Worksheetsஇலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள் போட்டி
Total questions: 50
Worksheet time: 50mins
காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.
மள மள, தட தட
மள மள , குடு குடு
மட மட, குடு குடு
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
அருள்: என்ன அகிலா இரண்டு மாதத்திற்கு முன்பு
_______________ காணப்பட்டாய்.இப்பொழுது
என்னவாயிற்று?
அகிலா: ஆமாம்,காச நோய் என்னை வாட்டி
விட்டது.அதனால் தான் இப்படி இளைத்து
போய்விட்டேன்.
எலும்பும் தோலுமாய்
உருண்டு திரண்டு
அரை குறையாய்
சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அன்பா:தேவன் மாளிகை ஒன்றை வாங்கி
விட்டான் என்பதற்காக தற்பெருமையாக
இருப்பதைக் கண்டாயா?
அமுதன்: பிறர் மீது பொறாமைக் கொள்வது தவறு,
சரி இல்லை.அவன் உழைப்பிற்கு ஏற்ற
ஊதியம் கிடைத்துள்ளது.
ஒப்புர வொழுகு
உடையது விளம்பேல்
இயல்வது கரவேல்
படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க
இளைத்தல் இகழ்ச்சி
ஊண்மிக விரும்பு
உடலினை உறுதி செய்
கீழ்காணும் செய்யுளை நிரல்படுத்துக.
A. நெல்லுக் கிறைத்தீர் வாய்க்கால் வழியோடிப்
B. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
C. எல்லார்க்கும் பெய்யும் மழை
D. புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
A,C,B,D
B,C,A,D
A,D,B,C
D,C,B,A
யாழினி பேருந்து நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய மலர்விழியை ____________________ தேடினாள்.
அல்லும் பகலும்
அங்கும் இங்கும்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
உலக நீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு
செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக
வேண்டாம்
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
பிழையான இணையைத் தெரிவு செய்க
ஆணித்தரம் - உறுதி
தலை குனிதல் – அவமானம் ஏற்படுத்துதல்
கரை கண்டவர் – ஒரு கலையில் அல்லது துறையில்
சிறந்த தேர்ச்சி பெற்றவர்
ஈவிரக்கம் - மனக்கசிவு
கோடிடப்பட்ட சொற்றொடரின் பொருளினை விளக்கும் உவமைத் தொடரினைத் தெரிவு செய்க.
இளஞ்செழியன் மிகவும் அமைதியான மாணவன். வெளிப்படாமல் மறைந்திருந்த அவனின் ஆற்றல் ஓரங்க நாடகத்தின் போது எல்லாராலும் அறியப்பட்டது.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
சிலை மேல் எழுத்துப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மேற்கண்ட படம், விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
சிறு துளி பெரு வெள்ளம்
வெள்ளம் வருமுன் அணை போடு
சிக்கனம் சீரளிக்கும்
கீழ்க்கண்ட விளக்கத்தைத் தாங்கி வரும் மூதுரையின் செய்யுளடியைத் தெரிவு செய்க.
இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
கீழ்க்கண்ட திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
விருந்து வைப்பவர்
விருந்தினர்
விருந்து உணவு
கீழ்க்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற வினையடையைக் கொண்டு நிறைவு செய்க.
சுமன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை _______________________________
செய்தான்.
முழுமையாகச் / தாமதமாகச்
மென்மையான / அழகான
கருப்பாகச் / அவசரமாகச்
தாமதிக்காமல் / பிடிக்காமல்
கீழ்க்கண்ட வாக்கியத்தில் உள்ள வினையெச்சத்தைத் தெரிவு செய்க.
முரளி தான் வாங்கிய மிடிவண்டியை அழகான தாள்களைக் கொண்டு அழகுப்படுத்தி ஓட்டிக் காட்டினான்.
வாங்கிய மிதிவண்டியை
அழகான தாள்களைக்
அழகுப்படுத்தி
ஓட்டிக் காட்டினான்
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத்
தெரிவு செய்க.
அப்பா புற்களைக் கத்தியால் வெட்டினார்.
அங்கே செல்லாதே.
ஐயோ! வலிக்கிறதே!
நீ எங்கே செல்கிறாய்?
கீழ்க்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொற்களைத் தேர்ந்தெடுக.
கண்மணி மிகவும் குறும்புக்காரி. ____________________________________ அவள் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்றாள்.
ஆகவே
ஆயினும்
எனவே
ஆதலால்
சரியான மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.
குயவர்கள் மட்பாண்டங்களை _________________________ சந்தையில் விற்றனர்.
வனைந்து
முடைந்து
கொய்து
வேய்து
படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொற்களைத் தேர்ந்தெடுக
சினைப்பெயர்
இடப்பெயர்
பண்புப்பெயர்
பொருட்பெயர்
சேர்த்தெழுதுக.
காரம் + வடை
காரம்வடை
காராவடை
காரவடை
காராடை
கீழ்க்காண்பனவற்றுள் நிகழ்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க
விரைவில் இரட்டை மாடி வீடொன்று வாங்க வேண்டுமென்று பாலன் எண்ணினான்.
தனபாலன் இன்று தனது பதினைந்தாம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறான்.
நாளை கண்டிப்பாக வருவதாக மாமா கூறினார்.
ஜப்பானுக்குச் செல்ல வேண்டும் என்று இராமு எண்ணம் கொண்டிருந்தான்.
பிரித்தெழுதுக
மனமில்லை
மனம் + இல்லை
மன + மில்லை
மனம் + இலை
ஆதிகால மனிதர்கள் ஆற்றோரங்களை அடுத்துள்ள பாதுகாப்பான _______________ தங்கள் ______________ அமைத்துக் கொண்டனர்.
இடங்களுக்கு / குடில்களின்
இடங்களில் / குடில்களில்
இடத்தின் / குடில்களுக்கு
இடங்களில் / குடில்களை
கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாணவர் பாதுகாப்புக் கருதி சில ஆசிரியர்கள் உடன் சென்றனர்.
தலைமையாசிரியர் அவர்கள் சிற்றுலா மேற்கொள்ள அனுமதித்தார்.
மாணவர் அனைவரும் குதூகலத்துடன் இருந்தது.
எடுத்த காரியத்தில் ___________________ ஈடுபட்டால் நிச்சயம் வெற்றிக்கனியைப் பறிக்க இயலும்.
அரக்கப் பறக்க
முழு மூச்சு
வெளுத்து வாங்க
திட்ட வட்டம்
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற ஆத்திச்சூடியைத் தேர்வு செய்க.
அம்மா: ரவி நீ இப்படி நேரத்தை வீணடிப்பது சரியல்ல.காலம் பொன்னானது.
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
காலம் அழியேல்
இப்படத்துடன் தொடர்புடைய உலகநீதி யாது?
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
திருக்குறளுக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒரு செயலை முதலில் தொடங்கிவிட வேண்டும்.அதன் பிறகே அதனை ஆராய வேண்டும்.
ஒருவருக்கு தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்.தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
செய்யுளை நிறைவு செய்க.
_______________ முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா_______________________
ஓடுமீ னோட __________________________வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.
மடைத்தலையில்,உறுமீன்,அடக்க
அடக்க,உறுமீன்,மடைத்தலையில்
அடக்க,மடைத்தலையில்,உறுமீன்
உடுத்திய உடை தழுவும்போது ஒருவருடைய கை அவரை அறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று,நண்பருக்கு துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று துன்பத்தைப் போக்க்குவதே நட்பாகும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றை யவை
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை இல
கோடிட்ட இடத்திற்கு ஏற்ற மிகச் சரியான உவமைத் தொடரைத் தேர்வு செய்க.
அமைதியாகக் காணப்பட்ட மலர்விழி,இனிமையாக பாடியபோது _________________ இருந்த அவளுடைய திறமை வெளிப்பட்டது.
குன்றின் மேலிட்ட விளக்கு போல
குடத்திலிட்ட விளக்கு போல
இலைமறை காய் போல
காட்டுத் தீ போல
படத்திற்கு ஏற்ற சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
உருண்டு திரண்டு
அருமை பெருமை
பேரும் புகழும்
கோடிட்ட இடத்திற்குப் பொருந்தும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க
தன் கவனக்குறைவால் பாலன் பாலைக் கீழே கொட்டிவிட்டான்.அவன் ஒரு_____________________.
அவசரக் குடுக்கை
ஓட்டை வாயன்
எடுப்பார் கைப்பிள்ளை
படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சூரியனைக் கண்ட பனி போல
எலியும் பூனையும் போல
யானையின் வாயில் அகப்பட்ட கரும்பு போல
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
துன்பத்தில் உள்ளவருக்கு நாம் உதவ வேண்டும்.
கை கூடியது
தோள் கொடுத்தல்
தலை எடுத்தல்
கை கழுவுதல்
சரியான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.
வீட்டுக்குள் நுழைய முயன்ற அந்தத் திருடனை ஊர் மக்கள் அடித்து _____________ வென இழுத்து வந்தனர்.
பள பள
தர தர
சல கல
பளீர் பளீர்
சரியான பொருளைத் தெரிவு செய்க.
மட மட - தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை
நற நற - மருட்சியினால் விழித்தல்
பளார் பளார் - கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்புடைய செய்யுள் யாது?
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
மா என்ற உயிர்மெய் எழுத்தில் ஒரு மெய் எழுத்தும் ஓர் உயிர் எழுத்தும் அடங்கி உள்ளன.அவை?
ம் + அ
ம் + ஆ
ஆ + ம்
மா + ஆ
கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் உயர்திணை யாது?
படகில் இருந்த மீன்களை மீனவன் வலையில் போட்டான்.
படகு
வலை
மீனவன்
மீன்கள்
சரியான வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மகளிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்ததும்,காசிநாதன் கண் கலங்கினான்.
மக்கள் மன்னரால் வருகைக்காக காத்திருந்தனர்.
அனுதா பூக்களில் பறித்தாள்.
தம்பி அண்ணனை கடிதம் எழுதினார்.
வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.
" __________ மீது சுமத்தப்பட்ட குற்றத்தை _________ ஒப்புக் கொள்கிறாயா?" என வினவினார் நீதிபதி.
என், நீ
உன், நீ
உன், நான்
உமது, நீ
பின்வருவனவற்றுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
i.கபிலன் கதை எழுதினான்.
ii.நாய் குரைத்தது.
iii.சுமதி பாடினாள்.
iv.முத்து பழங்களைப் பறித்தார்.
i, ii
i, iv
ii, iii
iii, iv
ஒருமை வாக்கியத்திற்கு பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பருந்து வானில் சிறகை விரித்து பறந்தது.
பருந்துகள் வானில் சிறகை விரித்து பறந்தது.
பருந்து வானில் சிறகை விரித்து பறந்தன.
பருந்துகள் வானில் சிறகுகளை விரித்து பறந்தன.
பருந்துகள் வானங்களில் சிறகை விரித்து பறந்தன.
செயப்பாட்டுவினை வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக மாற்றுக.
பொறியியல் கல்லூரி மாநில முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
பொறியியல் கல்லூரியை மாநில முதல்வர் திறந்து வைத்தது.
மாநில முதல்வர் பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்தார்.
மாநில பொறியியல் முதல்வர் கல்லூரியால் திறந்து வைத்தார்.
கோடிட்ட இடங்களுக்கு ஏற்ற விடைகளைத் தெரிவு செய்க.
கோறனி நச்சு நோயால் எல்லா பள்ளிகளும் ____________.
மூடின.
மூடப்பட்டன.
மூடிக்கொண்டன.
அன்றைய மக்களிடம் படிப்பறிவு இல்லை._____________ நற்பண்புகள் மேலோங்கி இருந்தன.
காரணம்
ஆகவே
இருப்பினும்
ஆதலால்
படம் எவ்வகை பாலைக் குறிக்கிறது?
ஒன்றன்பால்
ஆண்பால்
பலர்பால்
பெண்பால்
சரியான வினையடை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
குருவி உயரமான மரத்தில் கூடு கட்டியது.
ராமுவின் அப்பா பெரிய வீட்டைக் கட்டினர்.
மான்கள் காட்டில் வேகமாக ஓடின.
அம்மா சிவப்புச் சட்டையை வாங்கினார்.
சேர்த்தெழுதுக
சேற்றில் + இருந்து
சேற்றில்இருந்து
சேற்றிலிருந்து
சேறுருந்து
சேறிலிருந்து
பிரித்தெழுதுக
தன்னலம்
தன் + நலம்
தன் + அலம்
தன்னால் + நலம்
தான் + நலம்
