wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th Ln 4. மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்கோட்டுப்பாதை XY இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது ?

a)

எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திரும்புகிறது

b)

மின்னோட்டம் தூண்டப்படாது

c)

abcd

d)

adcb

2.

படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு மெல்லிய அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது. அதன் வேகம் v உள்ளபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு _______

a)

சுழி

b)

Bvπr²/2 மற்றும் P உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

c)

πrBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

d)

2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

3.

t என்ற கணத்தில் ஒரு சுருளோடு தொடர்புடைய காந்த பாயம்

Φ = 10t² - 50t + 250 என உள்ளது. t = 3 s இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது _______

a)

- 190 V

b)

- 10 V

c)

10 V

d)

190 V

4.

மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______

a)

0.2 H

b)

0.4 H

c)

0.8 H

d)

0.1 H

5.

படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது _______

a)
b)
c)
d)
6.

4 cm² குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm² குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு 1m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது ?

a)

7.54 μΗ

b)

8.54 μΗ

c)

9.54 μΗ

d)

10.54 μΗ

7.

ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6 Α எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது _______

a)

2 Α

b)

18 Α

c)

12 Α

d)

1 Α

8.

ஒரு இறக்கு மின்மாற்றி, மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன் _______

a)

1.2

b)

0.83

c)

0.12

d)

0.9

9.

ஒரு மின்சுற்றில் R,L,C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருத்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி _______

a)

1/2

b)

1/√2

c)

1

d)

√3/2

10.

ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு _______

a)

π/4

b)

π/2

c)

π/6

d)

zero

11.

ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு _______

a)

600 V

b)

4000 V

c)

400 V

d)

1 V

12.

ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை

ν = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு _______

a)

0.76 W

b)

0.89 W

c)

0.46 W

d)

0.67 W

13.

ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே

i = (1/√2) sin (100πt) A மற்றும்

v = (1/√2) sin (100πt + (π/3)) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் _______

a)

1/4

b)

√3/4

c)

1/2

d)

1/8

14.

ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு _______

a)

Q/2

b)

Q/√3

c)

Q/√2

d)

Q

15.

(20/π²) Η மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது _______

a)

50 μF

b)

0.5 μF

c)

500 μF

d)

5 μF