wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Python - 7.பைத்தான் செயற்கூறுகள்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

I) நெறிமுறையை மீண்டும் எழுதுவதைத் தவிர்த்துக் குறிமுறையின் மறுபயனாக்கத்திற்கு செயற்கூறு உதவுகிறது.

II) செயற்கூறு நமது பயன்பாட்டிற்குச் சிறந்தக் கூறுநிலையை வழங்குகிறது.

a)

I சரி மற்றும் II தவறு

b)

இரண்டும் சரி

c)

I தவறு மற்றும் II சரி

d)

இரண்டும் தவறு

2.
ஒரு குறிப்பிட்ட செயலினைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
மடக்கு
b)
தொகுதி
c)
செயற்கூறு
d)
கிளைபிரிப்பு
3.
ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளையுடைய குறிமுறையைக் குழுவாக ஒன்றிணைத்து அதனை நிறைவேற்றும் போது ஒரு பெரிய வரிசையின் கூற்றுகளாக எடுத்துக் கொள்வது என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
மடக்கு
b)
தொகுதி
c)
செயற்கூறு
d)
கிளைபிரிப்பு
4.
ஒரு தொகுதி மற்றொரு தொகுதியைக் கொண்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
இணைக்கப்பட்டத் தொகுதி
b)
கண்டெய்னர் தொகுதி
c)
தொடர் தொகுதி
d)
பின்னலானத் தொகுதி
5.
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
a)
செயற்கூறுகள் ஒரு நிரலைச் சிறு தொகுதியாகப் பிரிக்க உதவுகின்றன.
b)
செயற்கூறுகள் குறிமுறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகின்றன.
c)
செயற்கூற்றின் செயல்பாடுகளை மாற்றம் செய்வது எளிதாகிறது.
d)
செயற்கூறுகள் தரவுகளுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன.
6.
return கூற்றில் எந்த அளபுருவும் இல்லை எனில் வெளியீட்டின் இறுதிக் கூற்றாக எது வெளியிடப்படும்?
a)
None
b)
Null
c)
Nothing
d)
No value
7.
செயற்கூறு வரையறையில் பயன்படுத்தப்படும் மாறிகளைக் குறிப்பது எது?
a)
அளபுருக்கள்
b)
செயலுருபுகள்
c)
உள்ளமை மாறிகள்
d)
நிலை உருக்கள்
8.
செயற்கூறின் அளபுருக்களுக்கு அனுப்பப்படும் மதிப்புகளைக் குறிப்பது எது?
a)
அளபுருக்கள்
b)
செயலுருபுகள்
c)
உள்ளமை மாறிகள்
d)
நிலை உருக்கள்
9.
செயற்கூறினை அழைக்கப் பயன்படும் செயலுருபுகள் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
10.
பின்வரும் செயலுருபு வகைகளில் எது அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கிறது? மற்றும் முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்க வகை செய்கிறது?
a)
தேவைப்படும் செயலுருபுகள்
b)
சிறப்புச் சொல் செயலுருபுகள்
c)
தானமைவு செயலுருபுகள்
d)
மாறும் – நீள செயலுருபுகள்
11.
எவ்வகை செயலுருபுகள் செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில் தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும்?
a)
தேவைப்படும் செயலுருபுகள்
b)
சிறப்புச் சொல் செயலுருபுகள்
c)
தானமைவு செயலுருபுகள்
d)
மாறும் – நீள செயலுருபுகள்
12.
எவ்வகை செயலுருபுகள் செயற்கூறு வரையறையில் குறிப்பிடப்படுவதில்லை?
a)
தேவைப்படும் செயலுருபுகள்
b)
சிறப்புச் சொல் செயலுருபுகள்
c)
தானமைவு செயலுருபுகள்
d)
மாறும் – நீள செயலுருபுகள்
13.
மாறும் – நீள செயலுருபுகளைக் குறிப்பிடுவதற்கு எந்தக் குறியீடு பயன்படுகிறது?
a)
*
b)
@
c)
$
d)
#
14.
மாறும் – நீள செயலுருபுகளில், செயலுருபுகளை எத்தனை வழிகளில் அனுப்பலாம்?
a)
2
b)
3
c)
4
d)
5
15.
சிறப்புச் சொல்களற்ற மாறி செயலுருபுகளை எவ்வாறு அழைக்கிறோம்?
a)
Lists
b)
Tuples
c)
Dictionary
d)
Pairs
16.
பின்வரும் எந்த செயலுருபுகளை Tuples என்று அழைக்கிறோம்?
a)
தேவைப்படும் செயலுருபுகள்
b)
தானமைவு செயலுருபுகள்
c)
சிறப்புச் சொல் செயலுருபுகள்
d)
சிறப்புச் சொற்களற்ற மாறி செயலுருபுகள்
17.
பைத்தானில் print ( ) செயற்கூறு என்பது எவ்வகை செயலுருபுகளுக்கு எடுத்துக்காட்டாகும்?
a)
தேவைப்படும் செயலுருபுகள்
b)
தானமைவு செயலுருபுகள்
c)
சிறப்புச் சொல் செயலுருபுகள்
d)
மாறும் – நீள செயலுருபுகள்
18.
பைத்தானில், பின்வரும் எந்தச் செயற்கூறு மாறும் – நீள செயலுருபுகளுக்கு எடுத்துக்காட்டாகும்?
a)
print ( )
b)
chr ( )
c)
ord ( )
d)
format ( )
19.
பைத்தானில், அனாமத்து செயற்கூறுகள் எந்தச் சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது?
a)
def
b)
define
c)
lambda
d)
pass
20.
பின்வரும் எந்தச் செயற்கூறுடன் சேர்த்து லாம்டா செயற்கூறுகளைப் பயன்படுத்தலாம்?
a)
filter ( )
b)
map ( )
c)
reduce ( )
d)
இவை அனைத்தும்
21.
எந்தச் செயற்கூற்றால் முழுதளாவிய மாறிகள் மற்றும் அளபுருப் பட்டியலில் உள்ள மாறிகளை மட்டுமே அணுக முடியும்?
a)
லாம்டா செயற்கூறு
b)
தற்சுழற்சி செயற்கூறு
c)
உள்ளிணைந்த செயற்கூறு
d)
பயனர் வரையறுக்கும் செயற்கூறு
22.
பெயரில்லாமல் வரையறுக்கப்படும் செயற்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
அனாமத்து செயற்கூறுகள்
b)
லாம்டா செயற்கூறுகள்
c)
அனாமிகா செயற்கூறுகள்
d)
(a) மற்றும் (b)
23.
செயற்கூறினுள் உள்ள கூற்றில் கோவைகள் இல்லாமலோ (அ) return கூற்று இல்லாமலோ இருந்தால் செயற்கூறு எந்தப் பொருளைத் திருப்பி அனுப்பும்?
a)
None
b)
Null
c)
Nothing
d)
No value
24.
பின்வருவனவற்றுள் எது மாறியை நிரலில் அணுகக்கூடிய பகுதியைக் குறிப்பதாகும் (அ) எந்தப் பகுதியில் மாறியைப் பயன்படுத்துகிறோமோ அதைக் குறிக்கிறது?
a)
அணுகியல்பு வரையறுப்பி
b)
காண்புநிலைப் பாங்கு
c)
சேமிப்பு இனக்குழு
d)
மாறிகளின் வரையெல்லை
25.
பைத்தானில் எத்தனை வகையான வரையெல்லைகள் உள்ளன?
a)
2
b)
3
c)
4
d)
5
26.
ஒரு செயற்கூறின் உடற்பகுதியின் உள்ளே அறிவிக்கப்பட்டுள்ள மாறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
செயற்கூறு மாறி
b)
முழுதளாவிய மாறி
c)
உள்ளமை மாறி
d)
தொகுதி மாறி
27.
எந்த வரையெல்லை மாறிகளை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்?
a)
உள்ளமை
b)
செயற்கூறு
c)
குளோபல்
d)
தொகுதி
28.
எந்த வரையெல்லை உடைய மாறியை நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுக முடியும்?
a)
உள்ளமை
b)
செயற்கூறு
c)
குளோபல்
d)
தொகுதி
29.
செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும்போது அது தானமைவாக எந்த வரையெல்லையைக் கொண்டிருக்கும்?
a)
உள்ளமை
b)
செயற்கூறு
c)
குளோபல்
d)
தொகுதி
30.
செயற்கூறினுள் முழுதளாவிய மாறியைப் படிக்க மற்றும் எழுத எந்தச் சிறப்புச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
a)
local
b)
global
c)
refer
d)
print
31.
எந்தச் சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தாமல் குளோபல் மாறியை செயற்கூறின் உள்ளே மாற்றம் செய்ய முடியாது?
a)
local
b)
global
c)
refer
d)
print
32.

x=-23.5

print(abs(x))

மேற்காண் நிரலின் வெளியீடு யாது?

a)

23.5

b)

-23.5

c)

-23

d)

-24

33.
பின்வருவனவற்றுள் எது கொடுக்கப்பட்ட யுனிக்கோடு எழுத்திற்கு ASCII மதிப்பைத் திருப்பி அனுப்பும்?
a)
abs ( )
b)
ord ( )
c)
chr ( )
d)
type ( )
34.
பின்வருவனவற்றுள் எது கொடுக்கப்பட்ட ASCII மதிப்பிற்கு யுனிக்கோடு எழுத்தைத் திருப்பி அனுப்பும்?
a)
abs ( )
b)
ord ( )
c)
chr ( )
d)
type ( )
35.
பின்வருவனவற்றுள் எது கொடுக்கப்பட்ட முழு எண்ணிற்கு நிகரான இரும எண்ணை, ‘0b’ ஐ முன்னொட்டாக் கொண்டுத் திருப்பி அனுப்பும்?
a)
abs ( )
b)
ord ( )
c)
type ( )
d)
bin ( )
36.
பின்வருவனவற்றுள் எது கொடுக்கப்பட்ட பொருளின் நினைவக முகவரியைத் திருப்பி அனுப்பும்?
a)
abs ( )
b)
ord ( )
c)
type ( )
d)
id ( )
37.
பின்வரும் செயற்கூறுகளுள் எது list-ஐ கொண்டு வேலை செய்யும்?
a)
min ( )
b)
max ( )
c)
sum ( )
d)
இவை அனைத்தும்
38.
பைத்தானில் format ( ) செயற்கூறு, வெளியீட்டை, நிலையானப் புள்ளி எண் வடிவில் கொடுக்கும் போது, தானமைவாக எத்தனைத் தசம புள்ளிகள் துல்லியமாகத் தரும்?
a)
4
b)
5
c)
6
d)
7
39.
பின்வருவனவற்றுள் format_spec அளபுருவின் எந்த மதிப்பு வெளியீட்டைஎண்ணிலை வடிவில் கொடுக்கும்?
a)
‘b’
b)
‘o’
c)
‘f’
d)
‘x’
40.
பின்வரும் செயற்கூறுகளுள் எது கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அருகே உள்ள முழு எண்ணாக மாற்றித் திருப்பி அனுப்பும்?
a)
round( )
b)
ceil( )
c)
floor( )
d)
ord( )
41.
பின்வரும் செயற்கூறுகளுள் எது கொடுக்கப்பட்ட எண்ணிற்கு ab அடுக்குப் பெருக்கத்தைத் திருப்பி அனுப்பும்?
a)
power( )
b)
pow( )
c)
round( )
d)
ceil( )
42.
பின்வரும் செயற்கூறுகளுள் எது அதன் அளபுரு மதிப்பை விடக் குறைவான (அ) அதற்கு நிகரான பெரிய முழு எண்ணைத் திருப்பி அனுப்பும்?
a)
round( )
b)
ceil( )
c)
floor( )
d)
pow( )
43.
பின்வரும் செயற்கூறுகளுள் எது அதன் அளபுரு மதிப்பை விடக் பெரிய (அ) அதற்கு நிகரானச் சிறிய முழு எண்ணைத் திருப்பி அனுப்பும்?
a)
round( )
b)
ceil( )
c)
floor( )
d)
pow( )
44.
பின்வரும் செயற்கூறுகளுள் எது அதன் அளபுரு மதிப்பின் வர்க்க மூலத்தை திருப்பி அனுப்பும்?
a)
sqr( )
b)
square( )
c)
sqr_root( )
d)
sqrt( )
45.
ஒரு செயற்கூறு திருப்பி அனுப்பும் மதிப்பு மற்றொரு செயற்கூறிற்கு செயலுருபாக, பின்னலான அமைப்பில் பயனபடுத்தினால் அதந்கு என்ன பெயர்?
a)
பின்னலான செயற்கூறு
b)
பின்னலான return
c)
தொகுப்பு
d)
தற்சுழற்சி
46.
தற்சுழற்சி செயற்கூறில் கொடுக்கப்படும் நிபந்தனை எவ்வாறு அழைக்கப்படும்?
a)
அடிப்படை நிபந்தனை
b)
தற்சுழற்சி அழைப்பு
c)
தற்சுழற்சி நிபந்தனை
d)
இறுதி நிபந்தனை
47.
பைத்தானில் தற்சுழற்சி செயற்கூறுகள் தானமைவாக எத்தனை அழைப்புகளுக்குப் பிறகு தன்னைத்தானே அழைப்பதை நிறுத்திவிடும்?
a)
500 அழைப்புகள்
b)
1000 அழைப்புகள்
c)
10000 அழைப்புகள்
d)
250 அழைப்புகள்
48.
பைத்தான் தற்சுழற்சி செயற்கூறு அழைப்பின் வரம்புகளை எதனைப் பயனபடுத்தி மாற்றியமைக்க அனுமதிக்கிறது?
a)
sys.setrecursionlimit(limit_value)
b)
sys.changetrecursionlilimit(limit_value)
c)
sys.setmaxrecursion(limit_value)
d)
sys.changemaxrecursion(limit_value)
49.
பொருத்தமற்றதைத் தேர்ந்தெடு.
a)
floor( )
b)
ceil( )
c)
round( )
d)
sqrt( )
50.
பைத்தானில் அனைத்து கணித செயற்கூறுகளுக்கும் தேவையான கூறு எது?
a)
sys கூறு
b)
math கூறு
c)
functools கூறு
d)
pydoc கூறு