wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கொடிமலையில் _______________ வென்று வீசிய மென்குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.

a)

துரு துரு

b)

வெட வெட

c)

சிலு சிலு

d)

நச நச

2.

தாமதமாக எழுந்த ராமு __________வென பள்ளிக்கு ஓடினான்.

a)

மட மட

b)

சர சர

c)

தள தள

d)

பர பர

3.

இதன் பொருளைத் தெரிவு செய்க.


தள தள

a)

குளிர்ச்சித்தன்மை

b)

பயிர் செழிப்பாக காணப்படும் நிலை

c)

அவசர அவசரமாக

d)

துடிப்பாக செயல்படுதல்

4.

________________வென ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும்.

a)

துரு துரு

b)

பர பர

c)

தள தள

d)

பட பட

5.

தன் செயலில் கவனமாய் இருத்தல்

a)

இலவு காத்த கிளி போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

6.

வெளியே சொல்ல முடியாமை

a)

ஊமை கண்ட கனாப் போல

b)

வேலியே பயிரை மேய்தாற்போல

7.

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

இலவு காத்த கிளி போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

8.

நண்பனின் பணத்தைத் தான் எடுக்கவில்லை என்று சொன்ன அலியின் சட்டைபையில் அப்பணத்தைக் கண்டுபிடித்ததும் அவன் முகத்தில் _________________.

a)

கானல் நீர்

b)

ஈயாடவில்லை

c)

தலை வணங்கினான்

d)

இடிந்துரைத்தான்

9.

பாட நேரத்தில் நண்பனுடன் கதை பேசிக் கொண்டிருந்த பாலனை ஆசிரியர் _______________.

a)

தலை வணங்கினார்.

b)

கானல் நீர்

c)

இடிந்துரைத்தார்

d)

உடும்புப் பிடி

10.

உன் முடிவே சரியென ___________ இருப்பது முறையன்று.

a)

கானல் நீர்

b)

உடும்புப் பிடி

11.

சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .

a)

சித்திரம் , வேண்டாம்

b)

சித்திரம் , வேண்டும்

12.

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

13.

சிறு வயதிலிருந்தே தந்தை கொடுத்த நம்பிக்கையே சங்கரி நீச்சல் போட்டியில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தது.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

14.

வெயில் கடுமையாக இருக்கிறது என்று சலித்துக் கொண்டாள்.


மேற்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கிடு கிடு

b)

நச நச

c)

கட கட

d)

வெட வெட

15.

கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


செல்வநாயகம் பெரும் தொழிலதிபராக இருந்தாலும் தன் வீட்டுப் பணியாளர்களிடம் _____________ இன்றிப் பழகுவார்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

கள்ளங் கபடு

d)

அகமும் புறமும்