Worksheetsபுதிர்ப் போட்டி படிநிலை 2
Total questions: 25
Worksheet time: 26mins
கீழே கொடுக்கப்பட்டுள்ள உலகநீதியின் பொருள் யாது?
'நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்'
தீயவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக் கூடாது
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது
கோபங்கொண்டோர் வாசல்வழியே போக வேண்டாம்
செய்யுளைப் பூர்த்தி செய்க.
' எழுத்தறிவித்தவன் ____________"
இறைவனாகும்
கடவுளாகும்
தெய்வமாகும்
துணைவனாகும்
வாக்கியத்தில் கோடிட்ட சொல் எதனைக் குறிக்கின்றது?
சங்கீதா கடைக்குச் சென்று புதிய காலணிகளை வாங்கினாள்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இணைமொழி யாது?
ஆடல் பாடல்
அருமை பெருமை
ஆடை அணிகலன்
பேரும் புகழும்
அக்கடையின் முதலாளி மிகவும் நல்லவர். இருப்பினும், சில வேளைகளில் கோபப்பட்டு வேலையாட்களிடம் ____________என எரிந்து விழுவார்
சிடுசிடு
கலகல
கிலுகிலு
நறநற
தன் நெருங்கிய நண்பன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த செய்தியைக் கேள்விப்பட்ட வாசு __________________________ வாடினான்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
அனலில் இட்ட மெழுகு போல
நகமும் சதையும் போல
1. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஈகை திறன்
உடலினை உறுதி செய்
ஏறுபோல் நட
எண்ணுவது உயர்வு
கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
"ஒரு குழந்தை சிறுவயதில் எப்படிச் செயல்படுகிறதோ, அதைக் கொண்டே பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்."
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
புத்திமான் பலவான்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
கீழ்க்காண்பவற்றுள் எது கல்வியின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறள்?
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடர்களையும் பொருளையும் சரியாகக் காட்டும் இணையைத் தெரிவு செய்க.
மனக்கோட்டை - உறுதி பூணுதல்
கடுக்காய் கொடுத்தல் - அவமானத்தை ஏற்படுத்துதல்
தொன்று தொட்டு - நெடுங்காலமாய்
அள்ளி விடுதல் - விடாப்பிடியாக நிற்றல்
உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
5
6
7
வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
6
7
8
9
கீழ்க்காணும் சொற்களில் மெல்லின மெய்யெழுத்தைக் கொண்டிராத சொல் எது?
பாராட்டு
பண்டிகை
செந்தாமரை
மாங்கனி
கீழ்க்காணும் வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியம் எது?
புனிதா மளிகைக் கடைக்குச் சென்றாள்.
தரண் படியிலிருந்து கீழே விழுந்தான்.
மீனவன் வலையை வீசி மீன் பிடித்தார்.
மேசை அந்தத் தச்சனால் செய்யப்பட்டது.
கொடுக்கப்பட்டுள்ள படத்திற்குப் பொருத்தமான மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.
குட்டி
கன்று
பிள்ளை
குஞ்சு
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தயவு செய்து அமைதியாக இருங்கள்.
பள்ளிப் பாடப் புத்தகங்களைக் கிழிக்காதே!
தமிழ்மொழி தொன்மையான மொழியாகும்.
நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்!
நாதன் கண்ணும் கருத்துமாகப் படித்தான். __________, அவனால் சிறந்த புள்ளிகளைப் பெற முடியவில்லை.
அதற்காக
எனவே
இருப்பினும்
ஆகையால்
தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அந்தப் பூங்காவனம்
அவைப் படகுகள்
அப்படிச் சொல்
இந்தக் குழந்தை
பிழையான வினைமரபு சொற்களைக் கொண்டிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அக்காள் மலரைக் கொய்தாள்.
காவியா கூடையை முடைந்தாள்.
வேடன் அம்பை எய்தான்.
குயவன் பானையைச் செய்தான்.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் நிகழ்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இன்று காலையில் என் பள்ளியில் போட்டி விளையாட்டு நடைபெறுகிறது.
நேற்று அமுதன் காய்கறிகளைப் பறித்து சந்தையில் விற்றான்.
எழிலன் தினமும் மாலையில் நண்பர்களுடன் பந்து விளையாடுவான்.
இன்று காலையில் பெய்த மழையால் என் காலணிகள் நனைந்தன.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' எனும் கவிதை வரிகளை இயற்றியவர் யார்?
தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய குறள்கள் மொத்தம் எத்தனை?
1110
1220
1330
1440
ஔவையாருக்கு நெல்லிக்கனியை அளித்து சிறப்பித்த சங்க கால மன்னன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
அதிவீரராம பாண்டியன்
மனுநீதிச் சோழன்
முத்தமிழ் எனப்படுவது யாது?
உயிர், மெய், உயிர்மெய்
செந்தமிழ், பைந்தமிழ், நற்றமிழ்
இயல், இசை, நாடகம்
வல்லினம், மெல்லினம், இடையினம்
தமிழின் முதல் இலக்கண நூல் எது?
நற்றமிழ்
தொல்காப்பியம்
திருக்குறள்
நீதிநெறி விளக்கம்
