wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 3

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளுக்கேற்ற சூழலைத் தெரிவு செய்க.


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். (202)

a)

இராமு பல்வகையான புத்தகங்களைத் தேடிப் படித்தான். அதனால், அவனின் அறிவு தொடர்ந்து வளர்ந்தது.

b)

இராணி மருத்துவராக வேண்டும் என்று எண்ணம் கொண்டாள். அதனால், அவள் அத்துறை சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினாள்.

c)

வருண் சிறு வயது முதலே புகைப் பிடித்தலானது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்தும் அதைப் பழக்கமாகக் கொண்டிருந்தான். அதனால், அவன் முதுமை காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்.

2.

திருக்குறளுக்கேற்ற சூழலைத் தெரிவு செய்க.


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். (202)

a)

இராமு கற்கத் தகுந்த பல நூல்களைக் கற்றான். பின்பு, வாழ்நாளில் அதிலுள்ள கருத்துப்படி நடந்து கொண்டான்.

b)

மாலா கடைக்குச் சென்று சில பொருட்களைத் திருடினாள். ஆனால், கடையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அக்கடையின் முதலாளியால் கண்டு பிடிக்கப்பட்டுக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

3.

திருக்குறளுக்கேற்ற சூழலைத் தெரிவு செய்க.


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். (202)

a)

இராமு தன் நண்பனின் புத்தகத்தைக் கிழித்து வகுப்பிற்கு வெளியே வீசினான். பிறகு, அவனுடைய புத்தகத்தின்மீது அவனின் இன்னொரு நண்பன் தெரியாமல் தண்ணீரை ஊற்றிவிட்டதால் அப்புத்தகம் பயன்படுத்த முடியாமல் போனது.

b)

பேசுவதற்குப் பல இனிய சொற்கள் இருப்பினும் அருண் கடுஞ்சொற்களையே அதிகம் பயன்படுத்திப் பேசி வந்தான்.

c)

ஜோன் தன் நண்பனான ஜேம்ஸ் தனக்குச் செய்த அனைத்து நல்லவற்றையும் மறந்துவிட்டான். ஆனால், அவன் ஜேம்ஸ் செய்த ஒரு தவறான விஷயத்தைப் பற்றி மட்டும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தான்.