NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காண்பவனவற்றுள் எது தவறான இணை ?
ஆத்திச்சூடி - ஔவையார்
உலகநீதி - உலகநாத பண்டிதர்
வெற்றி வேற்கை - உலகநாத பண்டிதர்
புதிய ஆத்திச்சூடி - பாரதியார்
உவமைத் தொடரின் சரியான பொருள் எது?
சிலை மேல் எழுத்து போல
எப்பொழுதும் ஒற்றுமையாக இருத்தல்
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல்
மனத்தில் அழியாமல் பதிந்திருத்தல்
சண்டையிட்டுக் கொள்ளுதல்
தாயார் வாங்கிய வெள்ளிப் பாத்திரங்கள் ------------- வென மின்னின
சர சர
தக தக
பள பள
மட மட
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சுண்டெலியை அற்பமான உயிர் எனச் சிங்கம் நினைத்தது. ஆனால், சிங்கம் வலையில்
சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான் காப்பாற்றியது.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
ஐந்தில் வலையாதது ஐம்பதில் வளையுமா?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
திருமண வீடுகளில் வாழை மரம் கட்டுவது இந்தியர்களின் ________________________ வரும் பழக்கமாகும்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
கரி பூசுதல்
கரைத்துக் குடித்தல்
கண்ணினைக் காக்கும் இமை போல
எலியும் பூனையும் போல
காட்டுத் தீ போல
சிலை மேல் எழுத்து போல
வழித் தவறிய சுகன் பாதை தெரியாது _____________வென விழித்தான்.
கடு கடு
திரு திரு
சர சர
பள பள
கீழ்க்காணும் செய்யுளை நிரல்படுத்துக.
i
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
ii
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
iii
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
iv
மானம் அழிந்து மதிகெட்டுப்- போனதிசை
ii , iv , iii , i
iv , iii , ii , i
ii , iii , iv , I
iv , ii ,iii, , i
இராமன் கங்கை கரைக்குச் சென்று, குகனைச் சந்தித்தார்.
முதலாம் , நான்காம்
நான்காம் , ஐந்தாம்
இரண்டாம் , நான்காம்
நான்காம், இரண்டாம்
கீழ்காண்பனவற்றுள் எது தொடர் வாக்கியம்?
தேவன்ராஜ் பாடங்களை முறையாகப் படித்தான்.
கிஷன்குமார் வேகமாக ஓடினான்.
இளவரசியும் கீர்த்திகாவும் தண்டனைப் பெற்றனர்.
காகம் பறந்து வந்து வடையைக் கொத்திச் சென்றது.
உடல் நலத்தைப் பாதுகாக்க எல்லா வகைகளிலும் முயற்சி செய் ________ உடல் நலம் கெட்டால் மகிழ்ச்சி இல்லாமல் போய் விடும்_____
“ ” ?
; .
: .
: !
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் இலக்கணப் பிழையை அடையாளங்காணுக.
மாலினி தோட்டத்தில் பூக்களைப் பரித்தாள்
மாலினி
தோட்டத்தில்
பூக்களைப்
பரித்தாள்
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
_____________________________________________________.
தோன்றலின் தோன்றாமை நன்று.
கற்றனைத் தூறும் அறிவு
தெய்வத்துள் வைக்கப் படும்.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் இயல்பாக புணர்ந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.
சேஷிணி இறைவனுக்கு மலர்மாலை தொடுத்துச் சூட்டினாள்.
இறைவனுக்கு
மலர்மாலை
தொடுத்து
சூட்டினாள்
வலிமிகுந்து எழுதுக.
குழந்தையை + தூக்கினார் =
குழந்தையைக் தூக்கினார்
குழந்தையைத் தூக்கினார்
குழந்தையைச் தூக்கினார்
குழந்தையைப் தூக்கினார்
