NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 20
Worksheet time: 10mins
‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________
கரி பூசினாள்.
கங்கணம் கட்டினாள்.
ஒற்றைக் காளில் நின்றாள்.
கை கொடுத்தாள்.
தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
மனப்பால் குடித்தல்
செவி சாய்த்தல்
கம்பி நீட்டுதல்
குரங்குப் பிடி
ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஓட்டை வாய் / நாக்கு நீளுதல்
மனப்பால் குடித்தல் / குரங்குப் பிடி
முழு மூச்சி / முட்டுக்கட்டை
இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?
மனப்பால் குடித்தல்
கங்கணம் கட்டுதல்
முழு மூச்சு
வெளுத்து வாங்குதல்
கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?
கை கூடுதல்
கை தட்டுதல்
கை கழுவுதல்
கை கொடுத்தல்
சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்
வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.
அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்
மேற்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?
ஆறப் போடுதல்
அள்ளி விடுதல்
அள்ளி இறைத்தல்
அரக்க பரக்க
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?
நாக்கு நீளுதல் - வரம்புமீறி பேசுதல்
தலை குனிதல் - அவமானம் அடைதல்
ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு ஒட்டாதக் கல்வி
எடுப்பார் கைப்பிள்ளை - எளிதல் பிறருக்கு வசப்படாதவர்
கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.
தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.
கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.
தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.
அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.
இப்படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?
கம்பி நீட்டுதல்
ஓட்டை வாய்
கிணற்றுத் தவளை
அவசரக் குடுக்கை
கீழ்காணும் மரபுத்தொடர்களில் எது நற்செயலைக் குறிக்கிறது?
கண்ணும் கருத்தும்
கம்பி நீட்டுதல்
ஓட்டை வாய்
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல் என்பதின் பொருள் என்ன?
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
பொருட்களை எடுத்து கீழே இறைத்தல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?
முழு மூச்சு
கண்ணும் பென்சிலும்
கண்ணும் கருத்தும்
காணும் தாள்
கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசுதல்.
கங்கணம் கட்டுதல்
மனக்கோட்டை
சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசிக் கொண்டான்
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
தட்டிக் கழித்தல்
கோபப்படுதல்
சிரித்தல்
ஏதாவது காரணம் கூறி தவிர்த்தல்.
உறங்குதல்
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
காதுகுத்துதல்
கோபப்படுதல்
சிரித்தல்
ஏதாவது காரணம் கூறி தவிர்த்தல்.
சாமார்த்தியமாக ஏமாற்றுதல்
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
திட்டவட்டம்
கோபப்படுதல்
உறுதியாக
ஏதாவது காரணம் கூறி தவிர்த்தல்.
சாமார்த்தியமாக ஏமாற்றுதல்
கிள்ளுக் கீரை
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
தக்க நேரத்தில் உதவி செய்தல்
