NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்கள்/ இணைமொழிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
சிங்கப்பூரின் ஒற்றுமையை விரும்பும் ஒவ்வொருவரும் ____________________ அன்புடன் பழக வேண்டும்
அக்கம் பக்கத்தினருடன்
உற்றார் உறவினருடன்
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
கலா ஆசிரியர் கொடுத்த நாளுக்குள் திட்டவேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ___________________.
அள்ளியிறைத்தாள்
தட்டிக் கழித்தாள்
ஆறப்போட்டாள்
இடங்கொடுத்தாள்
விவாதப்போட்டியில் தனது கருத்துகளை ___________________ எடுத்துரைத்து பரிசுகளைப் பெற்ற கண்ணனை ஆசிரியர் பாராட்டினார்.
சீரும் சிறப்புமாக
ஆணித்தரமாக
தப்பும் தவறுமாக
கண்மூடித்தனமாக
பெற்றோர்கள் தமது குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ___________________ உழைத்துப் பணம் சேர்க்கின்றனர்.
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
அறக்கப் பறக்க
கண்மூடித்தனமாக
தனது தோழிகளுடன் எப்போதும் ___________________ பேசி சண்டைபோடுவதைச் செல்வி வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
கண்மூடித்தனமாக
ஏட்டிக்குப் போட்டியாக
அரை குறையாக
ஆணித்தரமாக
புதிர் போட்டியில் கேள்விகளை முழுமையாகப் படிப்பதற்குள் _____________________ பதில் அளித்ததால் கமலாவின் குழு தோல்வியுற்றது.
அவசரக்குடுக்கையாக
ஏட்டிக்குப் போட்டியாக
அரை குறையாக
ஆறவமர
நான் செய்த ஒரு சிறு தவற்றினால் என் மாமா குடும்பமும் அண்ணி குடும்பமும் _________________ .
தட்டிக்கேட்டது
இழுத்தடித்தது
தட்டிப்பறித்தது
இரண்டுபட்டது
பள்ளி மாணவர்களை அவ்வப்போது __________ மேலும் நன்றாகப் படிப்பார்கள்.
தட்டிக்கேட்டால்
இழுத்தடித்தால்
தட்டிக் கொடுத்தால்
தட்டிப் பறித்தால்
பள்ளிக்குச் செல்லாமல் கடைத்தொகுதிப் பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்த கமலா தன் தந்தையைப் பார்த்ததும் __________________ .
ஓட்டம் பிடித்தாள்
இனிக்கப் பேசினால்
தட்டிக் கொடுத்தாள்
தட்டிப் பறித்தாள்
மாலா ___________________ பாடங்களைப் படித்ததால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடிமால் சிரமப்பட்டாள்.
ஓய்வு ஒழிச்சலின்றி
குருட்டுப் பாடமாக
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
