Font size
Worksheetsசெய்யுளும் மொழியணிகளும்
Total questions: 14
Worksheet time: 10mins
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க
விரைவாகச் செய்தல்
கட கட
கிடு கிடு
நச நச
வெட வெட
கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
காட்டுக்குள்ளிருந்து திடீரென இரண்டு பெரிய நாய்கள் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும் அருண் (a) வென நடங்கினான்.
வெயில் கடுமையாக இருக்கிறது என்று சலித்துக் கொண்டாள்.
மேற்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கிடு கிடு
நச நச
கட கட
வெட வெட
கோடிட்ட இடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
செல்வநாயகம் பெரும் தொழிலதிபராக இருந்தாலும் தன் வீட்டுப் பணியாளர்களிடம் _____________ இன்றிப் பழகுவார்.
உயர்வு தாழ்வு
தங்கு தடை
கள்ளங் கபடு
அகமும் புறமும்
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
அமரன் நான் உனக்கு கூறும் அறிவுரை இதுதான். உன்னை விட வயதில் மூத்தவன் என்பதால் இதை உன்னிடம் கூறக் கடமைப்பட்டுள்ளேன். நீ செய்வது சரியில்லை. மனதில் கெட்ட எண்ணம் வைத்துக் கொண்டு சரவணனிடம் பழகிக் கொண்டிருக்கிறாய். ஒருநாள் சரவணனுக்குத் தெரியவந்தாலுன் நிலைமை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்.
தங்கு தடை
நோய் நொடி
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
கொடுக்கப்பட்டுள்ள இணைமொழிகளுக்குத் தவறான விளக்கத்தினைக் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
கள்ளங் கபடு - வஞ்சக எண்ணம்
அகமும் புறமும் - மன உணர்வும் வெளித்தோற்றமும்
தங்கு தடை - குறுக்கீடு
உயர்வு தாழ்வு - ஏற்ற இறக்கம்
கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சிறு வயது முதற் நண்பர்களான கலையும் காந்தனும் இன்றுவரை (a) சேர்ந்தே இருக்கிறார்கள்.
கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
பசுமரத்தாணி போல
இணைந்தே இருப்பது
மனத்தில் ஆழமாகப் பதிதல்
ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல்
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
கீழ்க்காணும் உவமைத்தொடரை நிறைவு செய்க.
பழம் நழுவி (a)
திருக்குறளில் கோடிட்ட சொல்லிற்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
கடுஞ்சொல்
பொறாமை
கோபம்
பேராசை
கீழ்க்காணும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது
ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் பெருந்தொகையாகிவிடும்
பல நூல்களைப் படிப்பதனால் அறிஞ்னாகத் திகழலாம்
கீழ்க்காணும் பழமொழியை நிறைவு செய்க.
தன் கையே (a)
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
பெரியவர்களின் பேச்சைக் கேளாமல் எந்நேரமும் அவர்களை எதிர்த்துப் பேசும் தேவனை ஊர் மக்கள் வெறுத்தனர்.
அரைப்படிப்பு
வாழையடி வாழை
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்து
கீழ்க்காணும் செய்யுளில் விடுபட்டுள்ள வரியைத் தெரிவு செய்க.
மன்னனும் மாசறக் கற்றோணும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
_________________________________________-
வந்த இடமெல்லாம் சிறப்பு
சென்ற தேசமெல்லாம் சிறப்பு
சென்ற இடமெல்லாம் சிறப்பு
வந்த தேசமெல்லாம் சிறப்பு
