wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதி 4 எச்சம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அம்மா சமைப்பதற்கு _______________ காய்கறிகளை வாங்கச் சந்தைக்குச் சென்றார்.

a)

அளவான

b)

அதிகமான

c)

தேவையான

d)

விருப்பமான

2.

ஆசிரியர் தம் மாணவர்களின் _____________அறிவுத்திறனைப் பாராட்டினார்.

a)

நுட்பமாக

b)

நுட்பமான

c)

நுட்பமாய்

d)

நுட்பமாகிய

3.

விண்ணை நோக்கிப் _____________ விமானம் பார்க்க சிறியதாகக் காட்சியளித்தது.

a)

பறக்க

b)

பறந்த

c)

பறக்கிற

d)

பறந்தும்

4.

_______________ எண்ணங்களைக் கொண்ட மக்கள் தம் அண்டைவீட்டாரின் நலனில் அக்கறை செலுத்துவர்.

a)

உயர்வான

b)

உயர்வாக

c)

உயர்வாய்

d)

உயர்வாகிய

5.

இளமாறன் தன் நண்பனை _______________ பேசியதால் அவர்களுக்கிடையே மனவருத்தம் ஏற்பட்டது.

a)

இழிவாகி

b)

இழிவாக

c)

இழிவான

d)

இழிவாகிய

6.

ஊனம் தடையன்று என்பதற்கு ஒரு முன்மாதிரியாக _________________கெல்லர்,

பல சாதனைகளைப் படைத்தார்.

a)

நின்ற

b)

சார்ந்த

c)

எழுந்த

d)

திகழ்ந்த

7.

முதியோர் இல்லங்களைப் பராமரிக்கவும் அங்கே உள்ளவர்களை மகிழ்விக்கவும், அன்பும்

கருணையும் _____________________ மனிதர்கள் தேவை.


a)

ஏற்பட்ட

b)

கொண்ட

c)

விளங்கிய

d)

உண்டாக்கிய

8.

‘காலப்பொறியில் பயணம்’ என்ற தலைப்பில் என் தோழன் எழுதிய _____________________

கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.

a)

அற்புதமான

b)

அற்புதமாக

c)

அற்புதமாகி

d)

அற்புதமாகிய

9.

பெற்றோர் தம் பிள்ளைகளைக் கண்ணை இமை காப்பதுபோல _____________________ வளர்ப்பர்.

a)

பாதுகாத்த

b)

பாதுகாத்து

c)

பாதுகாக்கிற

d)

பாதுகாக்கும்

10.

ஓய்வில்லாமல் _____________________ உழைத்த விவசாயி இறுதியில் தம் நிலத்தில் நல்ல விளைச்சலைக் கண்டு மகிழ்ந்தார்.

a)

இறுக

b)

மந்தமாக

c)

கடுமையாக

d)

மென்மையாக