Worksheetsஅடைமொழி _எச்சம்
Total questions: 20
Worksheet time: 10mins
திருடன் _______________ கத்தியை இடுப்பில் மறைத்து வைத்தான்
கூர்மை
கூர்மையாக
கூர்மையாய்
கூர்மையான
திரு மாறன் _______________ பழகி வந்ததால் எல்லாருக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது.
அன்பாக
சிறப்பாக
கொடூரமாக
பயங்கரமாக
விடாமல் _______________ மழையினால் சிறுவர்கள் திடலுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனர்.
பெய்த
பெய்ய
பெய்து
பெய்யும்
சாலையின் குறுக்கே மரம் _______________ கிடந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
விழும்
விழுந்த
விழுந்து
விழுகின்ற
நம் இராணுவ வீரர்கள் எதிரியின் முகாமை நோக்கி _______________ சென்று கொண்டிருக்கின்றனர்.
விரைந்த
விரைந்து
விரைவான
விரைகின்ற
ரகு கடிதத்தை ________________ உறையில் வைத்தான்.
கிழித்து
மடித்து
மடக்கி
கசக்கி
நீச்சலில் சாதித்த விளையாட்டு வீரரைப் பற்றி ______________ பேசப்பட்டது.
பரவலாக
துரிதமாக
பலமாக
தீவிரமாக
மீன் கறி சுவையாக இருந்ததால் அமீனா தட்டை _____________ சாப்பிட்டாள்.
சுரண்டி
கழுவி
துடைத்து
வழித்து
ஆசிரியரின் _____________ பேச்சு, போட்டியில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு
ஆறுதல் அளித்தது.
பணிவான
கனிவான
கடுமையான
(1) பதற்றமான
சிறுவர்களின் கூச்சல் சத்தம் மாமாவின் ______________ சிந்தனையைக் கலைத்தது.
பரந்த
உயர்ந்த
ஆழ்ந்த
நிறைந்த
தாய் பென்சிலைக் _____________________ அதைத் தன் மகனுக்குக் கொடுத்தார்.
கூர்மையான
கூர்மையானவுடன்
கூர்மையாக
கூர்மையாக்கி
கடல் கொந்தளிப்பால் மேலே ______________ அலை ஒருவரைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
உயர்ந்த
எழுந்த
விழுந்த
தெறித்த
வெள்ளத்தில் __________________ மக்களுக்கு அரசாங்கம் உதவிக் கரம் நீட்டியது.
பாதிப்படைந்த
பாதிப்படைந்து
பாதிப்படைகிற
பாதிப்படையும்
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் இங்குக் கடலுணவை விரும்பி _________________________ மகிழ்கிறார்கள்.
உண்ண
உண்டு
உண்ணும்
உண்கிற
தவறு செய்த ராமு தன் பழியை என் மீது ________________பார்க்கிறான்
சுமத்த
சுமக்க
சுமத்தி
சுமந்து
வணிகன் தன் மனைவியுடன் ________________ வாழ்ந்து வந்தான்.
இன்பமாக
இன்பமான
இன்பமாகிய
இன்பம்
சாதுவன் தன் தவற்றை __________________ மீண்டும் பொருள் ஈட்டத் துணிந்தான்.
உணரும்
உணர்ந்து
உணர்கிற
உணர்ந்த
அம்மா தன் மகளுக்கு ___________________ பலகாரம் செய்தார்
விருப்பமாக
விரும்புகிற
விருப்பமான
விரும்பிய
ஏழையாய் இருந்த அவர் கடினமாக உழைத்து இப்போது __________________ வாழ்கிறார்.
செழிப்பு
செழிப்பான
செழித்த
செழிப்பாக
தனது பணப்பையை __________________ திருமதி ராணி காவலரிடம் புகார் செய்தார்.
இழந்த
இழப்பு
இழந்து
இழக்கிற
