wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடர் வாக்கியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்ணன் சிறந்த கொடையாளி மட்டுமல்லன்; சிறந்த போர் வீரனும் ஆவான்.


இது எந்த வகை வாக்கியம்?

a)

தனி

b)

தொடர்

c)

கலவை

d)

செய்தி

2.

எவை தொடர் வாக்கியம்?

a)

மணிமேகலை அமுதசுரபி பெற்றாள்.

b)

நளன் நிடதநாட்டை ஆண்டான்.

c)

கோவலன் காற்சிலம்பைப் பெற்றான்; மதுரைக்குப் புறப்பட்டான்.

d)

வள்ளலார் வாடிய பயிரைக் கண்டார்; மனம் வருந்தினார்.

3.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு தொடர் வாக்கியங்களை அடையாளம் காண்க.

தேன்மொழி – படித்தாள் – தேர்வில் – வெற்றி

a)

தேன்மொழி நன்றாக படித்தாள். ஆகையால், பள்ளி தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்று, வெற்றி பெற்றாள்.

b)

தேன்மொழி படித்து பள்ளி தேர்வில் வெற்றி பெற்றாள்.

c)

தேன்மொழி நன்றாக படித்தாள். தேர்வில் வெற்றி பெற்றாள்.

4.

தர்மன் – வசதி குறைந்த – மிகவும் புத்திசாலி

a)

தர்மன் வசதி குறைந்த மாணவன். ஆகையால், அவன் மிகவும் புத்திசாலி

b)

தர்மன் வசதி குறைந்த மாணவன். இருப்பினும் வகுப்பில் புத்திசாலியான மாணவனாக திகழ்கிறான்.

c)

தர்மன் வசதி குறைந்த மாணவன். இருப்பினும் அவன் புத்திசாலி.

5.

மேற்காணும் படத்தைத் தொடர்புப்படுத்தும் சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பாலன் காலையில் எழுந்தான்; குளிந்தான்.

b)

பாலன் காலையில் எழுந்து குளித்தான்.

c)

பாலன் காலையில் எழுந்தான், பல் துலக்கினான், குளித்தான்.

d)

பாலன் காலையில் எழுந்தான் ; பல் துலக்கினான்; குளித்தான்.

6.

காலியான இடத்தை நிரப்புக.


நாம் குப்பைகளைத் திறந்த வெளியில் எரிக்கக்கூடாது. _______________________ காற்றுத்தூய்மைக்கேடு நிகழும்.

a)

எனவே

b)

ஆகையால்

c)

ஆனால்

d)

ஏனெனில்

7.

கீழ்காணும் வாக்கியங்களில் எது தொடர் வாக்கியம்?

a)

மரங்களை வெட்டுதல் கூடாது. ஏனெனில், மரங்களால் நிறைய நன்மைகள் உள்ளன.

b)

அம்மா கடைக்குச் சென்றார்.

c)

நீ எங்குச் சென்றாய்?

d)

தயவு செய்து வெளியே செல்லுங்கள்.

8.

கீழ்காணும் தனி வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றியமைத்திடுக.


மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அவள் மருத்துவரை நாடினாள்.

a)

மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. ஏனெனில், அவள் மருத்துவரை நாடினாள்.

b)

மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. ஆனால், அவள் மருத்துவரை நாடினாள்.

c)

மாலதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. ஆகையால், அவள் மருத்துவரை நாடினாள்.

9.

கீழ்காணும் வாக்கியங்களில் தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாலா பரதம் ஆடினாள்.

b)

மீனா கட்டுரை எழுதினான்.

c)

அமுதனுக்கு நோய் கண்டது. ஏனெனில், அவன் அசுத்தமான இடங்களில் விளையாடுவான்.

d)

அண்ணன் சுற்றுலா சென்றார்.

10.

கீழ்காணும் தொடர் வாக்கியங்களுக்கேற்ற படத்தைத் தேர்ந்தெடுக.


கபிலன் விபத்துக்குள்ளனான்; கபிலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

a)
b)
c)
d)