wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பழமொழி : இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து


விளக்கம் :

a)

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.

b)

இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து ஆழியாதிருப்பதைப் போல மனத்தில் நிலைத்திருக்கும்.

c)

எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

d)

ஒருவருடைய மன உணர்வை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.

2.

பழமொழி :


விளக்கம் : நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

d)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

3.

பழமொழி : ஆத்திரக்காறனுக்குப் புத்தி மட்டு


விளக்கம் :

a)

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

b)

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

c)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்து கற்றுக் கொள்ளலாம் முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

d)

ஒரு குழந்தை சிறு வயதினிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

4.

பழமொழி :


விளக்கம் : ஒவ்வொருவருக்கும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

c)

ஊருடன் கூடி வாழ்

d)

முயற்சியுடையோர் இகழச்சியடையார்

5.

பழமொழி : முயற்சியுடையோர் இகழச்சியடையார்


விளக்கம் :

a)

எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

b)

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

c)

ஒரு குழந்தை சிறு வயதினிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

d)

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

6.

பழமொழி :


விளக்கம் : சிறுகச் சிறுக சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

ஊருடன் கூடி வாழ்

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

d)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

7.

பழமொழி : கடவுளை நம்பினோர் கைவிடப்படார்


விளக்கம் :

a)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு கடவுள் என்றும் துணையிருப்பார்.

b)

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

c)

ஒரு குழந்தை சிறு வயதினிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

d)

எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

8.

பழமொழி :


விளக்கம் : உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

c)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

d)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

9.

பழமொழி : காற்றுள்ள போதே தூற்றிக் கொள்


விளக்கம் :

a)

நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

b)

தேவையற்ற அல்லது அற்புதமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

c)

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்து கொள்வர்.

d)

கிடைக்கும் வாய்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

10.

பழமொழி :


விளக்கம் : வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

c)

வெள்ளம் வருமுன் அணைபோடு

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

11.

பழமொழி : அவனன்றி ஒரணவும் அசையாது


விளக்கம் :

a)

குற்றத்திற்கு காரணகர்த்தாவாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

b)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

c)

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.

d)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

12.

பழமொழி :


விளக்கம் : நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

d)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

13.

பழமொழி : வருந்தினால் வாராது இல்லை


விளக்கம் :

a)

உதவி செய்தவருக்கு அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.

b)

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

c)

ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துக்கொள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை.

d)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

14.

பழமொழி :


விளக்கம் : நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

முன் வைத்த காலை பின் வைக்கதே

c)

அவனன்றி ஒரணவும் அசையாது

d)

தனிமரம் தோப்பாகாது

15.

பழமொழி : நிழலின் அருமை வெயிலில் தெரியும்


விளக்கம் :

a)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

b)

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

c)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

d)

கிடைக்கும் வாய்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.