NEW
Font size
Worksheetsதமிழ் மொழி
Total questions: 30
Worksheet time: 15mins
இரட்டைக்கிளவி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.
1. சாலையில் சுற்றித் திரியும் நாய்களைக் கண்டதும் மல்லிகா _____________________ என நடுங்கினாள்.
A . வெடவெட
B.கிடுகிடு
C. கடகட
D. நசநச
2. கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கான பொருள் யாது?
" விறுவிறு "
A. விரைவாக ஓடுதல்
B. அவசர அவசரமாகச் செய்தல்
C. விரைவாக
D. எப்போதும் துடிப்பாகச் செயல்படுதல்
3. மேல் காணும் படத்திற்குப் பொருந்தி வரும் இரட்டைக் கிளவி யாது?
A. கடகட
B. கிடுகிடு
C. சடசட
D. திமுதிமு
இணைமொழி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.
4. அரவிந்தன் தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை _________________ மகிழ வரவேற்றான்.
A. உயர்வு தாழ்வு
B. கள்ளங்கபடு
C. அகமும் புறமும்
D. சீரும் சிறப்பும்
5. கீழ்க்காணும் இணைமொழிகளின் சரியான பொருளோடு இணைக்கப்பட்ட இணைமொழியைத் தேர்ந்தெடுக.
A. ஆடிப்பாடி -------------------களைப்புடன்
B. சட்ட திட்டம் --------------- கட்டொழுங்கு
C. உள்ளும் புறமும் -------எல்லா இடங்களிலும்
D. வாடி வதங்கி ---------- உலர்ந்து
6. கீழ்க்காணும் பொருளுக்கேற்ற இணைமொழி யாது?
" மிகவும் வெட்கப்பட்டு "
A. உயர்வு தாழ்வு
B. நாணிக்கோணி
C. கள்ளங்கபடு
D. வாடி வதங்கி
உவமைத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.
7. இராமயணத்தில் இராமன் இலக்குவன் போன்று பரதனும் சத்ருக்கனும் எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் இருப்பார்கள்.
A. இலைமறை காய் போல
B. தாயைக் கண்ட சேயைப் போல
C. பசுமரத்தாணி போல
D. மணியும் ஒலியும் போல
8. கீழ்க்காணும் உவமைத்தொடருக்குப் பொருந்தி வரும் சூழலைத் தேர்ந்தெடுக.
"கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல"
A. வானொலியில் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
B. வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்த மாலவன், முருகன் கோயிலைக் கண்டதும் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல என கைக்கூப்பி வணங்கினார்.
C. திருவாளர் சந்திரன் பள்ளி நிகழ்விற்கு நன்கொடை தேடி செல்வந்தரான கோகிலன் வீட்டிற்குப் புறப்பட்டப் போது அவரே சந்திரன் வீட்டிற்கு வந்ததைக் கண்டதும் மகிழ்ச்சிக் கொண்டார்.
D. மாறன் கடன் கேட்ட தன் நண்பனைக் கண்டதும் ஓடி ஒளிந்தான்.
9. கீழ்க்காணும் உவமைத்தொடருக்கான பொருத்தமான பொருள் யாது?
"உள்ளங்கை நெல்லிக்கனி போல"
A. நன்றாக வெளிப்படாமல் இருத்தல்
B. மிகவும் தெளிவாகத் தெரிதல்
C. யாருக்கும் தெரியாமல் இருத்தல்
D. ஆசை வெளிப்படாமல் இருத்தல்
மரபுத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.
10. கடன் தொல்லையால் வட்டி முதலாளிகளிடம் மாட்டிக் கொண்டு அல்லல்பாட்டுக் கொண்டிருந்த முகிலனுக்கு அவனது பால்ய நண்பனான கேசவன் _____________________.
A. வெட்டிப் பேசினான்
B. தோள் கொடுத்தான்
C. உச்சிக் குளிர்ந்ந்தான்
D. முகம் சுழித்தான்
11. கீழ்க்காணும் பொருளுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.
" திட்டப்படுதல்"
A. உச்சிக் குளிர்தல்
B. பாட்டு வாங்குதல்
C. எள்ளளவும்
D. அளவளாவுதல்
12. கொடுக்கப்பட்ட மரபுத்தொடருக்கான பொருளைத் தெரிவு செய்க.
" அளவளாவுதல்"
A. கலந்துப் பேசுதல்
B. அளவாகப் பேசுதல்
C. மனமகிழ்சி அடைதல்
D. ஏசப்படுதல்
பழமொழி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.
13. வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த கோவிந்தன் மீண்டும் தன் சுயமுயற்சியில் மற்றவரின் உதவியைப் எதிர்பாராமல் உழைத்து மீண்டும் மிகப் பெரிய தொழிலதிபர் ஆனார்.
A. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
B. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
C. கண்டதைக் கற்க பண்டிதனாவான்
D. தன் கையே தனக்கு உதவி
14. வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. சில வேளைகளில் நாம் நினைப்பது நடக்கும். ஆனால் அதனால் கிட்டும் மகிழ்ச்சி நிலைக்காது. பல வேளைகளில் தோல்விதான் நம்மை அரவணைதுக் கொள்ளும். அச்சமயத்தில் நாம் மனம் தவறாமல் வாழ்க்கையில் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமாய் இருக்க வேண்டும்.
A. மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
B. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
C. தன் கையே தனக்கு உதவி
D. அடாது செய்பவன் படாது படுவான்
15. மேல் காணும் படங்களுக்கு பொருந்தி வரும் பழமொழி யாது?
A. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
B. அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
C. தன் கையே தனக்கு உதவி
D. அடாது செய்பவன் படாது படுவான்
திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.
16. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
___________________________________
A. மிகைவேண்டி மிக்க கொளல்
B. மிகைநாடி மிக்க கொளல்
C. குணம்வேண்டி மிக்க கொளல்
D. மிகைநடி மிக்க கொளல்
17.கீழ்க்காணும் கருத்திற்குப் பொருந்து வரும் திருக்குறள் யாது?
" கோபம் ஒருவரை அழிக்க வல்லது "
A. அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
B. இதனை இதனால் இவன்முடுக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
C. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னியே கொல்லும் சினம்
D. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
18. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் - பொருள் ?
A. இந்த தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்
B. ஒரு செயலைச் செய்து முடித்து விடுவதாகாச் சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால் அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.
C. பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
D. கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலயை உலகத்தார் உடனே செய்வார்கள்
19.கீழ்க்காணும் செய்யுளின் இறுதியடியைத் தேர்ந்தெடுக
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
விசை வரிசையா நந்தும் – வரிசையால்
______________________________________
தானே சிறியார் தொடர்பு
A. வானூர் நிலவும்போல் வைகலும் தேயுமே
B. வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
C. வானூர் மதியம்போல் உலகமே தேயுமே
D. வானூர் நிலவும்போல் உலகமே தேயுமே
20. மேற்காணும் செய்யுளடிகளில் சிறியார் என்ற சொல் யாரைக் குறிக்கின்றது?
A. பண வசதி கொண்டவர்கள்
B. தீய குணங்கள் கொண்டவர்கள்
C. நற்குணங்கள் கொண்டவர்கள்
D. உருவத்தில் சிறியவர்கள்
21.ஆனந்தன் தான் மனனம் செய்த பாரதியாரின் கவிதையை ______________ என ஒப்புவித்தான்.
A. வெட வெட
B. கட கட
C. பள பள
D. விறு விறு
22.நெடுநாள் சந்திக்காத தனது தோழியைக் கண்டதும் இளமதி, ___________________ கட்டி அணைத்துக் கொண்டாள்.
A. பசு மரத்தாணி போல
B. மணியும் ஒலியும் போல
C. தாயைக் கண்ட சேயைப்போல
D. இலைமறை காய் போல
23. தன் குடும்பத்தாருடன் வெளிநாட்டு சுற்றுப்பிரயாணம் செய்த நிகழ்வு, கோமதியின் மனதில் ________________ பதிந்தது.
A. பசு மரத்தாணி போல
B. தாயைக் கண்ட சேயைப்போல
C. மணியும் ஒலியும் போல
D. இலைமறை காய் போல
24. கட்டொழுங்கு ஆசிரியர் கூப்பிட்டதும் மாலாவின் உடல் _________________________ என நடுங்கியது.
A. பள பள
B. கட கட
C. வெட வெட
D. விறு விறு
25.வீட்டிற்கு வரும் விருந்தினரை உள்ளம் குளிர வரவேற்பது ________________ தமிழர்களின் மரபாகும்.
A. தங்குதடை
B. வாழையடி வாழை
C. நோய்நொடி
D. அரைப்படிப்பு
26. பல்கலைக்கழகத்தில் உள்ள நூல்நிலையத்தில் உள்ள பலதரப்பட்ட நூல்களைக் கற்று தெய்வீகன் _________________________ என திகழ்ந்தான்.
A. கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்.
B. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
C. தன் கையே தனக்கு உதவி
D. ஆடமாட்டாதவன் கூடம் கோணல் என்றாளாம்.
27. நம்மில் பலர் _____________________________________ பேசியே பொழுதைக் கழித்து வருவது மிகவும் வருந்த தக்கச் செயலாகும்.
A. ஏட்டிக்குப் போட்டி
B. அரைப்படிப்பு
C. தோள் கொடுத்தல்
D. வெட்டிப் பேச்சு
28. __________________________________ என்பதை உணர்ந்து, நாம் நம் வேலையை நாமாகவே செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்
A. கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்.
B. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
C. தன் கையே தனக்கு உதவி
D. ஆடமாட்டாதவன் கூடம் கோணல் என்றாளாம்.
29.முறையான பயிற்சி பெறாமல் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் தோல்வியடைந்த யாழினி, நீதிபதிகள் சரியான தீர்ப்பை வழங்கவில்லையென கூறியது _______________________ என்பதற்கொப்ப அமைந்தது.
A. கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்.
B. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
C. தன் கையே தனக்கு உதவி
D. ஆடமாட்டாதவன் கூடம் கோணல் என்றாளாம்.
30. பள்ளி ஆலோசகரின் அறிவுரை செழியனின் மனத்தில் ஆழப் பதிந்ததால் __________அவன் இன்று பள்ளியிலேயே சிறந்த மாணவராகத் திகழ்கிறான்.
A. மணியும் ஒலியும் போல
B. பசுமரத்தாணி போல
C. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
D. புற்றீசல் போல
