wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வாணி பள்ளி போட்டி விளையாட்டில் ____________வென ஓடி முதல் பரிசை வென்று நற்பெயரை தனது குழுவிற்கு தேடிக் கொடுத்தாள்.

a)

கலகல

b)

குடு குடு

c)

மட மட

2.

காமினி பணிச்சுமையால் தனக்கு வரவேண்டிய உயர் பதவியைத் தவிர்த்தாள்.

மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்யவும்

a)

ஈவிரக்கம்

b)

தட்டிக் கழித்தல்

c)

கை கொடுத்தல்

3.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக

a)

. தீயச் செயல்கள்

b)

நெருப்பு

c)

கோபம்

4.

ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும். மற்ற பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது

a)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

b)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

c)

A. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

5.

உயிர் நெடிலைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

அன்னம்

b)

ஔடதம்

c)

எலி

6.

கீழ்க்காணும் வாக்கியம் காட்டும் காலம் யாது?

அரசர் தெனாலி இராமனைத் தண்டித்தார்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

7.

__________ துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திரத்திற்காகப் போராடியதால் ________

மக்கள் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர்.

a)

என்று , இன்று

b)

அன்று , இன்று

c)

அன்று , என்று

d)

என்று , அன்று

8.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக் கூடாது.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

c)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

9.

இராமன் தேர்வுக்காக ____________ பள்ளி பாடங்களைக் கண்ணும் கருத்துயாய்க் கற்றுத் தெளிந்தான்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

மேரும் புகழும்

10.

ஒரு சில மாதங்களே தேர்வுக்கு உள்ளன்.அதனை வீணில் கழித்து விட மாட்டேன்.

a)

கற்றது ஒழுகு

b)

ஓய்தல் ஒழி

c)

காலம் அழியேல்

d)

அச்சம் தவிர்

11.

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.

a)

ஒப்புர வொழுகு

b)

ஒதுவ தொழியேல்

c)

ஒளவியம் பேசேல்

d)

ஆறுவது சினம்