Font size
Worksheetsஆறாம் வகுப்பு தமிழ் பருவம் - 2
Total questions: 17
Worksheet time: 17mins
1.மாணவர்கள் நூல்களை ………….. கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற
2.இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
3.மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
4.குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம் இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
5.சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்புஉடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார்
ஈ) சிறப்பிடையார்
6.மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
7.நாம் …………… சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
8.கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப்+பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
9.மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
10.பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து வசதியில்லை
11.பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
12.படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
13.காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டு ஆறு
ஈ) காடுஆறு
14.மெல்வினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கல்வி
ஈ) தம்பி
15.தவறான சொல்லை வட்டமிடுக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
16. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார்.
சீருடை
தந்தை பெரியார்
17. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ………………………
சீருடை
தந்தை பெரியார்
