WorksheetsGrade 10 Tamil by Fathima Shakeeka
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
"தெண்ணீர் கயத்துச் சிறுமீன்" இங்கு கயம் என்பது,
யானை
குளம்
கயல் மீன்
குடம்
"கழா அக்கால் பள்ளியுள வைத்தற்றால் ..........." இங்கு பள்ளி எனப்படுவது,
பள்ளிக்கூடம்
படுக்கை
நித்திரை
பண்பாடு
"விலங்கியற்கை இல்லையெனில் யாமெலாம் விரும்புமட்டில் விண்ணுறலாமே........" இங்கு இயற்கை என்பதன் எதிர்ப்பொருள்,
தண்
செயற்கை
அண்டம்
செயல்
வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று உபசாரம் செய்தல் நல்ல பழக்கமாகும். உபசாரம் என்பதன் எதிர்ப்பொருட் சொல்,
அபசாரம்
அவமானம்
அபகாரம்
விவகாரம்
"பாணனின் இனிய யாழோசை செவிக்கு இதமளித்தது" பாணன் என்பதன் எதிர்ப்பாற் சொல்,
பாடினி
அணங்கு
தேவராட்டி
குறத்தி
கிடைத்தற்கரிய நூதனமாக அருமைப் பொருட்கள் "மியூஸியத்தில்" (museum) வைக்கப்பட்டுள்ளன. "மியூஸியம்" என்ற சொல்லின் தமிழ்ச்சொல்,
அருங்காட்சியகம்
புகலரண்
கவடிகள் கூடம்
காட்டரண்
கமுகின் இளமைப் பெயர்,
குட்டி
பிள்ளை
நாற்று
வடலி
பின்வருவனவற்றுள் பிரெஞ்சு மொழிச் சொல்லாக அமைவது,
கடுதாசி
துட்டு
துருப்பு
பென்சில்
அதிமிகுந்த அறிவுப் புலமையை வெளிப்படுத்தும் அருஞ்சொற்றொடர்,
நுண்மான் நுழைபுலம்
அண்டசராசரம் அனைத்தும்
உணர்வொலிகாலம்
சாதுரியமாகவும் மாதுரியமாகவும்
ஒருவர் இறந்த பின்னர் அவரின் உறவுப் பெண்கள் அவரை நினைத்து புலம்புதல்,
ஒத்திகை
ஒப்பாரி
ஒலக்கம்
ஒப்புரவு
"எப்படியும் வெளநாடு செல்ல வேண்டும் என்று அவன் ஒற்றைக்காலில் நிற்கின்றான்" ஒற்றைக்காலில் நிற்றல் என்ற மரபுத் தொடரின் பொருள்,
பயமற்று நிற்றல்
பிடிவாதமாக நிற்றல்
உறுதியற்று நிற்றல்
ஆசைப்படுதல்
சபையில் சொல்லத்தகாத சொல்லைத் தவிர்த்து வேறு வகையில் சொல்வது,
மற்றொன்று விரித்தல்
மறைமொழி
ஓம்படைக் கிளவி
இடக்கரடக்கல்
'அசூயை' என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்,
போட்டி
பொறாமை
மனக்குறை
செருக்கு
"ஒருவர் தன் நிலையிலிருந்து நாழ்வானாயின் அற்பர்களும் அவமதிப்பர்" என்ற கருத்தைத் தரும் பழமொழி,
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா?
சேற்றிலே புதைந்த யானையைக் காகமும் கொத்தும்.
காகம் திட்டி மாடு சாகாது.
ஒத்தகருத்துள்ள சொற்களைக் கொண்ட இணைமொழி,
சீரும் சிறப்பும்
ஆதிஅந்தம்
அல்லும் பகலும்
ஓட்டமும் நடையும்
ஆத்திரத்தோடு நண்பர் அவுக்கென எழும்பி இரண்டில் ஒன்று பார்ப்பது என்று பாய்ந்து வந்தார். இங்கு அவுக்கென என்னும் ஒலிக்குறிப்புச் சொல் உணர்த்தும் பொருள்,
கோபம்
பயம்
விரைவு
ஆச்சரியம்
ஒலி, பாம்பு எனும் பொருளைத் தரும் சொல்,
பணி
ஓசை
சர்ப்பம்
அரவம்
"இரவு பகல் பல மூலசாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே" இங்கு பல மூலசாகம் எனும் சொற்றொடரால் குறிப்பிடப்படுவன முறையே,
கிழங்கு, பழம், இலை
பழம், கிழங்கு, இலை
இலை,பழம், கிழங்கு
இலங்கை, பழம், கிழங்கு
சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் என்பன,
ஐம்பொறி
ஐம்பூதம்
ஐம்புலன்
ஐம்பால்
பின்வருவனவற்றுள் மகிழ்ச்சியான உணர்வினைப் புலப்படுத்தப் பயன்படும் தொடர்,
ஓடி ஆடி
ஓய்வு ஒழிவு
ஆடிப்பாடி
ஓட்டமும் நடையும்
ககரம் எந்தச் சொல்லில் "h" என்னும் ஆங்கில எழுத்துக்கு நிகராக ஒலிக்கிறது?
கடல்
தங்கம்
கதவு
மேகம்
"தொட்டான்" எனும் சொல்லின் பகுதி,
தொட்டு
தொட்ட
தொடும்
தொடு
கவிஞரும் போற்றிய மனிதர், இங்கு உம் இடைச்சொல் உணர்த்தும் பொருள்,
இழிவுச் சிறப்பு
உயர்வுச் சிறப்பு
ஐயம்
முற்று
மாணவரது வரவு இன்று குறைவாகக் காணப்படுகிறது. மாணவரது வரவு என்பது,
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எண்ணித் துணிக கருமம். இங்கு துணி என்பது,
முன்னிலை வினைமுற்று
முன்னிலை ஏவல் வினைமுற்று
தன்மை வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
பின்வரும் வாக்கியங்களுள் பெயரெச்சத்தொடர் கொண்ட வாக்கியம் எது?
கிளியைத் துரத்திப் பிடித்தது.
உயர்ந்த மலையில் ஏறினான்.
தம்பி விளையாடியதால் களைத்துப் போனான்.
பறவைகள் வானில் பறந்தன.
வேறுபட்ட புணர்ச்சியைக் கொண்ட சொல்,
மரப்பட்டை
மரத்தொட்டில்
மனவேதனை
குளக்கரை
"அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை" இங்கு அழுவான் என்பது,
காரணப்பெயர்
இடுகுறிப்பெயர்
வினையாலனையும்பெயர்
குறிப்பு வினைமுற்று
இணைப்பிடைச் சொல்லின் பின் காற்புள்ளி இடப்படும் என்பதற்கு உதாரணம்,
கண்ணே,கலங்குவது ஏன்?
இனி, ஆக வேண்டிய கருமங்களைக் கவனிப்போம்.
கண்ணன், கர்ணனிடம் பாண்டவருக்காகத் தூது போனான்.
தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம், சமயம், ஆங்கிலம் என்பன கருப்பாடங்களாகும்.
பூங்குழல் இனிமையாகப் பாடினாள். இங்கு பூங்குழல் என்பது,
அன்மொழித்தொகை
வேற்றுமைத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது ............ நிறைவேற்றப்பட்டது.
உடன்படிக்கை
சுற்றுநிரூபம்
திருத்தச்சட்டம்
வேட்புமனு
பாடசாலைக்கு வருகை தந்த பணிப்பாளர்............. புத்தகத்தில் நிறைகளை எழுதிச் சென்றார்.
பாடப்பதிவு
வரவு இடாப்பு
சம்பவத்திரட்டு
வர்த்தமானி
நிதியாண்டிலே தமது அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாதெனக் காரணங்காட்டி, ஆண்டின் நடுப்பகுதியில் ............... பிரேரணையை அமைச்சர் சமர்ப்பித்தார்.
குறைநிரப்பு
மிகையூதிய
துண்டுவிழும்
மிகைச்செலவு
ஒரு வேலையைக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றித் தருவதாக ஒருவருக்கு......... அளித்தால் அதனை மீறக் கூடாது.
ஒப்பந்தம்
ஒப்படை
உச்சவரம்பு
உத்தரவாதம்
கடும் மழை பொழிந்ததனால் குளங்கள்............. .
எல்லாம் நிறைந்தது
ஒவ்வொன்றும் நிறைந்தது
எல்லாம் நிறைந்தன
ஒவ்வொன்றாக நிறைந்தன
நானா நீயா யார் இதைச்...........
செய்தீர்
செய்தது
செய்தாய்
செய்தார்
தமக்குத் தீமை செய்வோரையும் மன்னிக்கும் பண்பைக் குறிக்கப் பொருத்தமான உவமைத்தொடர்,
தேடிய பூண்டு காலிலே அகப்பட்டது போல
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
ஏரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல
'மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருத்தல்' என்பதை விளக்கப் பொருத்தமான அருஞ்சொற்றொடர்,
வழி மேல் விழி வைத்து
ஊன் உறக்கமின்றி
உள்ளும் புறமுமொத்து
அருமை பெருமையறியாதுழன்று
நளன், தமயந்தியைக் காட்டில் தன்னந்தனியாக விட்டுச் சென்றான். தன்னந்தனி என்பது,
இரட்டைமொழி
இணைமொழி
அடுக்குமொழி
அடுக்கிடுக்குத்தொடர்
கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றி காணப்படுகின்றன. அவற்றை ஒழுங்கு பெற வைத்தால் கட்டுக்கோப்பான பந்தி ஒன்று அமையும். அதற்கேற்ற பொருத்தமான வைப்பு முறையைத் தெரிக.
(அ) நம்மில் பலருக்கு சமூகப்பிரஞை அதிகமாகவே இருக்கின்றது.
(ஆ) எனவே சமூகம் என்பது நம்மில் பிரிந்து நிற்கும் வேறென்றல்ல.
(இ) மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்.
(ஈ) நமக்கு சமூகம் உதவுவது போல நாமும் சமூகத்திற்கு உதவ வேண்டியது எமது கடமையாகும்.
(உ) நாமே நம்மை முன்னேற்றிக் கொள்ளும் போது சமூகமும் முன்னேறுகிறது.
ஈ , இ , ஆ , உ , அ
இ , ஆ , ஈ , உ , அ
இ , அ , ஆ , உ , ஈ
அ , உ , ஈ , ஆ , இ
"வேறவனி பண்டாட வேந்தரை யிழித்து" என்பதை சந்திபிரித்து எழுதினால் வருவது (a) (1 வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை இழித்து / 2 வேர் அவனி பண்டா ஆண்ட வேந்தரை இழித்து)
இலட்சியம் என்பதன் பொருள் (a) ஆகும். (1சமநிலை / 2 கொள்கை)
ஈடேறுதல் என்ற மரபுத் தொடரின் பொருள் (a) ஆகும். (1 முயற்சித்தல் / 2 முன்னேறுதல்)
நிகழ்ச்சிகள் யாவற்றையும் (a) வழிபாட்டுடன் ஆரம்பிப்பது இந்துக்களின் மரபாகும். (1 இறை / 2 இரை)
மேற்கு + திசை என்பதை புணர்த்தி எழுதினால் வருவது (a) . ( 1 மேற்குத்திசை / 2 மேற்றிசை)
"தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டேன் நுகரா மண்டூகம்" எனும் பாடலடி இடம்பெறும் இலக்கியம் (a) ஆகும். (1 விவேக சிந்தாமணி / 2 வெற்றி வேட்கை)
மண்டூகம் என்பது (a) குறிக்கும். (1 ஓணான் / 2 தவளை)
பீழை என்பது (a) குறிக்கும். ( 1துன்பத்தைக் / 2 இன்பத்தைக்)
(a) அட்சய இருதயக் கலையிற் சிறந்த மன்னனாக் குறிப்பிடப்பட்டவராவார். (1 இருதுபர்ணன் / 2 நளன்)
(a) "மூன்று உலகையும் ஈன்றன்"என அழைக்கப்பட்டான். (1 இராமன் / 2 பிரம்மன்)
