WorksheetsGRADE-7 HALF YEARLY
Total questions: 16
Worksheet time: 8mins
அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [10x1=10]
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
அ] பாலாறு
ஆ] பத்து
இ] காது
தற்போது உரைநடை வழக்கில் இல்லாதது
அ] குற்றியலுகரம்
ஆ] குற்றியலிகரம்
இ] முற்றியலுகரம்
குற்றியலுகரத்தின் வகைகள்
அ] எட்டு
ஆ] ஆறு
இ] ஏழு
ஐகாரக் குறுக்கம் சொல்லின் முதலில் வரும்போது ஒலிக்கும் மாத்திரை அளவு
அ] ஒன்று
ஆ] ஒன்றரை
இ] இரண்டு
இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் எது?
அ] இலக்கணமுடையது
ஆ] இலக்கணப்போலி
இ] குழூஉக்குறி
பின்வருவனவற்றுள் தகுதிவழக்கு எது?
அ] மரூஉ
ஆ] இலக்கணப்போலி
இ] இடக்கரடக்கல்
கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்குவதாகவும், இலக்கியங்களில் மட்டுமே அமையும் சொற்கள்.
அ] திசைச்சொல்
ஆ] திரிசொல்
இ] வடசொல்
வழக்கின் வகைகள்
அ] மூன்று
ஆ] இரண்டு
இ] ஆறு
தற்சமம், தற்பவம் என வகைப்படும் சொற்கள்.
அ] இயற்சொல்
ஆ] திரிசொல்
இ] வடசொல்
இலக்கிய வகைச்சொல் எது?
அ] இடைச்சொல்
ஆ] திரிசொல்
இ] உரிச்சொல்
ஆ] கோடிட்ட இடங்களை நிரப்புக. [5x1=5]
குற்றியலுகரம் ____________ எழுத்து வகையைச் சார்ந்தது.
அ] உயிர்
ஆ] சார்பு
இ] மெய்
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம் ___________
அ] ஒளகாரக் குறுக்கம்
ஆ] ஐகாரக் குறுக்கம்
இ] மகரக் குறுக்கம்
பொன்னைப் “ பறி ” என்று பொற்கொல்லர் பயன்படுத்துவது ____________ ஆகும்.
அ] மங்கலம்
ஆ] இடக்கரடக்கல்
இ] குழூஉக்குறி
கமலம் என்பது _____________ சொல் ஆகும்.
அ] வடசொல்
ஆ] திசைச்சொல்
இ] இயற்சொல்
அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் _____________ ஆகும்.
அ] திரிசொல்
ஆ] இயற்சொல்
இ] வடசொல்
இ]பொருத்துக. [5x1=5]
சொல் - பொருள்
1. அழுவம் - யானை
2. வங்கூழ் - மேகம்
3. வாரணம் - மிகுந்த சுவை
4. அதிமதுரம் - கடல்
5. முகில் - காற்று
அ] 5, 1, 3, 4, 2
ஆ] 4, 5, 1, 3, 2
இ] 3, 5, 1, 2, 4
