NEW
Font size
Worksheetsஇலக்கணப் புதிர்ப்போட்டி ஆண்டு 6
Total questions: 25
Worksheet time: 25mins
சரியான விதியைத் தெரிவு செய்க.
அவை,இவை,எவை என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்
அங்கு,இங்கு,எங்கு என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகா
அன்று,இன்று,என்று என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்
சில,பல என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்
பிரித்தெழுதுக
சகோதரன்
சகோ+தரன்
சக+உதரன்
சகோத+ரன்
ச+கோதரன்
பிரித்தெழுதுக
1.காற்சிலம்பு
2.நெடுநீர்
1.காற்+சிலம்பு
2.நீண்ட+நீர்
1.கால்+சிலம்பு
2.நீண்ட+நீர்
1.கால்+சிலம்பு
2.நெடுமை+நீர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருத்தமான வேறு சொல்லைத் தெரிவு செய்க
மனிதர்களுக்கு உணவாகக்கூடிய விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் உடல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைப் பகுதிகளும், ஏனைய உண்ணக்கூடிய உடலுறுப்புகளும் புலால் எனப்படும்.
பறவைகளின் உடல் உருப்புகள்
மீன்களின் உடல்
இறைச்சி
தசைப் பகுதிகள்
வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.
_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.
மீனவர், ஆறு, மீன்களைப்
மீனவரது, ஆற்றை, மீனைப்
மீனவர், ஆற்றில், மீன்களைப்
மீனவரின், ஆற்றில், மீனுக்குப்
கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
வானில் பருந்து பறந்து சென்றது
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.
சரியான எச்சத்தைத் தெரிவு செய்க
தேடி அலைந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக
உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
எழுந்த
எழுதிய
எழுதும்
எழுத்து
கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?
கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?
கரம் + தா = கரந்தா
கல் + சுவர் = கற்சுவர்
கண் + இமை = கண்ணிமை
மலர் + மாலை = மலர்மாலை
சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.
ஆயினும்
எனவே
இருந்தாலும்
இருப்பினும்
கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.
கீழ்க்காணும் வாக்கியத்தில் தொழிற்பெயர் யாது?
கோமலா பூந்தோட்டத்தில் ஆனந்தமாக விளையாடினாள்.
கோமலா
பூந்தோட்டத்தில்
விளையாடினாள்
மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
வோ, ரீ, வு, ளை
ங், ஞோ, மெள, னா
தோ, றீ, செ, கூ
மூ, பெள, வை, யோ
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எதிர்காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
தொங்கூர்தியில் பயணம் செய்து கொண்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டி இரசித்தோம்.
சுவர்பந்து விளையாட்டில் டத்தோ நிக்கோல் டேவிட் சிறந்த வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
2025-இல் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழும்.
மலேசியா நாட்டின் தேசிய மகிழுந்து 1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும் என்ற கூற்றுக்கு ஏற்ற சொற்றொடரைத் தெரிவு செய்க.
ஆடிப் பாடினாள்
விட்டுக் கொடுத்தான்
அந்தப் பையன்
தீச்சட்டி
கீழ்க்காணும் வாக்கியத்தில் இடம் பெறாத பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
நேற்று கெந்திங் மலைக்குச் சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
இடப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
திணை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
திணை மூன்று வகைப்படும்
திணை இரண்டு வகைப்படும்
மனிதர், தேவரைக் குறிப்பது அஃறிணையாகும்.
ஆமை உயர்திணையாகும்.
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.
திணை
பால்
எண்
இடம்
எது சரியான புணர்ச்சி அல்ல.
அத்தலைவன்
பூஞ்சோலை
எவ்வானை
தைத்திங்கள்
ஔவையார் நெல்லிக்கனியை உண்பது கண்டு அதியமான் _________________________
பெருமகிழ்ச்சியுறுவான்
பெருமகிழ்ச்சியுற்றோன்
பெருமகிழ்ச்சியற்றான்
பெருமகிழ்ச்சியுற்றான்
இஞ்சே. யாகோப் குடும்பத்தினர் பலவிதமான கூடைகள் ____________________ விற்கும் சிறு தொழிலில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வனைந்து
நெய்து
பின்னி
முடைந்து
மேற்காணும் படங்களுக்குப் பொருத்தமான நிகழ்கால வினைமுற்றைத் தேர்ந்தெடு.
பறக்கின்றன
பறக்கும்
பறந்தன
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் வகையைத் தெரிவு செய்க.
அம்மா தம் பிள்ளையை மடியில் படுக்க வைத்து தாலாட்டுப் பாடினாள்.
வேற்றுமை உருபு
எழுவாய்
செயப்படுப்பொருள்
பயனிலை
