Worksheets12 Botany Lesson 1 Part 1 Tamil
Total questions: 25
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
மூடுவிதைத் தாவரங்களில் கருவுறுதல் ............................ வகையைச் சார்ந்ததாகும்.
a)
சமமற்ற கேமீட்களின் இணைவு
b)
ஒத்த கேமீட்களின் இணைவு
c)
இரட்டைக் கருவுறுதல்
d)
கருவுறுதல்
2.
...........................................இவை இரண்டும் சூலகமுடிக்கும் மகரந்தத்துகள்களுக்கும் இடையே நிகழும் புரத வினைகளை அங்கீகரித்தோ , நிராகரித்தோ இணையொத்த மற்றும் இணை ஒவ்வாத மகரந்தத்துகள்களை முடிவு செய்கின்றன
a)
ஈர சூலகமுடி மற்றும் வறண்ட சூலகமுடி
b)
மகரந்தத்துகள் மற்றும் சூலக அலகு
c)
மகரந்தத்துகள் மற்றும் சூலகமுடி
d)
சூலகமுடி மற்றும் சூலக அலகு
3.
மகரந்தத்துகள் சூலக முடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் ............................................... என அழைக்கப்படுகிறது
a)
கேமீட் உருவாக்கம்
b)
முட்டைக் கருவுறுதல்
c)
மகரந்தத்துகள் - சூலக அலகு இடைவினை
d)
நுண்வித்துருவாக்கம்
4.
ஒரே சிற்றினத்தில் உள்ள தாவரங்களுக்கிடையே காணப்படும் பால்சார்ந்த ஒவ்வாமை.......................................ஒவ்வாமை எனப்படும்.
a)
ஆண்
b)
தன்
c)
பெண்
d)
ஆண் பெண்
5.
மகரந்தக்குழாய் சலாசா வழியாக சூலினுள் நுழைத்தலுக்கு .................... என்று பெயர்
a)
சூல்துளைவழி நுழைதல்
b)
சூலுறைவழி நுழைதல்
c)
சூல்தண்டு நுழைதல்
d)
சலாசாவழி நுழைதல்
6.
பூத்தளம் சதைப்பற்றுடன் உண்ணத் தகுந்த பகுதியாய் விதையுடைய கனியை சூழ்ந்துள்ளது
a)
சொலானம் மெலான்ஜினா
b)
பைசாலிஸ் மினிமா
c)
பைரஸ் மாலஸ்
d)
ரிசினஸ் கம்யூனிஸ்
7.
மகரந்தக்குழாய் சூலினுள் நுழைதல்: மகரந்தக் குழாய் ...................வகைகளில் சூலினுள் நுழைகிறது
a)
4
b)
5
c)
3
d)
2
8.
மகரந்தக் குழாய், சூலகம், சூல் மற்றும் கருப்பையை நோக்கி வளர்வதற்கு .....................................பொருட்களே காரணமாகும்
a)
இயற்பியல்நாட்ட
b)
நேர்புவி நாட்ட
c)
வேதிநாட்டப்
d)
எதிர்ப்பூவி நாட்ட
9.
சதைப்பற்றுடன் விதைத் துளை மூடி காணப்படும் தாவரம்
a)
பித்தசிலோபியம்
b)
ரிசினஸ் கம்யூனிஸ்
c)
பைரஸ் மாலஸ்
d)
பைசாலிஸ் மினிமா
10.
சூலகக்காம்பு சதைப்பற்றுடன் வண்ண மயமான விதை ஒட்டுத்தாளாக காணப்படும் தாவரம்
a)
பித்தசிலோபியம்
b)
ரிசினஸ் கம்யூனிஸ்
c)
பைசாலிஸ் மினிமா
d)
பைரஸ் மாலஸ்
11.
கருவுறுதலுக்குப் பின் நிகழும் மாற்றதில் சூல்திசு..................ஆக மாற்றம்மடைகிறது
a)
விதை வெளியுறை
b)
விதைத்துளை
c)
பெரிஸ்பெர்ம்
d)
விதை உள்ளுறை
12.
கருவூண் திசு கொண்டிருக்கும் விதையை தேர்ந்து எடு
a)
பட்டாணி
b)
நிலக்கடலை
c)
பீன்ஸ்
d)
கோதுமை
13.
லோடோய்சியாமால்டிவிக்கா விதையின் எடை
a)
60kg
b)
6kg
c)
600kg
d)
0.6kg
14.
அலிரோன் திசு .......................தானியத்தின் கருவூண் திசுக்களை சூழ்ந்து காணப்படுகிறது.
a)
பீன்ஸ்
b)
பார்லி
c)
குக்கர்பிட்கள்
d)
மா
15.
பூக்கும் தாவரங்களில் எந்நிலையிலும் ஆண், பெண் கேமீட்கள் இணைவின்றி நடைபெறும் இனப்பெருக்கம் .........................
a)
சமமற்ற கேமீட்களின் இணைவு
b)
முட்டைக் கருவுறுதல்
c)
கருவுறு இனப்பெருக்கம்
d)
கருவுறா இனப்பெருக்கம்
16.
PEN இன் விரிவாக்கம் தருக
a)
Primary Entry of Nucleus.
b)
Primary Endo nutritive tissue.
c)
Primary Endosperm Nucleus
d)
Post Entry of Nucleus
17.
கருவுறுதலுக்குப் பின் நிகழும் மாற்றதில் சினர்ஜிட் செல்கள்..................ஆக மாற்றம்மடைகிறது
a)
பெரிஸ்பெர்ம்
b)
விதைத்துளை
c)
விதை வெளியுறை
d)
அழிந்துவிடுகின்றன
18.
..................................... கருஅச்சின் பக்கவாட்டை நோக்கி அமைந்துள்ளது
a)
முளைவேர் உறை
b)
ஸ்குடெல்லம்
c)
முளைக்குருத்துஉறை
d)
முளைவேர்
19.
தவறானவற்றை தேர்ந்தெடு
a)
கருவூண்திசு கொண்ட விதை - மக்காச்சோளம்
b)
கருவூண்திசு அற்ற விதை குக்கர்பிட்கள்
c)
அலிரோன் திசுவில் ஸ்பீரோசோம்கள் காணப்படுகின்றன
d)
திறந்த விதை தாவரங்களில் கருவூண் திசு மூன்று வகை உள்ளது
20.
பிளவு பல்கரு நிலைக்கு எடுத்துக்காட்டு
a)
ஆர்கிட்கள்
b)
பலனோபோரா
c)
கேசுரைனா
d)
அரிஸ்டோலோக்கியா
21.
தவறான இணையை தெரிந்துஎடுகவும்
a)
ஓடு தண்டு - சென்டெல்லா ஏசியாட்டிகா
b)
தரைகீழ் உந்து தண்டு - கிரைசான்திமம்
c)
வேர்விடும் ஓடுதண்டு - ஃபிரகேரியா
d)
நீர் ஓடு தண்டு - பிரையோஃபில்லம்
22.
T வடிவ கீறல் ............................. ஒட்டுமுறையில் பயன்படுத்தப்படுகிறது
a)
மொட்டு ஒட்டுதல்
b)
அணுகு ஒட்டுதல்
c)
நா ஒட்டுதல்
d)
நுனி ஒட்டுதல்
23.
இலைவளர் மொட்டுகள் -----------------------இல் காணப்படுகின்றன
a)
ஐக்கார்னியா
b)
கிரைசான்திமம்
c)
ஃபிரகேரியா
d)
சில்லா
24.
சிறு குமிழ் மொட்டுக்களுக்கு எடுத்துக்காட்டு
a)
அல்லியம் சீப்பா
b)
டயாஸ்காரியா
c)
கிரைசான்திமம்
d)
அமோர்போபாலஸ்
25.
சரியான இணையை தெரிந்துஎடுகவும்
a)
மட்டநிலத் தண்டு - ஜின்ஜிஃபெர்
b)
தரையடிக்கிழங்கு - சொலானம்
c)
கிழங்கு - லில்லியம்
d)
லில்லியம் - கிழங்கு
100 %
