Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th மாதாந்திரத் தேர்வு -1 (JUNE_2021)

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர்__________

a)

நாமக்கல் கவிஞர்

b)

பாரதியார்

c)

கம்பர்

2.

நாமக்கல் கவிஞர் தமிழகத்தின்__________ கவிஞராக விளங்கியவர்.

a)

முதல் அரசவைக்

b)

இரண்டாம் அரசவைக்

c)

மூன்றாம் அரசவைக்

3.

நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களில் ஒன்று_________

a)

என் கதை

b)

குயில் பாட்டு

c)

மறுமலர்ச்சி

4.

உலக மொழிகளில் தொன்மையான மொழி__________

a)

தமிழ் மொழி

b)

ஆங்கிலம்

c)

பலமொழிகள்

5.

எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ________உதவும்

a)

அன்பும் அறமும்

b)

செல்வம்

c)

புகழ்

6.

தமிழ் மொழியைக் கற்றோர் பொருள் பெறுவதற்காக யாரையும் ________பேச மாட்டார்.

a)

புகழ்ந்து

b)

இகழ்ந்து

c)

உயர்ந்து

7.

நெறி என்னும் சொல்லின் பொருள்________

a)

வழி

b)

வளி

c)

வலி

8.

ஒன்றல்ல இரண்டல்ல பாடலின் ஆசிரியர்_________

a)

உடுமலை நாராயணகவி

b)

சுப்பு ரத்தினம்

c)

நாமக்கல் கவிஞர்

9.

ஒப்புமை என்னும் சொல்லின் பொருள்_________

a)

இணை

b)

எதிர்

c)

புதிய

10.

பகைவரை வென்றதைப் பாடுவது ______ இலக்கியம்

a)

பரணி

b)

கலம்பகம்

c)

பரிபாடல்

11.

வான்புகழ் கொண்ட நூல்____________

a)

மணிமேகலை

b)

திருக்குறள்

c)

பரிபாடல்

12.

முல்லைக்குத் தேர் தந்து மழை மேகத்தை விடப் புகழ் பெற்றவர்_________

a)

அதியமான்

b)

வள்ளல் வேள்பாரி

c)

ஆய்

13.

புலவரின் சொல்லுக்குக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்_________

a)

ஆதிரன்

b)

குமண வள்ளல்

c)

பாரி

14.

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்________

a)

பாரதி

b)

உடுமலை நாராயணகவி

c)

சுரதா

15.

________மூலமாகவே மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது

a)

பிறமொழிகளின்

b)

மொழியின்

c)

சொல்லின்

16.

பேசுவதும் கேட்பதும் மொழியின்________

a)

முதல் நிலை

b)

இரண்டாம் நிலை

c)

மூன்றாம் நிலை

17.

எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின்__________ நிலை

a)

மூன்றாம் நிலை

b)

இரண்டாம் நிலை

c)

நான்காம் நிலை

18.

_________எளிதாக உணர்வுகளை வெளிப்படுத்தும்

a)

பேச்சு மொழி

b)

எழுத்து மொழி

c)

பிற மொழி

19.

ஒரு மொழியின் வெவ்வேறு வடிவங்களை _________ என்பார்

a)

கிளைமொழி

b)

வட்டார மொழி

c)

எழுத்து மொழி

20.

பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே___________

a)

வட்டார மொழி

b)

எழுத்து மொழியாகும்

c)

பேச்சு மொழியாகவும்

21.

பேச்சு மொழியை உலக வழக்கு என்றும் எழுத்து மொழியை ______ வழக்கு என்றும் கூறுவர்.

a)

பிற

b)

இலக்கண

c)

இலக்கிய

22.

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே ______உண்டு

a)

நிகரானது

b)

ஒற்றுமை

c)

வேறுபாடு

23.

குற்றியலுகர எழுத்துக்கள்__________

a)

ய ஞ ட வ ள ன

b)

த ந பு ம ச ஞ

c)

கு சு டு து பு று

24.

குற்றியலுகர எழுத்துகள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும் போது ________ஒலிக்கும்.

a)

அதிகமாக

b)

குறைவாக

c)

முழுமையாக

25.

குற்றியலுகர எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும் போது_______ அளவே ஒலிக்கும்.

a)

இரண்டு மாத்திரை

b)

ஒரு மாத்திரை

c)

அரை மாத்திரை

26.

ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை_______என்பர்.

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

c)

முற்றியலுகரம்

27.

குற்றியலுகரத்தின் வகைகள்_______

a)

4

b)

5

c)

6

28.

திணை ______ வகைப்படும்

a)

7

b)

3

c)

2

29.

இயல், இசை, நாடகம் என்பது_____எனப்படும்.

a)

சிறப்புத் தமிழ்

b)

தொன்மையான தமிழ்

c)

முத்தமிழ்

30.

Media - என்பதன் கலைச்சொல் எழுதுக_______.

a)

பருவ இதழ்

b)

உரையாடல்

c)

ஊடகம்