Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Economics

Total questions: 13

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நிறைதொழில் மட்ட நிலமையின் இயல்புகளில் ஒன்றாக அமையாதது

a)

PPC கோட்டின் மீது உற்பத்திப் புள்ளி .

b)

ஒரு உற்பத்தியை அதிகரிக்க மற்றைய உற்பத்தியை விட்டுக் கொடுத்தல்.

c)

உற்பத்தி உச்சசெயற்றிறன் வாய்ந்தது

d)

இரு உற்பத்தியினையும் அமையச் செலவு இன்றி அதிகரிக்க முடியாமை

e)

இரு உற்பத்தியையும் அதிகரிக்கும் போது அமையச் செலவு ஏற்படாது

2.

வள ஒதுக்கீட்டு வினைத்திறன் கருதுவது.

a)

வளங்களை சமூகத் தெரிவுக்குப் பொருத்தமாக ஒதுக்குதல்

b)

அனைத்து வளங்களையும் உற்பத்தியில் பயன்படுத்தல்

c)

அனைத்து வளங்களாலும் பெறக் கூடிய உச்ச வெளியீடு

d)

நிறைதொழில் மட்டம் ,பூரண உற்பத்தி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதல்..

e)

ஒரு பண்டத்தின் மேலதிக அலகொன்றை நுகர்வதனால் பெறும் மேலதிக பயன்.

3.

பின்வரும் உற்பத்திச் சாத்திய வளையியில் மூலதனப் பண்டங்களின் வெளியீடு 30 இல் இருந்து 40 ஆக அதிகரிக்குமாயின் அதற்கான அமையச் செலவின் பெறுமதி யாது?

a)

8 அலகு நுகர்வுப் பண்டங்கள்

b)

10 அலகு மூலதனப் பண்டங்கள்

c)

58 அலகு நுகர்வுப் பண்டங்கள்

d)

0.8 அலகு நுகர்வுப் பண்டங்கள்

e)

60 அலகு மூலதனப் பண்டங்கள்

4.

𝑋இ𝑌 என்னும் இரு பண்டங்களை உற்பத்தி செய்யும் ஒரு பொருளாதாரத்தில் அமையச் செலவு மாறாதிருக்கும் சந்தர்ப்பங்கள்?

A - 𝑋 உம் 𝑌 உம் நெருங்கிய பிரதியீடுகளாகும்.

B - உற்பத்தி வளங்கள் பூரணமாற்று உபயோகமுடையது.

C - உற்பத்தி செய்வதனால் வளங்கள் சிறப்புத் தேர்ச்சியடைதல்.

D - உற்பத்தி சாத்திய வளையி நேர்கோடாகும்.

E - உற்பத்திக்குரிய தொழில்நுட்பங்களில் வேறுபாடு.

a)

A யும் D யும்

b)

A யும் E உம்

c)

B யும் C யும்

d)

B யும் Dயும்

e)

C யும் E யும்

5.

வளங்கள் அருமையானதாகவும் பூரண மாற்றுப்பயன்பாடு அற்றதாகவும் இருப்பதனால் உற்பத்தி சாத்திய வளையி

a)

நிலையான அமையச்செலவுடன் மூலத்துக்கு குவிவாக அமைகின்றது

b)

அதிகரித்துச் செல்லும் அமையச்செலவுடன் உற்பத்தி தானத்தை நோக்கி குவிவாக அமைகின்றது

c)

மேல் நோக்கி சரிவதுடன் மூலத்துக்கு குழிவாக அமைகின்றது

d)

கீழ் நோக்கி சரிவதுடன் வெளிநோக்கி குவிவாக அமைகின்றது.

e)

குறைந்து செல்லும் அமையச் செலவுடன் மூலத்துக்கு குவிவாக அமைகின்றது

6.

வரைபடத்தின் படி ஏற்றுக் கொள்ள முடியாதது?

a)

உற்பத்திச் சாத்திய வளையி மீது அமைந்துள்ள புள்ளி A நிறைதொழில் மட்டம்.

b)

புள்ளி C - குறை தொழில் மட்டம்.

c)

B புள்ளியில் பொருளதாரத்தின் வேலையின்மை

d)

வரட்சியினால் பல மணி மின் வெட்டினால் வளப்பயன்பாடு குறைதலை A - B நோக்கிய நகர்வு

e)

வேலையற்ற இளைஞர்கள் யுவதிகளுக்கு; தொழில் வாய்ப்பு வழங்கப்படுதல் A - B நகர்வு.

7.

நேர்கோட்டு உற்பத்தி சாத்திய வளையி ஒன்றின் கிடையச்சில் குறிக்கப்பட்டுள்ள X பொருள் அலகொன்றுக்கான அமையச் செலவு 2.5 Yஅலகுகளாகும். எனின் ஒரு அலகு Y பொருள் உற்பத்திக்கான அமையச் செலவு யாது?

a)

2.5 X அலகுகளாகும்

b)

0.5 X அலகுகளாகும்

c)

4 X அலகுகளாகும்

d)

1.4 X அலகுகளாகும்

e)

0.4 Y அலகுகளாகும்

8.

வரைபடத்தின் படி புள்ளி A - புள்ளி B வரையான அசைவினால் பொருளாதாரத்தில் காட்டப்படும் நிலமை

a)

பொருளாதார வீழ்ச்சி

b)

மொத்தக் கேள்வி அதிகரித்தல்

c)

வேலையின்மையிலுள்ள வளங்கள் அழிவடைதல்

d)

வேலைவாய்ப்புக் குறைவடைதல்

e)

வேலையின்மை குறைவடைதல்

9.

வெவ்வேறு பொருட்களின் உற்பத்தியிலும் ஒரே வகையான தொழிநுட்ப முறை பயன்படுத்தப்படும்போது.

a)

புள்ளி உற்பத்திச் சாத்திய எல்லைக்குள் அமைந்திருக்கும்.

b)

PPC வளையி இடப்புறம் நகர்வடையும்.

c)

PPC வளையி உள்நோக்கி குவிந்திருக்கும்.

d)

PPC வளையி வெளிநோக்கி குவிந்திருக்கும்

e)

PPC வளையி ஒரு நேர்கோட்டு வடிவம் பெறும்

10.

உற்பத்திச் சாத்திய வளையி உருவாக்கத்தில் பின்வருவனவற்றில் எது எடுகோளாகக் கொள்ளப்படுவதில்லை.

a)

பொருளாதாரத்தில் உள்ள வளங்களின் அளவு நிலையானது.

b)

வளங்கள் பூரணமாகவும் உச்ச செயத்திறனுடனும் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.

c)

பொருளாதாரம் இரு பொருட்கள் மட்டும் உற்பத்தி .

d)

தொழிநுட்ப மாற்றங்கள் நிகழ்வதில்லை.

e)

வளங்கள் தனியார் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யபயன்படுகின்றன.

11.

உற்பத்தி சாத்திய வளைகோட்டின் மீதுள்ள புள்ளியொன்றில் பொருளாதாரம் உற்பத்தி செய்யுமாயின்

a)

பொருளாதாரத்தில் வளங்கள் சில பயன்படுத்தப்படும்.

b)

அது ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் பண்பாகும்.

c)

வளங்கள் ஒதுக்கீட்டு வினைத்திறனைக் கொண்டிருக்காது.

d)

அது அதிகரிக்கும் அமையச் செலவு கொண்ட வளையியாகும்.

e)

அது உற்பத்தித்திறனைக் குறிக்கும்.

12.

இங்கு காணப்படும் உற்பத்தி இயலுமை எல்லைக் கோட்டை கருத்திற்கொள்க.


உற்பத்தி இயலுமை எல்லைக் கோட்டின் வழியே 𝐴 புள்ளியிலிருந்து 𝐵 புள்ளி வரை உற்பத்தி பெயர்வதன் பொருளாதார விளைவாக இனங்காணக்கூடியது?

5.

a)

நுகர்வுப் பொருள் உற்பத்தியின் சந்தர்ப்பக் கிரயம் உயர்வடைதல்.

b)

நீண்டகால பொருளாதார வளர்ச்சி செயற்பாடு துரிதமடைதல்.

c)

நுகர்வோர் பொருட்களுக்கு மிகை நிரம்பல் உருவாகுதல்.

d)

சந்தர்ப்பக் கிரய விகிதங்களுக்கிடையில் சமமான தன்மை உருவாகுதல்.

e)

மூலதனப் பொருள் வழங்களில் மிகை ஏற்படுதல்.

13.

குறித்தவொரு பொருளாதாரத்தின் உற்பத்திச் சாத்திய எல்லையைக் காட்டும் வரைபடம் தரப்பட்டுள்ளது.


மேலுள்ள உற்பத்தி சாத்திய எல்லை வளைகோட்டிற்குப் பொருத்தமான மிகச் சரியான கூற்றை பின்வரும் விடைகளிலிருந்து தெரிவுசெய்க.

a)

ஒரே இன வளங்கள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

b)

உற்பத்தியில் சம அளவான தொழில் நுட்ப முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

c)

ஓரினம் அல்லாத வளங்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

d)

வளங்களின் விளைதிறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

e)

ஒரு தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வளங்கள் மற்றைய தொழிலிலும் அதே விதத்தில் ஈடுபடுத்தப்பட முடியும்.

Similar Resources on Wayground