wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பண்டைய நாகரிகங்கள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை __________ என்கிறோம்.

a)

லோகோகிராபி

b)

பிக்டோகிராபி

c)

ஐடியாகிராபி

d)

ஸ்ட்ராட்டிகிராபி

2.

எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை__________ .

a)

சர்க்கோபகஸ்

b)

ஹைக்சோஸ்

c)

மம்மியாக்கம்

d)

பல கடவுளர்களை வணங்குதல்

3.

இப்படம் எந்த நாகரிகத்துடன் தொடர்புடையது

a)

சிந்து நாகரிகம்

b)

சீன நாகரிகம்

c)

மெசபடோமியா நாகரீகம்

d)

எகிப்து நாகரிகம்

4.

சுமேரியர்களின் எழுத்துமுறை ___________ ஆகும்.

a)

பிக்டோகிராபி

b)

ஹைக்ரோகிளிபிக்

c)

கியூனிபார்ம்

d)

சோனோகிராம்

5.

ஹரப்பா மக்கள்____________________ பற்றி அறிந்திருக்கவில்லை.

a)

தங்கம் மற்றும் யானை

b)

குதிரை மற்றும் இரும்பு

c)

ஆடு மற்றும் வெள்ளி

d)

எருது மற்றும் பிளாட்டினம்

6.

எகிப்து நைல் நதியின் நன்கொடை என்று குறிப்பிட்டவர்.

a)

ஹெரோடோடஸ்

b)

கன்ஃபூசியஸ்

c)

லாவோட்சு

d)

சாக்ரடீஸ்

7.

சிந்து சமவெளி மக்கள் "லாஸ்ட் வேக்ஸ்" முறையை அறிந்திருந்தார்கள் என்பதை தெரிவிக்கும் வெண்கலச்சிலை __________ ஆகும்.

a)

ஜாடி

b)

மதகுரு அல்லது அரசன்

c)

நடனமாடும் பெண்

d)

பறவை

8.

i. மெசபடோமியாவின் மிக பழமையான நாகரீகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.

ii. சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.

iii. யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

iv. பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்

a)

i மட்டும் சரி

b)

i ,ii சரி

c)

iii சரி

d)

iv சரி

9.

பின்வருவனவற்றுள் மெசபடோமியா அவை சேர்ந்த நான்கு நாகரீகங்களின் சரியான காலவரிசை எது

a)

சுமேரியர்கள் - அஸிரியர்கள் - அக்காடியர்கள் - பாபிலோனியர்கள்

b)

பாபிலோனியர்கள் - சுமேரியர்கள் - அஸிரியர்கள் - அக்காடியர்கள்

c)

சுமேரியர்கள் - அக்காடியர்கள் - பாபிலோனியர்கள் - அஸிரியர்கள்

d)

பாபிலோனியர்கள் - சுமேரியர்கள் - அக்காடியர்கள் - அஸிரியர்கள்

10.

நைல் நதியின் நன்கொடை என்று குறிப்பிடப்படும் நாடு.

a)

சூடான்

b)

இந்தியா

c)

எகிப்து

d)

பாலஸ்தீனம்

11.

படத்தோடு தொடர்புடைய நாகரிகம்.

a)

சிந்து நாகரிகம்

b)

எகிப்து நாகரிகம்

c)

மெசபடோமியா நாகரீகம்

d)

சீன நாகரிகம்

12.

i. யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

ii. வு -டி சீன பெருஞ்சுவரை கட்டினார்.

iii. சீனர்கள் வெடிமருந்தை கண்டுபிடித்தனர்.

iv. தாவோமிசத்தை நிறுவியவர் மீனியஸ் என்று

சீன மரபு கூறுகிறது

a)

i சரி

b)

ii சரி

c)

iii சரி

d)

iii மற்றும் iv சரி

13.

சிந்து நாகரீகத்துடன் தொடர்பற்றது.

a)
b)
c)
d)
14.

சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

a)

ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது

b)

க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமேஷ் காவியத்துடன் தொடர்புடையவை

c)

சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும்,செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

d)

மெசபடோமியார்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.

15.

சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

a)

பழங்கால எகிப்தில் அமோன் - கடவுளின் அரசனாக கருதப்பட்டார்

b)

அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.

c)

பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச் சின்னமாகும்.

d)

பானை வனைவதற்கான சக்கரத்தை கண்டுபிடித்த பெருமை எகிப்திர்களை சாரும்.

16.

பொருந்தாதது

a)
b)
c)
d)
17.

வரைப்படத்தில் இந்திய எல்லையில் அமைந்துள்ள நகரம் .

a)

ஹரப்பா

b)

ராகி காரி

c)

மொஹஞ்சதாரோ

d)

கண்வேரிவாலா

18.

படத்தோடு தொடர்புடைய நாகரிகம்.

a)

சீன நாகரிகம்

b)

மெசபடோமிய நாகரிகம்

c)

எகிப்து நாகரிகம்

d)

சிந்துசமவெளி நாகரிகம்

19.

தவறான இணையை கண்டிபிடி

a)

எகிப்து நாகரீகம் - நைல் நதி

b)

மெசபடோமிய நாகரீகம் - யூப்ரடிஸ் டைகிரீஸ் 

c)

சீனா நாகரீகம் - ஹோவாங்ஹோ நதி

d)

சிந்துவெளி நாகரீகம் - கங்கை நதி

20.

கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.

காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள்

பற்றி கூறுகின்றது.

a)

கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக் குகிறது.

b)

கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

c)

கூற்று சரி; காரணம் தவறு.

d)

கூற்றும் காரணமும் தவறானவை .