wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிசிராந்தையார் காட்சி 6 & 7

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இன்று நாம் வகுப்பில் படித்த நாடகத்தின் காட்சிகளின் தலைப்பைத் தெரிவு செய்க.

a)

நானே குற்றவாளி

b)

அச்சப்பலகை ஆனையைத் தாங்குமா?

c)

நானே கொலை செய்தேன்

d)

நாடகத்துக்குள் நாடகம்

2.

பார்த்தவன் 1: குற்றத்தை ஏற்றுக் கொண்டவன் இந்த நாட்டானா?


பார்த்தவன் 2 : அதிலும் ஐயமா?


பார்த்தவன் 3: அவன் சோழ நாட்டான் என்று தோன்றுகிறது


இந்த உரையாடல் நாடகத்தில் எந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளது?

a)

காட்சி 5

b)

காட்சி 6

c)

காட்சி 4

d)

காட்சி 7

3.

பிசிராந்தையார் : ஏன்? கொலையாளி கொலை செய்ததற்குள்ள காரணத்தைக் கூறவில்லையோ?


வந்தவன்: எதையும் கூறவில்லை. அதனால்..


பிசிராந்தையார்: அமைச்சரையும் அவனையும் தூக்கில் இட்டு விடுவார் மன்னர் என்று துடிக்கின்றீரோ!


இவ்வுரையாடல் நாடகத்தில் எந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளது?

a)

காட்சி 4

b)

காட்சி 6

c)

காட்சி 5

d)

காட்சி 7

4.

பிசிராந்தையார்: தீயாரும் சிலர் இருக்கத்தான் வேண்டும். வறியவரும் சிலர் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணிய துண்டு, சொல்லியதும் உண்டு.


மேற்படியார்: எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் என்ற நிலையே நீடித்தால் வரும் இழுக்க என்ன?


மேற்காணும் உரையாடலில் பிசிராந்தையார் மேற்படியாரிடம் அவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன?

a)

ஊர் மக்கள் ஒரு பிரச்சனையைத் தைரியமாக எதிர்நோக்க

b)

மக்கள் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்

c)

மக்களின் மெலிந்த உள்ளத்தை மேம்படுத்த வேண்டும்

5.

ஏழாம் காட்சியில் 'உட்கார்ந்திருப்பவன்' எனும் கதைப்பாத்திரம் யாரைக் குறித்தது?

a)

இளவரசன்

b)

சோழ இளவரசன்

c)

சோழ நாட்டான்

d)

விடை இல்லை

6.

பிசிராந்தையார்: நண்பரே, இது ஆலின் குற்றமன்று. அந்த ஆலின் நிழலில் அண்டிய பறவை செய்த குற்றம் பாருங்கள்! பறவை இழைத்த குற்றம்; ஆலமரம் இழைத்த குற்றமன்று.


பிசிராந்தையார் இவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன?

a)

ஆலினின்று பறவை சோழ இளவரசன் தொடையில் எச்சமிட்டக் காரணத்தால் அவன் கொதிப்படைந்த பொழுது பிசிராத்தையார் இவ்வாறு கூறினார்.

b)

சோழ இளவரசன் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட கொலைக்குக் காரணமாக விளங்கியவன் சோழ நாட்டான் என்றும் அதற்கு தன் தந்தையாரின் தீய ஆட்சியே காரணம் என்றும் குறை கூறினான்; ஆனால், சோழ இளவரசன் கூறியது முற்றிலும் இல்லை என்று பிசிராந்தையார் மறைமுகமாகக் கூறுவதற்கு அவ்வாறு பேசினார்.

c)

சோழ இளவரசனின் கோபத்தைத் தனிக்க அவ்வாறு கூறினார்

7.

காட்சி ஆறில் இடம்பெற்ற கதைப்பாத்திரங்களைத் தெரிவு செய்க.

a)

அரசன்

b)

அனிச்சை

c)

அமைச்சன்

d)

பெருமக்கள்

8.

காட்சி ஏழில் இடம்பெற்ற கதைப்பாத்திரங்களைத் தெரிவு செய்க

a)

மேற்படியார்

b)

பிசிராந்தையார்

c)

சோழ இளவரசன்

d)

பாண்டிய நாட்டான் ஒருவர்

9.

கொலை புரிந்தவன் கூறிவிட வேண்டும்; வேறென்ன வேண்டும்? அமைச்சர் சாகப் போகின்றார்?


இக்கூற்று யார் பேசியது?

a)

அரசன்

b)

ஊர் மக்கள்

c)

அனிச்சை

d)

தோழிமார்

10.

மக்கள் கூட்டத்தில் 'நான் தான்' குற்றவாளி என்று ஒருவன் கூறினான்.


இச்சூழல் நாடகத்தின் காட்சி ஆறின் இறுதிச் சூழலாகும்.


மேற்காணும் கூற்றுச் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

11.

அமைச்சரைத் தூக்கிலிடுவதற்கு முன் அரசன் மக்களைப் பார்த்துக் குற்றவாளி ஒப்புக் கொள்ள முன் வருமாறு வேண்டினான். ஏன்?

a)

குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை

b)

குற்றவாளி மக்கள் கூட்டத்தில் இருந்தான். அதனால் அரசன் அவ்வாறு கேட்டார்