தீகிக்கு

Tychicus

c)

எப்பாப்பிரா

Epaphras

d)

அரிஸ்தர்க்கு

Aristarchus