Font size
Worksheetsஇலக்கிய கேள்விகள் (மீள்பார்வை)
Total questions: 25
Worksheet time: 13mins
பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்
சல சல
குடு குடு
கிலு கிலு
கல கல
பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள் ஒரு நபர்.
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
______________________________________________________
செயற்கரிய செய்கலா தார்
தீயினும் அஞ்சப் படும்
செயற்கரிய செய்க லாதார்
செயற்கரிய செய் கலாதார்
இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.
மூலை முடுக்கு = ஓர் இடத்தில்
நன்மை தீமை = உயர்வு
தான தர்மம் = கொடை தருதல்
பழக்கவழக்கம் = புதிய நடைமுறைகள்
புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.
தட தட
மினு மினு
தக தக
பள பள
உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தன் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.
கல்வி கேள்வி
அருமை பெருமை
வரவு செலவு
பேரும் புகழும்
திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது
கிணற்றுத் தவளை
முழுமூச்சு
தெள்ளத் தெளிதல்
முயக் கொம்பு
மரபுத் தொடரின் பொருளை தேர்வு செய்க
நாக்கு நீளுதல்
அதிகம் பேசுதல்
மகிழ்ச்சியாகப் பேசுதல்
வரம்பு மீறிப் பேசுதல்
பொய் பேசுதல்
கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.
எலியும் பூனையும் போல
சிலை மேல் எழுத்து போல
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
______________________________
என்னுடைய ரேனும் இலர்
துப்பாய தூஉம் மழை
இடுக்கண் களைவதாம் நட்பு
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல?
ஒப்புர வொழுகு
இயல்வது கரவேல்
ஓய்தல் ஒழி
உடையது விளம்பேல்
விமான தாக்குதலின் போது அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் ______________ வென சரிந்து விழுந்தது.
மட மட
தட தட
மள மள
சர சர
தேசிய அறிவியல் போட்டியில் வெற்றிப் பெற்ற பினாங்கு, இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்
புத்திமான் பலவான்
நிறைகுடம் தளும்பாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
"வாணி, எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கற்ற கல்வித்தான் எல்லாவற்றையும்விட உயர்ந்தது அல்லவா?"
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற்வை யவை
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
மொருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
நிக்கோல் டேவிட் விளையாட்டுத் துறையில் மலேசியாவின் மின்னும் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
அனலில் இட்ட மெழுகு போல
சிலை மேல் எழுத்துப் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
குறை சொல்லுதல்
புறம் பேசுதல்
தீயச் செயல்
ஏமாற்றுதல்
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
புத்திமான் பலவான்
திரு. ஹரிஸ் துன்பம் என்று யார் கேட்டாலும் கருணையுடன் உடனே உதவி செய்து விடுவார்.
ஈடு கட்டுதல்
கை கூடுதல்
ஈவிரக்கம்
செவி சாய்த்தல்
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை ------------ -------------- வேர்வீழ்க் கும்மே
இருநிலம் பிளக்க
நீர்க்குட் பாசிபோல்
பிச்சை புகினும்
நன்றி சிறிதெனினும்
உலகமே கணினி மயமாகி கொண்டிருக்கும் போது, உனக்கு மட்டும் கணினியை இயக்கத் தெரியவில்லையே?ஆச்சரியமாக உள்ளது.
மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?
ஊக்கமது கைவிடேல்
ஓதுவ தொழியேல்
ஒப்புர வொழுகு
எண்ணுவது உயர்வு
போர் படையினில் தூங்கியவன் வெற்றி இழந்தான்!
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்!
இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால்,
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!
மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
அச்சம் தவீர்
ஆண்மை தவறேல்
சரியான இரட்டைக் கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தை தேர்ந்தெடுக.
அமலா தன் வீட்டு வேலைகளை குடு குடுவென முடித்து விட்டு விளையாடச் சென்றாள்.
காவல் அதிகாரியிடம் பிடிப்பட்ட திருடன் திரு திருவென விழித்தான்.
இரவில் விண்மீன்கள் பள பளவென மின்னிக் கொண்டிருந்தன.
தொலைக்காட்சியில் நகைச்சுவை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா சல சலவென சிரித்தார்.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
இகழ்வாரை நோவது எவன்
உள்ளத்து ளெல்லாம் உளன்
என்னுடைய ரேனும் இலர்
தோன்றலின் தோன்றாமை நன்று
