Font size
Worksheetsஇரட்டைக்கிளவிகள் (படிவம் 1-3)
Total questions: 20
Worksheet time: 3600secs
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
திருக்குறள் மனனப்போட்டியில் கலந்து கொண்ட தமிழ்க்கதிர் தான் மனனம் செய்த குறள்கள் அனைத்தையும் ______ வென ஒப்புவித்தான்.
கிடுகிடு
விறுவிறு
சடசட
கடகட
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வகுப்பில் எந்நேரமும் மற்ற மாணவர்களோடு _________ எனப் பேசிக் கொண்டே இருந்த அமுதன் கட்டொழுங்கு ஆசிரியரிடம் அனுப்பப்பட்டான்.
கடகட
வெடவெட
பரபர
தொணதொண
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
பகாங் மாநிலத்தின் பிரசித்திபெற்ற கோமரன் மலையில் மறக்க முடியாத ஒன்றென்றால் அங்கு வீசும் _______ காற்றுதான்.
தளதள
சிலுசிலு
வெடவெட
கடகட
"தளதள" எனும் இரட்டைக்கிளவியின் பொருளைத் தேர்ந்தெடுக.
குளிர்ச்சித் தன்மை
அவசர அவசரமாகச் செய்தல்
பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை
எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
துருதுரு
தளதள
பரபர
சிலுசிலு
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
துருதுரு
தளதள
பரபர
சிலுசிலு
வீட்டிற்கு விருந்தினர் வருவதை முன்னிட்டுக் கமலா வேலைகளைப் _______ வெனச் செய்தாள்.
பரபர
தளதள
துருதுரு
சிலுசிலு
_________________ வென இருந்த அப்பையன் அனைவரது கவனத்தையும் கவர்ந்தான்.
பரபர
சிலுசிலு
தளதள
துருதுரு
____________ வென வீசிய மலைக்காற்று மனத்திற்கு இதமாக இருந்தது.
பரபர
தளதள
சிலுசிலு
துருதுரு
சரியான 2 இணைகளைத் தெரிவு செய்க.
சிலுசிலு - குளிர்ச்சித் தன்மை
பரபர - எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
துரு துரு - அவசர அவசரமாகச் செய்தல்
தளதள - பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை
பேரங்காடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியவுடன் மக்கள் _______ வென அங்கிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேறினர்.
கடகட
திமுதிமு
வெடவெட
சடசட
"சடசட" எனும் இரட்டைக்கிளவிக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
விரைவாக
அதிர்வு
கடுமையான ஓசை
நடுக்கம்
கனத்த மழைக்கான அறிகுறியைக் கண்டு மகிலா _________ வென வேலையிடத்தை நோக்கி நடந்தாள்.
வெடவெட
தொணதொண
விறுவிறு
சடசட
சரியான பொருளைக் கொண்ட இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
நசநச - ஈரத் தன்மை கொண்டிருத்தல்
வெடவெட - குளிர்ச்சித் தன்மை
கிடுகிடு - அதிர்வு/நடுக்கம்
கடகட - அவசர அவசரமாகச் செய்தல்
காட்டு யானைகள் பெரும் கூட்டமாக ________ வென காடுகளிலிருந்து வெளியேறி கிராமத்தில் புகுந்ததால் ____________ வென வீடுகள் ஆட்டங்கண்டன.
திமுதிமு - கடகட
விறுவிறு - வெடவெட
விறுவிறு - கிடுகிடு
திமுதிமு - கிடுகிடு
மலைச்சாரல் காற்று அகிலாவை _______________ வென நடுங்கச் செய்தது.
வெடவெட
சிலுசிலு
நசநச
கிடுகிடு
ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
நசநச
கிடுகிடு
பரபர
கடும் வெயில் நடந்து வீட்டிற்கு வந்தவுடன் உடல் முழுவதும் __________ வென இருந்ததால் வேலன் குளிக்கச் சென்றான்.
வெடவெட
சிலுசிலு
துருதுரு
நசநச
ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
நசநச
துருதுரு
"தயவு செய்து வகுப்பில் அமைதி பேணுங்கள். பேசிக்கொண்டே இருந்தால ஆசிரியர் போதிக்கும் பாடங்கள் விளங்காமல் போய்விடும்".
திமுதிமு
தொணதொண
வெட வெட
கிடுகிடு
