NEW
Font size
Worksheetsமனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தய கால
Total questions: 20
Worksheet time: 10mins
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
கிரேட் ஏப்ஸ்
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கற்காலம்
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
ஹோமோ சேபியன்ஸ்
நியாண்டர்தால் மனிதன்
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ___ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
i) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.
ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.
iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
(i) சரி
(ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(iv) சரி
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை.
கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் ______________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்.
கீழ் பழங்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் _________________ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
கற்கருவி
தொழிற்கருவி
செய்கருவி
திறன்கருவி
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _______ எனப்படும்.
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கற்காலம்
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ’தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.
ஆ) 'உயிர்களின் தோற்றம் குறித்து' என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்.
அ
ஆ
இ
ஈ
அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
இ) இரு பக்கமும் கூர்மையாகச் செதுக்கப்பட்ட சிறு சில்லு சீவல் எனப்படுகிறது.
ஈ) பெரிய கற்களைச் செதுக்கி தயாரிக்கப்படும் கைக்கோடாரிகள் அச்சூலியன் கருவிகள் எனப்படும்.
அ
ஆ
இ
ஈ
கைக்கொடாரிகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயின்ட் அச்சூல் உள்ள நாடு
பிரான்ஸ்
இங்கிலாந்து
இந்தியா
அமெரிக்கா
மைக்ரோலித்திக் என்பது ------------
நுண்கற்கருவிகள்
இரும்புக்கருவிகள்
வெண்கலக்கருவிகள்
ஆயுதங்கள்
இந்தியாவில் முதல் பழங்கற்கால கருவியை சர் இராபர்ட் புரூஸ்ஃபூட் கண்டுபிடித்த இடம் ---------- .
சாந்தோம்
மாமல்லபுரம்
பல்லாவரம்
மைலாப்பூர்
சங்க காலத்திற்கு அடித்தளமிட்டவர்கள் ----------- .
பெருங் கற்கால மனிதர்கள்
இரும்புக் கற்கால மனிதர்கள்
புதிய கற்கால மனிதர்கள்
பழைய கற்கால மனிதர்கள்
செம்மண் மேடுகள் ------------- என்றும் அமைக்கப்படுகின்றனர்.
அச்சூலியன்
வீனஸ்
தேரி
சில்லு சீவல்
நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இன வகைகள் --------என அழைக்கப்படுகிறது.
நியாண்டர்தால்
உராங் உட்டான்
அச்சூலியன்
ஹோமினிட்
கூரிய வெட்டுமுனைக் உள்ள கல்லான உளி ------------
பியூரின்
மைக்ரோலித்திக்
அச்சூலியன்
தேரி
I)எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய தாகும்
Ii)வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள் அழகான ஓவியங்களையும் கலைப் பொருட்களையும் உருவாக்கினார்கள்
Iii)வரலாற்றுக்கு முந்தைய கால சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாக கருதப்படுகின்றன
Iv)வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது
I சரி
I மற்றும் II சரி
1 மற்றும் 4 சரி
2 மற்றும் 3 சரி
