NEW
Font size
WorksheetsMARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.
Total questions: 10
Worksheet time: 5mins
‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்
கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________
A. கரி பூசினாள்.
B. கங்கணம் கட்டினாள்.
C. ஒற்றைக் காலில் நின்றாள்.
D. கை கொடுத்தாள்.
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
A. மனப்பால் குடித்தல்
B. செவி சாய்த்தல்
C. கம்பி நீட்டுதல்
D. குரங்குப் பிடி
ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
A. ஓட்டை வாய் - நாக்கு நீளுதல்
B. தோள் கொடுத்தல் - கை கொடுத்தல்
C. முழு மூச்சு - முட்டுக்கட்டை
D.மனப்பால் குடித்தல் - குரங்குப் பிடி
இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?
A. மனப்பால் குடித்தல்
B. கங்கணம் கட்டுதல்
C. முழு மூச்சு
D. வெளுத்து வாங்குதல்
கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல
A.கை கூடுதல்
B.கை தட்டுதல்
C.கை கழுவுதல்
D.கை கொடுத்தல்
சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்
C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.
D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்
கீழ்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?
A.ஆறப் போடுதல்
B.அள்ளி விடுதல்
C.அள்ளி இறைத்தல்
D.அரக்க பரக்க
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?
A. நாக்கு நீளுதல் - வரம்புமீறி பேசுதல்
B. தலை குனிதல் - அவமானம் அடைதல்
C. ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு ஒட்டாதக் கல்வி
D. எடுப்பார் கைப்பிள்ளை - எளிதல் பிறருக்கு வசப்படாதவர்
கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.
A.தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.
B.கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.
C.தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.
D.அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.
