wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ரகர றகரவேறுபாடு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மலேசியாவின் தேசிய விலங்கான __________தற்காலமாக பெரும் அழிவை எதிர்நோக்கி வருகிறது.

a)

அரி

b)

பரி

c)

அறி

d)

பறி

2.

தூய்மைக்கேடு ஏற்பட முக்கிய காரணம் மனிதர்களே என்பதை நாம் ________ வேண்டும்.

a)

அரிய

b)

பரிய

c)

அறிய

d)

பறிய

3.

வெங்காயத்தை _______ வைக்குமாறு அம்மா கவிதாவிடம் கூறினார்.

a)

அரிந்து

b)

பரிந்து

c)

அறிந்து

d)

பறிந்து

4.

அப்பா கடையில் __________ கிலோ கோதுமை மாவு வாங்கினார்.

a)

கரை

b)

கறை

c)

அரை

d)

அறை

5.

அவ்வீட்டின் சிறிய __________ அன்னியத் தொழிலாளர்கள் பலர் தங்கியிருக்கின்றனர்.

a)

கரையில்

b)

கறையில்

c)

அரையில்

d)

அறையில்

6.

சிறு உயிர்களிடத்திலும் ________ காட்டு என்பது வள்ளுவரின் வாக்கு.

a)

குற்றம்

b)

இறக்கம்

c)

ஆசை

d)

இரக்கம்

7.

தென்னை மரத்தில் ஏறிய குகனைக் கீழே _________ சொல்லி தாத்தா குரல் கொடுத்தார்.

a)

வரச்

b)

குதிக்கச்

c)

இரங்க

d)

இறங்க

8.

தன் தந்தையின் நினைவு நாளன்று, அவரை நினைத்து அம்மா கண்ணீர் __________.

a)

சிரித்தார்

b)

சொரிந்தார்

c)

அழுந்தார்.

d)

சொறிந்தார்.

9.

ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் அகிலன் தலை _____________.

a)

சிரித்தான்

b)

சொறிந்தான்.

c)

சொரிந்தான்.

d)

அழுந்தான்

10.

வெண்சுருட்டால் சட்டெனப் பிடித்த தீ வேகமாக __________.

a)

எறிந்தது

b)

ஏறிந்தது

c)

எரிந்தது

d)

ஏரிந்தது.

11.

குமரன் தன்னிடம் இருந்த பந்தை மீண்டும் தன் நண்பனை நோக்கி ___________.

a)

எறிந்தான்

b)

ஏறிந்தான்

c)

ஏரிந்தான்

d)

எரிந்தான்

12.

முதலாளிக்குத் தம் தொழிலாளர்கள் நலனில் அக்_________ வேண்டும்.

a)

திறை

b)

கரை

c)

திரை

d)

கறை

13.

அக்____________யில் மேயும் மாடு, இக்கரைக்கு வர வெகு நாள்கள் காத்திருந்தது.

a)

திறை

b)

கரை

c)

திரை

d)

கறை

14.

தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ______ புரண்டு ஓடியது.

a)

திறை

b)

கரை

c)

திரை

d)

கறை

15.

என் பள்ளிச் சீருடையில் ஏற்பட்ட மங்குஸ்தீன் பழத்தின் _________, சோப்புப் போட்டுத் தேய்த்தும் மறையவில்லை.

a)

திறை

b)

கரை

c)

திரை

d)

கறை

16.

என் தாயார் பாலை ________ வைத்து மறுநாள் தயிர் ஆக்கினார்.

a)

உறை

b)

உரை

c)

திரை

d)

கறை

17.

கவிஞர் கவிச்சக்கரவர்த்திக் கம்பரைப் பற்றி ________ நிகழ்த்தினார்.

a)

உறை

b)

உரை

c)

திரை

d)

கறை

18.

ரேயன் தோட்ட முதலாளியை அங்குள்ள தொழிலாளர்கள் ________ என அழைத்தனர்.

a)

உறை

b)

உரை

c)

துரை

d)

துறை

19.

கிள்ளான் _______முகத்திற்கு வந்து சேர்ந்த கப்பலைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.

a)

உறை

b)

உரை

c)

துரை

d)

துறை

20.

திருக்குறளைத் தமிழ்_____ என்று கூறுவார்கள்.

a)

மறை

b)

மரை

c)

துரை

d)

துறை