Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதல் இடைப்பருவத் தேர்வு ஏழாம் வகுப்பு

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

1. "கரும்பு" என்ற சொல்லில் அமைந்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்__________.

a)

அ. வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

ஆ. உயிர் தொடர்க் குற்றியலுகரம

c)

இ. மென் தொடர்க் குற்றியலுகரம்

d)

ஈ. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

2.

2. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக.

'மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுயவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

a)

அ. தீண்டல், இன்பம்

b)

ஆ. மற்றுயவர், தீண்டல

c)

இ. தீண்டல், செவிக்கு

d)

ஈ. இன்பம், கேட்டல்

3.

3. ஐகாரக்குறுக்கத்தில் 'ஐ' இன் ஒலி அளவு___________.

a)

அ. ஒரு மாத்திரை

b)

ஆ. அரை மாத்திரை

c)

இ. இரண்டு மாத்திரை

d)

ஈ. மூன்று மாத்திரை

4.

4. நாக்கை சுழற்றாமல் நாங்கள் வரமாட்டோம் நாங்கள் இடைப்பட்டவர்கள், எங்கள் கூட்டணியில் ஆறுபேர் நாங்கள் யார்?

a)

அ. மெல்லினம்

b)

ஆ. வல்லினம்

c)

இ. உயிர்மெய்

d)

ஈ. இடையினம்

5.

5. "ஏழைக்கு உதவுதல் சாலச் சிறந்தது என்றார் ஆசிரியர்" __இத்தொடரில் உள்ள உரிச் சொல்லை தேர்வு செய்க.

a)

அ. உதவுதல்

b)

ஆ. சால

c)

இ. ஏழைக்கு

d)

ஈ. ஆசிரியர்

6.

6. சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது_________.

a)

அ. ஐகாரக் குறுக்கம்

b)

ஆ. ஔகாரக் குறுக்கம்

c)

இ‌. மகரக்குறுக்கம்

d)

ஈ. ஆய்தக் குறுக்கம்

7.

7. கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகையைச் சார்ந்தது?

"படி, வாசித்தல்,வெள்ளை அடித்தல்,உதவுதல், வேண்டுதல்"

a)

அ. பெயர்ச்சொல்

b)

ஆ. வினைச்சொல்

c)

இ. உரிச்சொல்

d)

ஈ. இடைச்சொல்

8.

8. மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்_________.

a)

அ. போன்ம்

b)

ஆ. மருண்ம்

c)

இ. பழம் விழுந்தது

d)

ஈ. பணம் கிடைத்தது

9.

9. சொல்வகையை அறிந்து பொருந்தாதச் சொல்லை தேர்வு செய்க.

a)

அ.ஐ

b)

ஆ.கு

c)

இ.இன்

d)

ஈ.படி

10.

10. "நாகியாது" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக் கிடைப்பது_________.

a)

அ.நாக +யாது

b)

ஆ‌ நாகு + யாது

c)

இ. நா+யாது

d)

ஈ. நாகி+ யாது

11.

11. தனித்து இயங்கும் ஆற்றல் இன்றி முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள்__________ ஆகும்.

a)

அ. உயிர்மெய்

b)

ஆ. ஆய்தம்

c)

இ. சார்பெழுத்துக்கள்

d)

ஈ. உயிர் எழுத்துக்கள்

12.

12. "ஒன்று, இரண்டு, ஐந்து_ இவை எவ்வகை குற்றியலுகரம் எனத் தேர்வு செய்க.

a)

அ. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

b)

ஆ. மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

இ. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

d)

ஈ. வன் தொடர்க் குற்றியலுகரம்

13.

13. "பெண்மை" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

a)

அ. பண்புத்தொகை

b)

ஆ. வினைத்தொகை

c)

இ. வேற்றுமைத்தொகை

d)

ஈ. உவமைத்தொகை

14.

15. கேண்மியா சென்மியா ஆகியவற்றில் உள்ள மியா என்னும் முன்னிலை அசைச் சொல்லில் உள்ள_________ தன் மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும்.

a)

அ. உகரம்

b)

ஆ. இகரம்

c)

இ. மகரம்

d)

ஈ. வல்லினம்

15.

14. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.

a)

அ‌. பசு

b)

ஆ. விடு

c)

இ. ஆறு

d)

ஈ. கரு

16.

16. மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதற்கு_________ என்று பெயர்.

a)

அ. ஐகாரக் குறுக்கம்

b)

ஆ. ஔகாரக் குறுக்கம்

c)

இ. ஆய்தக் குறுக்கம

d)

ஈ. மகரக்குறுக்கம்

17.

17. 'வாய் பூசி வருகிறேன்' இதில் இடம்பெற்றுள்ள வாக்கியம்____________.

a)

அ.மங்கலம்

b)

ஆ. குழுஉக்குறி

c)

இ. வழக்கு

d)

ஈ. இடக்கரடக்கல்

18.

18. பால்+ தீது என்பது எனப் புணரும்.

a)

அ. பல்தீது

b)

ஆ. பஃறீது

c)

இ.பஃதீது

d)

ஈ.பலதீது

19.

19. 'கெடுப்பதூம்' என்ற சொல்லின் மாத்திரை அளவை தேர்வு செய்க.

a)

அ.7

b)

ஆ.6

c)

இ.5

d)

ஈ.4

20.

20. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரட்டைக்கிளவி சொல்லுக்கு பொருந்தும் சரியான வாக்கியத்தை தேர்வு செய்க. 'சலசல'

a)

அ. காற்று சலசலவென்று வீசியது.

b)

ஆ. மரங்கள் சலசலவென்று விழுந்தது.

c)

இ. மின்னல் சலசலவென்று மின்னியது.

d)

ஈ. தண்ணீர் சலசலவென்று ஓடுகிறது.

21.

21. கீழ்காணும் தொடரை தகுந்த வினைமுற்றுகளாக நிறைவு செய்க.

"இரக்கமில்லா மனிதர் மிருகங்கள்"

a)

அ. போன்றது

b)

ஆ. போன்றவர்

c)

இ. போன்று

d)

ஈ. போல

22.

22." திரு ராஜீவ்காந்தி அவர்கள் கொல்லப்பட்டார்"_ இத்தொடரில் உள்ள தகுந்த இடப்பெயரைத் தேர்வு செய்க.

a)

அ. தன்மை

b)

ஆ. முன்னிலை

c)

இ. வினையெச்சம்

d)

ஈ. படர்க்கை

23.

23. "எங்கள் ஊரில் வாழைத்_______ உள்ளது".

a)

அ. தோட்டம்

b)

ஆ. தோப்பு

c)

இ. மரம்

d)

ஈ. கொல்லை

24.

24. கீழ்காணும் வாக்கியம் எவ்வகை தொகையை சார்ந்தது என்று தேர்வுசெய்க. "செம்மொழி"

a)

அ. வினைத்தொகை

b)

ஆ. பண்புத்தொகை

c)

இ. உம்மைத்தொகை

d)

ஈ. உவமைத்தொகை

25.

25. மற்றுப்பிற என்னும் தொடரில் "மற்று"என்பது________.

a)

அ. உரிச்சொல்

b)

ஆ. இடைச்சொல்

c)

இ. பெயர்ச்சொல்

d)

ஈ. வினைச்சொல்

26.

26. "வெற்றிலை நட்டான்" இத்தொடரில் உள்ள "வெற்றிலை" என்பது எவ்வகை பெயரை சார்ந்தது.

a)

அ. இடப்பெயர்

b)

ஆ. சினைப்பெயர்

c)

இ. காலப்பெயர்

d)

ஈ. தொழிற்பெயர்

27.

27." இராமனுக்கு தம்பி இலக்குவன்"_ இதிலுள்ள வேற்றுமை உருபு_______.

a)

அ. நான்காம் வேற்றுமை

b)

ஆ. இரண்டாம் வேற்றுமை

c)

இ. ஆறாம் வேற்றுமை

d)

ஈ. ஐந்தாம் வேற்றுமை

28.

28. 'விளக்கை அணைத்து விடு' என்பதை 'விளக்கைக் குளிர்வை' என்று கூறுவது_________.

a)

அ. இலக்கணப்போலி

b)

ஆ. மங்கல வழக்கு

c)

இ. மரூஉ

d)

ஈ. குழூஉக்குறி

29.

29. 'இல்முன்' என்பதை முன்றில் எனக் கூறுவது______.

a)

அ. இடக்கரடக்கல்

b)

ஆ. குழுஉக்குறி

c)

இ. மரூஉ

d)

ஈ. இலக்கணப்போலி

30.

30. கீழ்காணும் தொடரை தகுந்த இணைமொழியை கொண்டு நிறைவு செய்க "விருந்தினர் வருவதால் அன்னை__________ __________ வேலைகளைச் செய்தார்.

a)

அ. கண்டதும் கேட்டதும்.

b)

ஆ. ஓய்வு ஒழிவின்றி

c)

இ. உருண்டு திரண்டு

d)

ஈ. அரக்கப்பரக்க