wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TAHUN 3

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
2.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
3.

பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?


சமமற்ற நிலப்பகுதி

a)

ஆடை அணிகலன்

b)

சுற்றும் முற்றும்

c)

மேடு பள்ளம்

d)

அல்லும் பகலும்

4.

கீழ்க்காணும் திருக்குறளைத் நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி

சேர்ந்தார்க்கு ____________________

a)

யாண்டும் இடும்பை இல

b)

எண்ணுவம் என்பது இழுக்கு.

c)

உயிரினும் ஓம்பப் படும்.

d)

இன்மை புகுத்தி விடும்

5.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?

a)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

b)

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

c)

தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.

d)

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

6.

சரியான பன்மை வாக்கியத்தை தேர்வுச் செய்க

a)

அணில் பழம் தின்றது.

b)

குரங்கு மரத்தில் தாவியது.

c)

குரங்குகள் மரத்தில் தாவியது.

d)

குரங்குகள் மரத்தில் தாவின.

7.

சரியான எதிர்ச்சொற்களைத் தேர்வுச் செய்க


­­­­­­­­­­­­­­_________________ x தீமை

a)

முதுமை

b)

நன்மை

c)

பாவம்

d)

சிறுமை

8.

அம்மா கடையில் ஒரு _________________

வெற்றிலை வாங்கினார்.

a)

குலை

b)

கொத்து

c)

கட்டு

d)

குவியல்

9.

படத்திற்கு ஏற்ற தொலுதிப் பெயரைத் தேர்வுச் செய்க.

a)

தார்

b)

கதிர்

c)

குலை

d)

சீப்பு

10.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை
a)
245
b)
246
c)
247
11.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
12.
1.  ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
a)
ஆறப் போட்டான்     
b)
கம்பி நீட்டினான்.
c)
அள்ளி இறைத்தான்     
13.
பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும், எழுதுப்பொருள்களையும்  __________________________எடுத்து வைத்தான். 
a)
கண்ணும் கருத்துமாய்
b)
அவசரக் குடுக்கை
c)
அரக்கப் பரக்க
14.
திரு முருகன் _________________________ மான பாதையில் மகிழுந்தைச் செலுத்த சிரமப்பட்டார்.
a)
மேடு பள்ளம்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு குழி
15.
காலை கதிரவனின் ஒளி _______________________ வென மின்னியது.
a)
கிலுகிலு
b)
தகதக
c)
மினுமினு
16.
மாலையில் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தன் தந்தை கூறியதால் மாறன் தன் வீட்டுப்பாடங்களை  ____________________வெனச் செய்து முடித்தான்.
a)
கலகல
b)
மளமள
c)
மினுமினு
17.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்
a)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
b)
ஊருடன் கூடி வாழ்
c)
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
18.

பறந்தன

திணை + பால்

a)

அஃறிணை+ ஒன்றன்பால்

b)

அஃறிணை+பலவின்பால்

19.

பலர்பாலைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

சென்றன

b)

விளையாடினர்

20.

புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

21.

ஓடினான்


மேற்காணும் சொல் எந்தக் காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

22.
எங்கள் வீட்டுப் பசு அழகான _____________ ஈன்றது.
a)
A. குட்டியை
b)
B. பிள்ளையை
c)
C.  கன்றை
d)
D.  குஞ்சுகளை