Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 32

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மாவிலைத் தோரணம் ஏன் கட்டப்படுகிறது?

a)

இடத்தை அழகுபடுத்துவதற்காக

b)

காற்றைத் தூய்மைப்படுத்த

c)

காற்றுத் தூய்மையைக் கெடுக்க

2.

இவை ஆலயங்களுக்குச் செல்லும் போது உடன் எடுத்து செல்லும் பொருள்கள்; ஒன்றைத் தவிர.

a)

மலர்கள்

b)

ஊதுபத்தி

c)

தேங்காய்

d)

உணவுத்தட்டு

3.

ஆலயக் கோபுர உச்சியில் என்ன அமைந்திருக்கும்?

a)

குடம்

b)

குடை

c)

சிலைகள்

d)

கலசங்கள்

4.

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ...................... ஒருவராவார்.

a)

சமயத் தலைவர்களுள்

b)

இந்தியத் தலைவர்களுள்

c)

புரட்சி தலைவர்களுள்

d)

கட்சி தலைவர்களுள்

5.

1863 ஜனவரி 12ஆம் நாள் பிறந்து 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது ...............ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

a)

32

b)

35

c)

39

d)

42

6.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

a)

எண்ணம் போல் வாழ்வு

b)

மனம் போன போக்கு

c)

அன்பே சிவம்

d)

தந்தை தாய்ப் பேண்

7.

இல்ல வழிப்பாட்டு முறைகளுள் எது சரியானது அல்ல ...........நான்

a)

குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழைவேன்.

b)

பூவைக் கொண்டு அலங்கரிப்பேன்.

c)

சமயச் சின்னங்களை அணிவேன்.

d)

திருவிளக்கை மாலையில் மட்டும் ஏற்றுவேன்

8.

கொடுக்கப்பட்ட விடைகளுள் எது தவறானது...மந்திரம் ஓதுவதால்....

a)

மனம் ஒரு நிலைப்படும்

b)

மனம் புத்துணர்ச்சி பெறும்

c)

மனம் அமைதி பெறும்

d)

நேரம் விரயமாகும்

9.

பூர்த்தி செய்க;

ஓம் பூர் புவ சுவ,தத் ஸவித்துர் ............................பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரசோதயாத்.

a)

வரேண்யம்

b)

யஜா மகி

c)

வர்த்தணம்

d)

வந்தேயம்

10.

நமது பூஜை மேடையில் முதலில் இருக்க வேண்டியது .............

a)

துர்க்கை படம் / சிலை

b)

மகாவிஷ்ணு படம் / சிலை

c)

கணபதி படம் / சிலை

d)

சிவன் படம் / சிலை

11.

இவையாவும் இவருக்கு தொடர்பானது ஒன்றைத்தவிர....................

a)

திருப்புகழ்

b)

நவராத்திரி

c)

கந்தர் சஷ்டி

d)

தைப்பூசம்

12.

இவரை இப்படியும் அழைக்கலாம்;ஒன்றைத் தவிர....

a)

விக்னேஸ்வரன்

b)

உமாபதி

c)

கணபதி

d)

கஜமுகன்

13.

இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார்?

a)

இறைவன்

b)

வேதவியாசர்

c)

சிவன்

d)

இடும்பன்

14.

அபிராமி அந்தாதியை பாடியவர் ..................

a)

திருநாவுக்கரசர்

b)

அபிராமி பட்டர்

c)

இறைவன்

d)

மாணிக்கவாசகர்

15.

திருமாலின் அவதாரங்களில்,இது இல்லை ..............

a)

பலராம அவதாரம்

b)

கூர்ம அவதாரம்

c)

வாமன அவதாரம்

d)

மூசிக அவதாரம்

16.

இவற்றுள் எது திருநாவுக்கரசரின் வேறு பெயர்கள் அல்ல...................

a)

மருள் நீக்கியார்

b)

அப்பர்

c)

வாசீகர்

d)

புகழனார்

17.

ஔவையார் இதை எழுதவில்லை .................

a)

ஆத்தி சூடி

b)

கொன்றை வேந்தன்

c)

நல்வழி

d)

திருவாசகம்

18.

எது சரஸ்வதியின் வாகனம் ?

a)

மூசிகம்

b)

அன்னம்

c)

புலி

19.

எத்தனை வயதில் சம்பந்தருக்கு சிவனும் சக்தியும் காட்சியளித்தனர் ?

a)

5 வயதில்

b)

16 வயதில்

c)

3 வயதில்

20.

நான்முகன் என்பவர் ............................. ஆவார்.

a)

சிவன்

b)

பிரம்மன்

c)

நாராயணன்

21.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடுவ குலத்தில் பிறந்தவர். வேட்டை ஆடுவதால் சிறந்தவர்,

a)

திருமூலர்

b)

கண்ணப்ப நாயனார்

c)

விவேகானந்தர்

d)

ஔவையார்

22.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று கூறியவர்...

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

கபிலர்

23.

அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன. திருமகள் என்பவர்..

a)

சரஸ்வதி தேவி

b)

இலட்சுமி தேவி

c)

பார்வதி

d)

சக்தி

24.

1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டது. எது இதன் தவறான பெயராகும்?

a)

பொதுமறை

b)

முப்பால்

c)

வான்மறை

d)

உலகமொழி

25.

...................... என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர்.

a)

திருமூலர்

b)

அகத்தியர்

c)

சட்டைமுனி

26.

கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம்...

a)

பிரார்த்தனை செய்யலாம்

b)

நல்ல வார்த்தைகள் கூறலாம்

c)

ஆதரவாகப் பேசலாம்

d)

தன்னம்பிக்கை அளிக்கலாம்

27.

கோவிட்-19 நம்மை பாதிக்காமல் இருக்க ...

a)

சுத்தமாக இருக்கலாம்

b)

வெளியே செல்லாமல் நேரத்தை சரியான வழியில் கழிக்கலாம்

c)

பாதக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம்

d)

நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்

28.

ஒரு நல்ல மகனாக/மகளாக நாம்...

a)

பெற்றோருக்கு உதவலாம்

b)

வீட்டைச் சுத்தம் செய்யலாம்

c)

பாடங்களைச் செய்யலாம்

d)

தினமும் சாமி விளக்கு ஏற்றி வழிபடலாம்

29.

சரியான வாழ்க்கை வாழ்வதற்கான பொருள்...

a)

இறைவனுக்கு நன்றி கூறும் பழக்கம்

b)

தாயின் அறிவுரையைக் கேட்பது

c)

தந்தைக்கு பெருமை சேர்ப்பது

d)

காலத்தை வீணே கழிப்பது

30.

நல்ல மனம் என்பது....

a)

பிறருக்கு உதவுவது

b)

பலனை எதிர்பாராமல் கடமை செய்வது

c)

எல்லாம் இறைவனின் செயல் என்று எண்ணி எதையும் முநற்சிக்காமல் இருப்பது

d)

பிறர் மனம் புண்படும்படி பேசுவது