Font size
Worksheets7. செய்யுள் - விருந்தோம்பல்
Total questions: 12
Worksheet time: 60secs
நமது படைப்பகுதியான 'விருந்தோம்பல்' என்னும் தலைப்பு _________ நூலில் இடம்பெற்றுள்ளது.
அ) சிறுபஞ்சமூலம்
ஆ) ஏலாதி
இ) பழமொழி நானூறு
ஈ) நாலடியார்
பழமொழி நானூறு ________ நூல்களுள் ஒன்று.
அ) பதினெண் கீழ்க்கணக்கு
ஆ) பதினெண் மேற்கணக்கு
இ) காப்பியம்
ஈ) சிற்றிலக்கியம்
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் _________.
அ) காரியாசன்
ஆ) முன்றுறை அரையனார்
இ) விளம்பிநாகனார்
ஈ) பாரி
முன்றுறை அரையனார் ________ சமயத்தைச் சார்ந்தவர்.
அ) சைவம்
ஆ) வைணவம்
இ) சமணம்
ஈ) பௌத்தம்
'திண்ணை' என்பதைக் குறிக்கும் சொல் _________.
அ) மாரி
ஆ) புகாவா
இ) மடமகள்
ஈ) முன்றில்
'மாரி' என்பதன் பொருள் ______.
அ) மழை
ஆ) உணவு
இ) இளமகள்
ஈ) திண்ணை
அங்கவை, சங்கவை என்போர் ________ இன் மகளிர்.
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) காரி
ஈ) பாரி
பாரி மகளிர் உலைநீரில் _______ இட்டு தந்தனர்.
அ) பொன்
ஆ) உணவு
இ) அரிசி
ஈ) வெள்ளி
பாரி மகளீரிடம் ________ இரந்து நின்றனர்.
அ) விறலியர்கள்
ஆ) புலவர்கள்
இ) கூத்தர்கள்
ஈ) பாணர்கள்
மரம் வளர்த்தால் ______ பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
'மாரி + ஒன்று' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.
அ) மாரியொன்று
ஆ) மாரிஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
