Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வரும் உவமைத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டுமே தெரிந்து கொள்ளுதல்
மிகவும் தெளிவாகத் தெரிதல்
அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
யாரைச் சந்திக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வருதல்
இவ்விளக்கத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்வு செய்க.
அழகுக்கு அழகு செய்வது போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
மேலே உள்ள படத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
அழகுக்கு அழகு செய்வது போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு , மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவமனைகளில் கூட்டங் கூட்டமாகக் கூடினர்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
புற்றீசல் போல
அழகுக்கு அழகு செய்வது போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
இந்த உவமைத்தொடருக்குப் பொருந்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
அகிலா சமையலைப் பற்றி ஒரு சில புத்த்கங்களை வாங்கி மேலோட்டமாகப் படித்து சமைத்ததனால் அவளின் சமையல் சுவையாக இல்லை.
புத்தகத்தில் உள்ள படங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த முகிலனால் ஆசிரியர் கேட்டக் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.
திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் அணிந்து வந்த நகைகளிலேயே அத்திருடனுக்குப் பார்வை இருந்தது.
கும்பிடப்போன______________ குறுக்கே வந்தது போல
தெய்வம்
தெய்யம்
தேவதை
இரவும் பகலும் பாராமல் கவனமாகப் படித்த கவினழகனின் தேர்வு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்பது _______________________த் தெளிவாகத் தெரிந்தது.
அழகுக்கு அழகு செய்வது போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
____________________ஆசிரியர் தந்த குறிப்புகளைப் படித்த குமரனால் மேடையில் திறப்பட பேச இயலவில்லை.
புற்றீசல் போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
அழகுக்கு அழகு செய்வது போல
அழகுக்கு அழகு செய்வது போல
மேலே உள்ள உவமைத்தொடருக்கு பொருந்தும் படங்களைத் தெரிவு செய்க.
புற்றீசல் போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
புற்றீசல் போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
உவமைத்தொடருக்குப் பொருந்தாத சூழலைத் தெரிவு செய்க.
வகுப்பாசிரியரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணிய குமுதனை அவரே வந்து சந்தித்தார்.
நண்பனைக் காண வீட்டிலிருந்து புறப்பட்ட சோமு அவன் நண்பனை வழியிலேயே கண்டான்.
நீண்ட நாள்களாக சந்திக்காத தன் நண்பனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தான் பரதன்.
இதில் தவறான பொருள் கொண்ட உவமைத்தொடரைத் தேர்வு செய்திடுக.
அழகுக்கு அழகு செய்வது போல
- அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
புற்றீசல் போல
- பிரிவுக்குப் பின் சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
உள்ளங்கை நெல்லிக்கனி போல
- மிகவும் தெளிவாகத் தெரிதல்
________________தெய்வம்_____________ வந்தது போல
கும்பிடப்போன - குறுக்கே
குறுக்கே - கும்பிடப்போன
கும்பிடப்போன - எதிரில்
மலேசியக் கிண்ண காற்பந்தாட்டத்தைக் காண இரசிகர்கள் அரங்கில் ______________குவிந்தனர்.
புற்றீசல் போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
அழகுக்கு அழகு செய்வது போல
