wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1 (மொழியணிகள் - இணைமொழி மரபுத்தொடர்)

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அ. உயர்வு தாழ்வு

b)

ஆ. தங்கு தடை

c)

இ. நோய் நொடி

d)

ஈ. கள்ளங்கபடு

2.

2. 'கோவிட் 19' பெருந்தொற்றை முழுமையாக ஒழிக்க அரசாங்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் ________________ உதவ வேண்டும்.

a)

அ. ஏட்டிக்குப் போட்டியாக

b)

ஆ. வாழையடி வாழையாக

c)

இ. தோள் கொடுத்து

d)

ஈ. வெட்டிப் பேச்சு பேசி

3.

3. கீழ்க்காணும் இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

அகமும் புறமும்

a)

அ. மன உணர்வும் வஞ்சக எண்ணமும்

b)

ஆ. பாகுபாடும் வெளித்தோற்றமும்

c)

இ. பாகுபாடும் வஞ்சக எண்ணமும்

d)

ஈ. மன உணர்வும் வெளித்தோற்றமும்

4.

4. எந்த ஓர் இடர் வந்தாலும் தன் தோழன் தனக்குத் ___________________ உதவுவான் என்று நம்பிக்கையுடன் தனது முயற்சியைத் தொடர்ந்தான் ரிஷி.

a)

அ. வெட்டிப் பேச்சு பேசி

b)

ஆ. ஏட்டிக்குப் போட்டியாக

c)

இ. அரைப்படிப்பு படித்து

d)

ஈ. தோள் கொடுத்து

5.

5. வீட்டிலிருக்கும்போது அம்மாவுடன் ___________________ பேசிக்கொண்டிருந்த குகன், பல்கலைக்கழக விடுதியில் தனிமையில் இருக்கும்போதுதான் அம்மாவின் அருமையை உணர்ந்தான்.

a)

அ. ஏட்டிக்குப் போட்டியாக

b)

ஆ. வாழையடி வாழையாக

c)

இ. தோள் கொடுத்து

d)

ஈ. வெட்டிப் பேச்சு

6.

6. நீர்த்தூய்மைக் கேட்டினால் ஏற்பட்ட குடிநீர் விநியோகத்தடையைச் சீர் செய்தபின் மக்களுக்கு நீர்விநியோகம் ________________________ இன்றி கிடைக்கும் என்றார் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்.

a)

அ. நோய் நொடி

b)

ஆ. உயர்வு தாழ்வு

c)

இ. தங்குதடை

d)

ஈ. கள்ளங்கபடு

7.

7. கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.

a)

அ. தங்கு தடை

b)

ஆ. அகமும் புறமும்

c)

இ. கள்ளங்கபடு

d)

ஈ. உயர்வு தாழ்வு

8.

8. தமிழ்மொழிக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த சொற்போர் நிகழ்ச்சி ________________ இன்றி சிறப்புற நடந்து முடிந்தது.

a)

அ. தங்கு தடை

b)

ஆ. உயர்வு தாழ்வு

c)

இ. நோய் நொடி

d)

ஈ. கள்ளங்கபடு

9.

9. கிரவர்மனின் பிறந்தநாளன்று தாத்தா பாட்டி அவனை ____________________ இன்றி நீண்டகாலம் வாழுமாறு வாழ்த்தினர்.

a)

அ. உயர்வு தாழ்வு

b)

ஆ. தங்கு தடை

c)

இ. நோய் நொடி

d)

ஈ. கள்ளங்கபடு

10.

10. வகுப்பில் ______________________ பேசியே காலத்தை வெறுமனே கழித்த தங்கம் தேர்வில் சிறந்த தேர்ச்சியடைவதில் கோட்டைவிட்டாள்.

a)

அ. வெட்டிப் பேச்சு

b)

ஆ. அரைப்படிப்பு

c)

இ. வாழையடி வாழை

d)

ஈ. தோள் கொடுத்தல்

11.

11. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அ. உயர்வு தாழ்வு

b)

ஆ. அகமும் புறமும்

c)

இ. நோய் நொடி

d)

ஈ. கள்ளங்கபடு

12.

12. கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


ஏட்டுக்குப் போட்டி

a)

அ. வீண் பேச்சு

b)

ஆ. விதண்டாவாதம்

c)

இ. நிரம்பாக் கல்வி

d)

ஈ. உதவி செய்தல்

13.

13. உணவு, உடற்பயிற்சி மற்றும் அளவான உறக்கம் நாம் _____________ வாழ வழி வகுக்கும்.

a)

அ. உயர்வு தாழ்வின்றி

b)

ஆ. தங்கு தடையின்றி

c)

இ. நோய் நொடியின்றி

d)

ஈ. கள்ளங்கபடின்றி

14.

14. தன் மகளின் திருமணம் எந்தவொரு _______________ இல்லாமல் நடந்து முடிந்ததை எண்ணி திரு.பிரவின் மனமகிழ்ச்சி அடைந்தார்.

a)

அ. உயர்வு தாழ்வும்

b)

ஆ. நோய் நொடியும்

c)

இ. தங்கு தடையும்

d)

ஈ. அகமும் புறமும்

15.

15. ___________________ வரும் நம் பாரம்பரிய உணவுப்பழக்கம் நம்மைப் பல கொடிய கிருமித் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

a)

அ. ஏட்டிக்குப் போட்டியாக

b)

ஆ. வாழையடி வாழையாக

c)

இ. தோள் கொடுத்து

d)

ஈ. வெட்டிப் பேச்சு பேசி