Font size
Worksheets6. இலக்கணம் - புணர்ச்சி & எழுத்துக்களின் பிறப்பு
Total questions: 20
Worksheet time: 3mins
1. தமிழ் + அமுதம் என்பதில் தமிழ் என்பது _________ மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
2. தமிழ் + அமுதம் என்பதில் அமுதம் என்பது _________ மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
3. சிலை + அழகு என்பது ______ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ)மெய்யீற்று
இ) உயிர் முதல்
ஈ) மெய் முதல்
4. மண்ணழகு என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ)மெய்யீற்று
இ) உயிர் முதல்
ஈ) மெய் முதல்
5. பொன்னுண்டு என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ)மெய்யீற்று
இ) உயிர் முதல்
ஈ) மெய் முதல்
6. பொற்சிலை என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ)மெய்யீற்று
இ) உயிர் முதல்
ஈ) மெய் முதல்
7. ''மணிமுடி'' - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _______.
அ) இயல்பு
ஆ) தோன்றல் விகாரம்
இ) திரிதல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
8. விகாரப் புணர்ச்சி _______ வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
9. தமிழ்த்தாய் என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) தோன்றல் விகாரம்
இ) திரிதல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
10. விற்கொடி என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) தோன்றல் விகாரம்
இ) திரிதல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
11. மனமகிழ்ச்சி என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) தோன்றல் விகாரம்
இ) திரிதல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
எழுத்துகளின் பிறப்பினை ______ வகையாகப் பிரிப்பர்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
எழுத்துகள் _______ இடங்களில் பிறக்கின்றன.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
உயிரெழுத்துகளின் பிறப்பிடம் ______.
அ) மூக்கு
ஆ) தலை
இ) மார்பு
ஈ) கழுத்து
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் _______.
அ) மூக்கு
ஆ) தலை
இ) மார்பு
ஈ) கழுத்து
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _______.
அ) மூக்கு
ஆ) தலை
இ) மார்பு
ஈ) கழுத்து
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ________.
அ) இ,ஈ
ஆ) உ,ஊ
இ) எ,ஏ
ஈ) அ,ஆ
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க்,ங்
ஆ) ச்,ஞ்
இ) ட்,ண்
ஈ) ப்,ம்
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _______.
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
_________ எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
அ) க்
ஆ) ஃ
இ) ட்
ஈ) ச்
