NEW
Font size
Worksheets+1 கணக்குப்பதிவியல் பாடம்:- 1 & 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
(அ) சமூகக் கணக்கியல்
(ஆ) காரியதரிசிகளின் கணக்கியல்
(இ) மேலாண்மைக் கணக்கியல்
(ஈ) பொறுப்பு கணக்கியல்
2. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது.
(அ) நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
(ஆ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
(இ) நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
(ஈ) வரி விதிக்கும் அதிகாரிகளிடம் வரித் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்
3. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
(அ) நிதிநிலைக் கணக்கியல்
(ஆ) மேலாண்மைக் கணக்கியல்
(இ) மனிதவளக் கணக்கியல்
(ஈ) மேற்கண்ட ஏதுமில்லை.
4. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படை யாது?
(அ) குறிப்பேடு
(ஆ) இருப்பாய்வு
(இ) இருப்புநிலைக் குறிப்பு
(ஈ) பேரேடு
5. நிதித் தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
(அ) கடனீந்தோர்
(ஆ) பணியாளர்
(இ) வாடிக்கையாளர்
(ஈ) அரசு
6. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
(அ) பண மதிப்பீட்டுக் கருத்து
(ஆ) அடக்கவிலை கருத்து
(இ) வணிகத் தனித்ன்மை கருத்து
(ஈ) இரட்டைத்தன்மை கருத்து
7. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
(அ) வணிக தனித்தன்மை கருத்து
(ஆ) நிறுவன தொடர்ச்சி கருத்து
(இ) கணக்கியல் கால அனுமனம்
(ஈ) முன்னெச்சரிக்கை கொள்கை
8. GAAP என்பது
(அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
(ஆ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
(இ)பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
(ஈ) இவற்றுள் ஏதுமில்லை.
9. இறுதி சரக்கிருப்பு, அடக்கவிலை அல்லது விற்று ஈட்டக் கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு.
(அ) முக்கியத்துவ மரபு
(ஆ) பணமதிப்பீட்டுக் கருத்து
(இ) முன்னெச்சரிக்கை மரபு
(ஈ) நிகழ்வு தீர்வு கருத்து
10. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
(அ) இந்திய மைய வங்கி
(ஆ) இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
(இ) உச்ச நீதிமன்றம்
(ஈ) இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்.
