NEW
Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கண இலக்கியப் புதிர் ஆண்டு 5 பாரதி 15.07.2021
Total questions: 25
Worksheet time: 8mins
சினந்தேடி என்பதன் பொருள் யாது?
கோபத்தை அடக்கிக் கொண்டு
கோபத்தை வருவித்துக் கொண்டு
உலகநீதியை நிறைவு செய்க.
சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.
தேட
பாட
கோபம் கொள்பவரிடம் பழகுவது நல்லது.
ஆம்
இல்லை
இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?
ஈகை திறன்
ஒப்புர வொழுகு
ஏற்ப திகழ்ச்சி
உடையது விளம்பேல்
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க
தாயும் சேயும்
அல்லும் பகலும்
ஆடை அணிகலன்
ஆடல் பாடல்
படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.
நன்மை தீமை
அரை குறை
கல்வி கேள்வி
தாயும் சேயும்
மதி அரசி எப்போதும் தன் வேலைகளை ..................யாக தான் செய்வாள். அதனால் தன் அம்மாவிடம் தினமும் திட்டு வாங்குவாள்.
கல்வி கேள்வி
தாயும் சேயும்
அரை குறை
நன்மை தீமை
படத்திற்குப் பொருந்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
நாக்கு நீளுதல்
உறுதி பூணுதல்
அவமானப்படுதல்
வரம்பு மீறிப் பேசுதல்
சேர்த்தெழுதுக.
கண் + இமை =
கண்இமை
கண்ணிமை
கணிமை
கணீமை
பிரித்தெழுதுக
கற்றணை
கற்று + இணை
கல் + இணை
கல் + அணை
கற்+ அணை
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.
பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.
எனவே
ஆகவே
இருப்பினும்
ஏனென்றால்
பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?
நாய், மயில்
கடவுள், பூமி
முருகன், அப்பா
தேவர், தாவரம்
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது?
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?
தோட்டக்காரர்
மனித குரங்கு
காவல்நாய்
மாட்டு வண்டி
பால் எத்தனை வகைப்படும்?
3
2
5
4
கோடிடப்பட்டுள்ள ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தெரிவு செய்க.
நல்லது
நல்லவைகள்
நல்ல
நல்லவை
நன்மைகள்
கீழுள்ள சொற்கள் எந்த இடத்தைக் குறிக்கின்றன
நான் , என் , நாங்கள் , எங்கள்
முன்னிலை
தன்மை
படர்க்கை
காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் _________ திறமையை வெளிப்படுத்தினர்.
தன்
தம்
அவர்கள்
தன்னுடைய
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
சிருவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி பலரின் மனதைக் கவர்ந்தது.
ஆடல் பாடல்.
நிகழ்ச்சி
மனதைக்
சிருவர்களின்
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
மலர்விழி ஒரு அழகிய பூமாலைத் தொடுத்தாள்.
பூமாலைத்
தொடுத்தாள்.
ஒரு
அழகிய
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க
கொக்கு தன் நீண்ட அழகால் மீனைக் கொத்தித் தின்றது.
கொத்தித்
கொக்கு
நீண்ட
அழகால் .
மெய்யெழுத்து இல்லாத சொல் யாது ?
பிஞ்சு
படகு
காய்
பழம்
சேர்த்தெழுதுக : கல் + கோவில்
கட்கோவில்
கல்கோவில்
கற்கோவில்
கண்கோவில்
