wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1 (இலக்கண இலக்கிய பயிற்சி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற நிமலன் பிழையில்லாமலும் தங்குதடையின்றியும் ____________வென கவிதையை ஒப்புவித்து முதல் பரிசை வென்றான்.

a)

கட கட

b)

கிடு கிடு

c)

வெட வெட

d)

நச நச

2.

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் ____________வென ஆட்டம் கண்டன.

a)

நச நச

b)

கட கட

c)

கிடு கிடு

d)

வெட வெட

3.

இரவில் வெள்ளை நிறச் சேலையில் வந்த பாட்டியைப் பார்த்து ஆவியென நினைத்து ____________வென ஆடிய மாலனைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

a)

நச நச

b)

கட கட

c)

வெட வெட

d)

கிடு கிடு

4.

திருவிழா முடிந்து மஞ்சள் நீராடியதால் ஆலய தரை முழுவதும் ___________வென்று இருந்தது.

a)

வெட வெட

b)

நச நச

c)

கட கட

5.

படங்களைக் கொண்டு சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

பசுமரத்தாணி போல

b)

தாயைக் கண்ட சேயைப் போல

c)

மணியும் ஒலியும் போல

6.

படங்களைக் கூர்ந்து கவனித்துச் சரியான உவமைத்தொடரைத் தேர்வு செய்க.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

இலைமறை காய் போல

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

d)

பசுமரத்தாணி போல

7.

__________________________________ இருந்த முகுந்தனின் திறமை பாடல் திறன் போட்டிக்குப் பின்னர் அனைவராலும் அறியப்பட்டது.

a)

இலைமறை காய் போல

b)

தாயைக் கண்ட சேயைப் போல

c)

பசுமரத்தாணி போல

8.

கீழ்க்காணும் வாக்கியங்களில் குன்றியவினை வாக்கியத்தை அடையாளம் காண்க.

a)

அப்பா காய்ந்த மரக்கிளைகளை வெட்டினார்.

b)

பறவைகள் இரையைக் கொத்தித் தின்றன.

c)

சிறுமி பசியால் அழுகிறது.

d)

முவணன் தன் நண்பனை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.

9.

கீழே கொடுக்கப்பட்டுனவற்றுள் அகச்சுட்டைத் தேர்வு செய்க.

a)

அக்குதிரை

b)

அவன்

c)

இப்புத்தகம்

d)

இப்பையன்

10.

கீழ்க்காணும் சொற்களில் சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

இத்துணைச் சிறிய

b)

அவனோடுச் செல்

c)

அரை பகுதி

d)

எதுச் சரி