wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முயன்று பாருங்கள்

Total questions: 15

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

''பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக் கூடாது'' எனும் பொருளைக் குறிக்கும் உலக நீதியைத் தெரிவு செய்க.

a)

மாற்றானை யுறவென்றுநம்ப வேண்டாம்

b)

நல்லிணக்கமிக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

2.

செய்யுளடி எந்த வகையைச் சேர்ந்தது:

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

நடுநின்ற நடுவே

a)

நாலடியார்

b)

திருவருட்பா

c)

நல்வழி

d)

திருவாசகம்

3.

வெற்றி வேற்கைக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க :

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

a)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

b)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்

c)

உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்

d)

எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.

4.

கூற்றுக்குப் பொருந்தும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

ஸ்ரீ சுபகீர்த்தி பிறரைப் பற்றி குறை பேசுவதை விரும்பமாட்டாள். அதனால் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அவளைப் பிடிக்கும்.

a)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

b)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

5.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்குப் தொடர்புடைய பல்வகை செய்யுளின் இறுதி அடியைத் தெரிவு செய்க

வானம் , நிலம், காற்று, சூரியன், ஈசன்

a)

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

b)

ஈசன் எந்தை இணையடி நீழலே

c)

நிறையிருளை நீக்குமே நின்று

d)

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

6.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க:

பணக்காரர்களுக்குச் சிறப்பு உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

a)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

b)

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

c)

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

d)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

7.

செய்தியுடன் தொடர்புடைய உலக நீதியைத் தெரிவு செய்க.

மார்ச் 29 , சிரம்பான் - பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவி கடத்தப்பட்டாள்

a)

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

b)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

c)

மனபோன போக்கெல்லாம் போக வேண்டாம்

d)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

8.

பொருளுக்கேற்ற கொன்றை வேந்தனை தெரிவு செய்க :

சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.

a)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

9.

பொருளுக்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க :

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக் கொள்வது இழிவான செயலாகும்

a)

ஈவது விலக்கேல்

b)

ஏற்ப திகழ்ச்சி

c)

இயல்வது கரவேல்

d)

ஊக்கமது கைவிடேல்

10.

பாடல் வரிக்குத் தொடர்புடைய இணைமொழியைத் தெரிவு செய்க:

'' ஆயிரம் உறவு உன்னைத் தேடி வந்தே

நின்றாலும் தாய்ப் போல தாங்க முடியுமா?''

a)

அருமை பெறுமை

b)

அன்றும் இன்றும்

c)

பகலும் பகலும்

d)

அருமை பெருமை

11.

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?

a)

சமண முனிவர்

b)

ஒளவையார்

c)

மாணிக்கவாசகர்

d)

குமரகுருபர சுவாமிகள்

12.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

கடு கடு = கோபம் காட்டுதல்

b)

மட மட = அதிர்வு

c)

சிடு சிடு = சினக்குறிப்புக் காட்டுதல்

d)

மள மள = குறுகிய எட்டு வைத்து நடத்தல்.

13.

பாடல் வரிக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க :

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே !

a)

அச்சம் தவிர்

b)

ஆறுவது சினம்

c)

ஆண்மை தவறேல்

d)

ஐம்பொறி ஆட்சி கொள்

14.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க :

மூத்தோர் _______ வார்த்தை அமிர்தம்.

a)

பேச்சு

b)

சொல்

c)

பேசுதல்

d)

சொல்வது

15.

உலக நீதியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க:

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

a)

நன்மைகள்

b)

தீயச் செயல்கள்

c)

அவதூறு

d)

கெட்டச் செயல்கள்