wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைய வழித்தேர்வு-1

Total questions: 30

Worksheet time: 31mins

Name
Class
Date
1.

பதினெண்மேல்கணக்கு நூல்கள் _________ என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.

a)

பத்துப்பாட்டு + நீதி நூல்

b)

பத்துப்பாட்டு + எட்டுத்தொகை

c)

எட்டுத்தொகை + திருக்குறள்

d)

பத்துப்பாட்டு + நாலடியார்

2.

மக்கள் வாழும் நிலப் பகுதியைக் குறிக்கும் சொல் __________

a)

கடல்

b)

வைப்பு

c)

பறவை

d)

நீர்

3.

தமிழ் எழுத்துக்களில் இப்போது உள்ள நிலையான வடிவத்தைப் பெற __________ காரணமாக அமைந்தது.

a)

ஓவியக்கலை

b)

இசைக்கலை

c)

அச்சுக்கலை

d)

நுண்கலை

4.

தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ___________.

a)

பாரதிதாசன்

b)

தந்தை பெரியார்

c)

பெருஞ்சித்திரனார்

d)

வ உ சிதம்பரனார்

5.

நான் அடுத்த ஆண்டு வருவேன் அதுவரை பொறுத்திரு என்று தம்பிக்கு அண்ணன் எழுதினால் - இது எவ்வகை வாக்கியம்

a)

நேர்கூற்று வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

அயற்கூற்று வாக்கியம்

d)

விழைவு வாக்கியம்

6.

ஆயுத எழுத்து பிறக்கும் இடம் __________

a)

மார்பு

b)

கழுத்து

c)

தலை

d)

மூக்கு

7.

பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

a)

பயிலுதல்

b)

பார்த்தல்

c)

கேட்டல்

d)

பாடுதல்

8.

பொருத்துக:

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை

2. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல - எளிதில் மனதில் பதிதல்

3. பசுமரத்து ஆணி போல - எதிர்பாராத நிகழ்வு

4. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல - தற்செயல் நிகழ்வு

a)

1 4 2 3

b)

4 3 1 2

c)

2 1 4 3

d)

3 1 4 2

9.

செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________

a)

கடல்

b)

ஓடை

c)

குளம்

d)

கிணறு

10.

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் __________ மும் ஓட்டிவிடும்.

a)

பாலனை

b)

காலனை

c)

ஆற்றலை

d)

நிலத்தை

11.

"கட ல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" இந்த குரல் இடம்பெறும் அதிகாரம் எது?

a)

கொடை

b)

கல்வி

c)

இடனறிதல்

d)

வீரம்

12.

வானில் கரு _________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

a)

முகில்

b)

துகில்

c)

வெயில்

d)

கயல்

13.

செவ்விந்தியர்கள் நிலத்தை __________ மதிக்கின்றனர்.

a)

தாயாக

b)

தந்தையாக

c)

தெய்வமாக

d)

தூய்மையாக

14.

பால் + ஊறும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

a)

பால் ஊறும்

b)

பால் கூறும்

c)

பாலூறும்

d)

பாஊறும்

15.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்றை தேர்வு செய்க.

a)

படித்தான்

b)

நடக்கின்றான்

c)

நடப்பான்

d)

ஓடுவான்

16.

ஊக்கம் என்பதன் பொருள்

a)

தளரா முயற்சி

b)

சிந்தனை

c)

உழைப்பு

d)

முயற்சி

17.

ஐயம் என்பதன் எதிர்ச்சொல் _________

a)

சந்தேகம்

b)

விளக்கம்

c)

தெளிவு

d)

அறிதல்

18.

பொருந்தாதவற்றை தேர்ந்தெடுக.

அ) 1.தென்றல் 2. காற்று 3.புயல் 4.சுனாமி

ஆ) 1. பௌர்ணமி 2. கதிரவன் 3.பிறைநிலா 4.நிலவு

a)

அ) 4

ஆ) 2

b)

அ) 2

ஆ) 4

c)

அ) 3

ஆ) 4

d)

அ) 1

ஆ) 3

19.

"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே" இந்த பாடல் அடி இடம் பெற்ற செய்யுள் எது?

a)

நோயும் மருந்தும்

b)

ஓடை

c)

காடு

d)

தமிழ் வாழ்த்து

20.

விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று _________

a)

தன்மை இடத்தில் வராது

b)

முன்னிலை இடத்தில் வராது

c)

தன்மை இடத்தில் வரும்

d)

முன்னிலை இடத்தில் வரும்

21.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _________ ஆகும்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

யாப்பருங்கலக்காரிகை

d)

அகத்தியம்

22.

பிரித்து எழுதுக: இசைக்கலை

a)

இசை + கலை

b)

இதை + கலை

c)

இவை + கலை

d)

இவள் + கலை

23.

அரிச்சலூர்க் கல்வெட்டில் எழுதப்பட்டவை ________

a)

தமிழ் எழுத்தும் ஓவிய எழுத்தும்

b)

தமிழ் எழுத்தும் கண்ணெத்தும்

c)

தமிழ் எழுத்தும் வட்டெழுத்து

d)

தமிழ் எழுத்தும் கிரந்த எழுத்தும்

24.

நிலம் பொது என்னும் உரைநடை பகுதி பக்தவத்சல பாரதி எழுதிய _________ என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

a)

பழங்குடிகள்

b)

காட்டு வாழ் மக்கள்

c)

தமிழகப் பழங்குடிகள்

d)

பழங்குடிகள்

25.

இன்றைய சூழலில் நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரை பருக முடியாத நிலை உள்ளது. நீர்நிலைகள் அழிந்து வருவதால் தான் இவை போன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த உரை பற்றிய கருத்து யாது?

a)

காடு

b)

இயற்கை

c)

மழை

d)

மலை

26.

ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவக சிந்தாமணி

d)

வளையாபதி

27.

குறிஞ்சி நிலத்தின் தெய்வம் எது?

a)

வருணன்

b)

இந்திரன்

c)

முருகன்

d)

திருமால்

28.

பறவைகள் பறந்து _______ செல்கின்றன.

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

d)

நீரில்

29.

இதழ்களைக் குவித்துப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் _________

a)

இ ஈ

b)

ஆ அ

c)

உ ஊ

d)

எ ஏ

30.

நாணம் என்பதன் பொருள் யாது?

a)

படித்தல்

b)

வெட்கம்

c)

வேதனை

d)

அவமானம்