NEW
Font size
Worksheetsவினா விடை - இலக்கணம்
Total questions: 16
Worksheet time: 8mins
வினா எத்தனை வகைப்படும்?
2
3
5
6
விடை எத்தனை வகைப்படும்?
2
4
6
8
தனக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்க்குத் தெரியுமா என்று அறிந்து கொள்ளக் கேட்படும் வினா எது?
அறிவினா
அறியா வினா
ஐய வினா
கொடை வினா
தான் தெரியாத ஒன்றை பிறரிடம் அறிந்து கொள்வதற்காக கேட்கப்படும் வினா
ஐய வினா
அறியா வினா
அறிவினா
ஏவல் வினா
தனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைக் (சந்தேகம்) தீர்த்துக் கொள்வதற்கு கேட்கப்படும் வினா
அறிவினா
அறியா வினா
ஐய வினா
ஏவல் வினா
ஒரு பொருளை கொள்வதற்கு (வாங்குவதற்கு) கேட்கப்படும் வினா
அறி வினா
அறியா வினா
ஐய வினா
கொளல் வினா
ஒன்றை மற்றவர்க்குக் கொடுப்பதற்கு கேட்கப்படும் வினா
ஐய வினா
அறியா வினா
அறிவினா
கொடை வினா
ஒன்றைச் செய்யும்படியாக மற்றவை ஏவுவது -
(எ.கா.) இன்று தமிழ்ப் பாடப்புத்தகம் கொண்டு வந்தீர்களா? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டல்
அறியா வினா
அறி வினா
ஏவல் வினா
ஐய வினா
ஒன்றை சுட்டிக்காட்டி விடை கூறுவது - சுட்டு விடை
(எ.கா.) மதுரைக்கு செல்லும் வழி யாது? என்று கேட்டால் "இது" என்று அவ்வழியைச் சுட்டிக்காட்டல்
நேர் விடை
மறை விடை
சுட்டு விடை
வினா எதிர் வினாதல் விடை
நாளை அலுவலகத்திற்கு வருவாயா? என்று கேட்கப்படும் வினாவிற்கு "வரமாட்ன்" என விடை கூறுதல்
சுட்டு விடை
மறை விடை
நேர் விடை
உற்றது உரைத்தல் விடை
நாளை ஊருக்குச் செல்வாயா? என்று கேட்கப்படும் வினாவிற்கு "செல்வேன்" என்று விடை கூறுதல்
சுட்டு விடை
நேர் விடை
மறை விடை
வினா எதிர் வினாதல் விடை
இப்புத்தகத்தைப் படிப்பாயா? என்னும் வினாவிற்கு "நீயே படி" என்று கூறுவது
சுட்டு விடை
மறை விடை
வினா எதிர் வினாதல் விடை
ஏவல் விடை
நீ திரைப்படத்திற்கு வருவாயா? என்னும் வினாவிற்கு "வராமலிருப்பேனா"? என்று விடையளித்தல்
சுட்டு விடை
மறை விடை
வினா எதிர் வினாதல் விடை
நேர் விடை
நீ ஏன் வரவில்லை? என்னும் வினாவிற்கு " வயிறு வலித்தது" என தனக்கு உற்றதை உரைத்தல்
வினா எதிர் வினாதல் விடை
ஏவல் விடை
சுட்டு விடை
உற்றது உரைத்தல் விடை
வெறுங்காலால் தரையை உதைப்பாயோ? என்ற வினாவிற்கு "கால் வலிக்கும்" என தனக்கு நேர இருப்பதைக் கூறுதல்
சுட்டு விடை
மறை விடை
உறுவது கூறல் விடை
நேர் விடை
உழுந்து உளதோ வணிகரே? என்ற வினாவிற்கு "பருப்பு உளது" என இனமான பொருளைக் கூறுதல்.
சுட்டு விடை
உற்றது உரைத்தல் விடை
இனமொழி விடை
மறை விடை
