Worksheetsமரபுத்தொடர்கள் /இணைமொழிகள்
Total questions: 15
Worksheet time: 8mins
நம் நாட்டிற்கு வரும் சுற்றுப்பயணிகள் நம் நாட்டின் __________ மதித்து நடக்கிறார்கள்.
உற்றார் உறவினர்
சட்ட திட்டத்தை
சீராட்டிப் பாராட்டி
கனவோ நனவோ
குமரன் வகுப்பறையில் தன் கருத்துக்களை __(______)___ கூறுவதால் ஆசிரியர்
விவாதப் போட்டிக்கு அவனைத் தேர்வுசெய்தார்.
கதை கட்டி
ஓய்வு ஒழிச்சலின்றி
ஆறப் போட்டு
ஆணித்தரமாக
அகிலனின் சாதாரணநிலைத் தேர்வின் முடிவுகளை அறிய விரும்பிய அவனின்
தாயார் தன் மகன் வீடு திரும்பக் காலதாமதம் ஆனதால் செய்வதறியாது
வீட்டுக்கூடத்தில் ___________________ நடந்துகொண்டிருந்தார்.
ஆணித்தரமாக
ஓய்வு ஒழிச்சலின்றி
குறுக்கும் நெடுக்குமாக
கூச்சல் குழப்பத்தோடு
திரு லீ குவான் யூ நம் நாட்டிற்காகவும் மக்களுக்காவும் செய்த தியாகங்களை எவராலும் ______________ முடியாது.
கதை கட்ட
காட்டிக் கொடுக்க
இனிக்கப் பேச
ஈடுகட்ட
குழந்தைகளின் ______________ இல்லாத சிரிப்பு அனைவரின் மனத்தையும் கவர்ந்து மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.
ஆணித்தரம்
கள்ளம் கபடு
உற்றார் உறவினர்
சீரும் சிறப்பும்
வீட்டுப்பாடங்களை ______________ உடனுக்குடன் செய்துகொடுக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
காட்டிக் கொடுக்காமல்
குருட்டுப் பாடமாக
ஆறப்போடாமல்
காக்கை பிடித்து
கலவரம் நடந்த இடத்தில் ______________ இருந்ததால் காவலர்கள் மிகவும் சிரமப்பட்டு மக்களை அமைதிப்படுத்தினார்கள்.
கூச்சல் குழப்பமாக
சீரும் சிறப்புமாக
உற்றார் உறவினர்
குறுக்கும் நெடுக்குமாக
ஒரு சிலர் தமக்குப் பிடிக்காதவர்களை மேலதிகாரிகளிடம் ______________ வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
காக்கை பிடிப்பதை
கதை கட்டுவதை
இனிக்கப் பேசுவதை
காட்டிக்கொடுப்பதை
___________________________ பணம் பறிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காட்டிக் கொடுத்து
இனிக்கப் பேசி
காக்கை பிடித்து
ஆணித்தரமாக
இருபது ஆண்டுகளுக்குப் பின் தம் மகனைச் சந்தித்த திருமதி செல்விக்கு இது
_________________ என்று கூற முடியாத அளவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
கை கூடும்
சீரும் சிறப்பும்
கனவோ நனவோ
உற்றார் உறவினர்
விமலா பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் பாடம் படித்துக் கொண்டிருந்ததாக ஆசிரியரிடம் _____________ முயன்றாள்.
இனிக்கப் பேச
காட்டிக் கொடுக்க
கதைகட்ட
காக்கை பிடிக்க
அலுவலக மேலாளரிடம் ____________ தன் காரியங்களைச் சாதித்துக்கொள்வது விமலாவின் வழக்கம்.
இனிக்கப் பேசி
காக்கை பிடித்து
காட்டிக் கொடுத்து
கதை கட்டி
நள்ளிரவாகியும் தன் மகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்து
ரமா, தன் வீட்டில் ____________ நடந்துகொண்டிருந்தாள்.
ஆணித்தரமாக
கள்ளம் கபடு இன்றி
குறுக்கும் நெடுக்குமாக
கூச்சல் குழப்பதுடன்
கலா எப்போதும் ____________ படிப்பதால் அவளால் பாடத்தை நினைவு
வைத்து வெற்றியடைய முடியவில்லை.
ஆறப் போட்டு
குருட்டுப் பாடமாக
கதை கட்டி
ஈடு கட்டி
மாறன் எப்பொழுதும் பிறரைப்பற்றி _____________ வழக்கமாகக் கொண்டிருப்பதால் அவன் கூறும் எதையும் அவனுடைய வகுப்பு மாணவர்கள் நம்புவதில்லை.
இனிக்கப் பேசுவதை
காட்டிக் கொடுப்பதை
காக்கை பிடிப்பதை
கதை கட்டுவதை
