wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Grade 05

Total questions: 50

Worksheet time: 8hrs 20mins

Name
Class
Date
1.

பாவை என்பதன் ஒத்தகருத்துச் சொல் யாது?

a)

குழந்தை

b)

கமல்

c)

பொம்மை

2.

துஷானி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடனப் போட்டியில் வெற்றி பெற்றாள். இதற்கு பொருத்தமான பழமொழி,

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

c)

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

3.

பின்வருவனவற்றுள் முன்னிலைப் பன்மைச் சொல்,

a)

நீங்கள்

b)

நாங்கள்

c)

அவர்கள்

4.

லவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் பழமொழியின் கருத்து,

a)

சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது.

b)

திறமையில் நம்பிக்கை.

c)

வாலிபத் துணிவு

5.

பின்வருவனவற்றுள் திருத்தமான வடிவம் யாது?

a)

புடவை

b)

புகையிலை

c)

நேத்து

6.

தென்றல் காற்று ............... என வீசியது.

a)

சடசட

b)

குளுகுளு

c)

கலகல

7.

நான் தன்மை எனின் நீங்கள் .............

a)

முன்னிலை

b)

படர்க்கை

c)

ஒருமை

8.

சிலைகளை செதுக்குபவர்,

a)

சிற்பி

b)

ஓவியன்

c)

கவிஞன்

9.

சிறந்த மனிதர்களாக வாழ்வோம். இங்கு அடைமொழிச் சொல்லாக அமைவது,

a)

மனிதர்கள்

b)

சிறந்த

c)

வாழ்வோம்

10.

ஆறப்போடுதல் என்ற மரபுத்தொடரின் கருத்து,

a)

பிற்போடுதல்

b)

விரைவாக

c)

தந்திரம்

11.

மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பது,

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

மருதம்

12.

கரடி உறுமும் என்பது போல தேனீ,

a)

இரையும்

b)

குறுகுறுக்கும்

c)

ரீங்காரமிடும்

13.

'இலங்கை மின்சார சபை' என்பதன் சுருக்கக் குறியீடு,

a)

இ.மி.ச

b)

இ.போ.ச

c)

இ.ம.வ

14.

'சிந்தனை' என்னும் சொல்லிலுள்ள உயிர்க்குறியின் பெயர் யாது?

a)

அரவு

b)

சங்கிலிக்கொம்பு

c)

ஒற்றைக்கொம்பு

15.

இன்று அதிக ................ பெய்தது.

a)

மழை

b)

மலை

c)

மளை

16.

கறுப்பு என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,

a)

சிவப்பு

b)

பச்சை

c)

வெள்ளை

17.

"நாட்டுப்பற்று" என்பதைப் பிரித்தெழுதினால் வருவது,

a)

நாட்டு+பற்று

b)

நாடு+பற்று

c)

நாடுப்+பற்று

18.

'பல்+பொடி' என்பதைச் சேர்த்தெழுதினால் வருவது,

a)

பற்பொடி

b)

பட்பொடி

c)

பல்பொடி

19.

ஆண் சிங்கத்தை குறிப்பது,

a)

சிம்மம்

b)

கடுவன்

c)

ஏறு

20.

சிங்கத்தின் இளமைப்பெயர் யாது?

a)

குட்டி

b)

குருளை

c)

குஞ்சு

21.

தென்னையின் கூட்டத்தைக் குறிப்பது,

a)

தோப்பு

b)

சோலை

c)

கூட்டம்

22.

நெல்லின் உள்ளீடு,

a)

சோறு

b)

அரிசி

c)

பருப்பு

23.

மிளகாயின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?

a)

கொட்டை

b)

முத்து

c)

விதை

24.

வாழையின் பிஞ்சுக்குரிய மரபுப்பெயர் யாது?

a)

வடு

b)

மூசு

c)

கச்சல்

25.

கோழிகள் வளர்க்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?

a)

பட்டி

b)

பண்ணை

c)

தொழுவம்

26.

'கோடை' என்பது எவ்வகைப் பெயர்?

a)

காலப்பெயர்

b)

இடப்பெயர்

c)

சினைப்பெயர்

27.

'அவர்கள் கடைக்குப் போனார்கள்' என்ற வாக்கியத்தில் உள்ள வினைச்சொல்,

a)

அவர்

b)

போனார்கள்

c)

கடை

28.

'தாத்தா நேற்று வந்தார்' என்ற வாக்கியத்திலுள்ள எழுவாய் யாது?

a)

தாத்தா

b)

நேற்று

c)

வந்தார்

29.

'வெள்ளை முயல் துள்ளி ஓடியது' என்ற வாக்கியத்திலுள்ள பயனிலை அடைமொழி யாது?

a)

வெள்ளை

b)

துள்ளி

c)

முயல்

30.

உயர்திணையைக் குறிக்கும் சொல் ஒன்று,

a)

தங்கை

b)

காடு

c)

பூக்கள்

31.

பாடகன் என்ற சொல்லின் பன்மை வடிவம் யாது?

a)

பாடகன்கள்

b)

பாடகர்கள்

c)

பாடகர்க்கள்

32.

'பறவைகள்' என்பது,

a)

பலர்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

33.

தபுதாரன் என்பதன் எதிர்ப்பாற்சொல்,

a)

விதவை

b)

தபுதாரி

c)

தபுதாரினி

34.

'பாடுகின்றேன்' என்பது,

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

35.

உயர்திணைத் தன்மைப் பன்மைச் சொல்,

a)

நாங்கள்

b)

நீங்கள்

c)

அவர்கள்

36.

'க' என்னும் எழுத்து இயல்பொலியாக வரும் சொல்லைத் தெரிவு செய்க,

a)

தாகம்

b)

சிங்கம்

c)

கட்டில்

37.

"பாரபட்சம்" என்ற சொல்லில் "ப" வருவது,

a)

மாற்றொலி

b)

இயல்பொலி

c)

வானொலி

38.

' ! ' என்ற நிறுத்தற்குறியின் பெயர் என்ன?

a)

முற்றுப்புள்ளி

b)

வியப்புக்குறி

c)

காற்புள்ளி

39.

தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவர் எவ்வாறு அழைக்கப்படும்?

a)

வேட்பாளர்

b)

சகபாடி

c)

அகராதி

40.

வெள்ளத்தாலும் போகாது வெண்தணலாலும் வேகாது கொள்ளையடிக்கவும் முடியாது கொடுத்தாலும் குறையாது. அது என்ன?

a)

கடிதம்

b)

நிழல்

c)

கல்வி

41.

"கூட்டுறவுக் கடை காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்திருக்கும்" என்பது,

a)

அறிவித்தல்

b)

அறிவுறுத்தல்

c)

கட்டளை

42.

"சின்னச்சின்ன" என்பது,

a)

இணைமொழி

b)

அடுக்குத்தொடர்

c)

அடுக்கிடுக்குத்தொடர்

43.

'முருகன் வீட்டைக் கட்டினான்' என்ற வாக்கியத்தின் செயப்படுபொருள்,

a)

முருகன்

b)

கட்டினான்

c)

வீட்டை

44.

தஞ்சையில் நெல் வயல் ................... என்று காணப்படுகின்றன.

a)

வெள்ளை வெளேர்

b)

கண்ணங்கரேல்

c)

பச்சைப்பசேல்

45.

கலையரசன்................ பாராது கடுமையாக உழைத்தான்.

a)

அன்றும் இன்றும்

b)

இரவு பகல்

c)

அங்கும் இங்கும்

46.

என் தாய் என்னைச்................... வளர்த்தாள்.

a)

சீராட்டி பாராட்டி

b)

பேரும் புகழும்

c)

ஓங்கி உயர்ந்து

47.

பசு மாட்டைக் குறிப்பது,

a)

கோ

b)

மா

c)

48.

குழந்தையைக் குறிப்பது,

a)

குழவி

b)

குளவி

c)

குலவி

49.

விழி,நேத்திரம்,நயனம் என்பதைக் குறிக்கும் சொல்,

a)

கை

b)

தலை

c)

கண்

50.

மா,பலா,வாழை என்பது,

a)

முத்தமிழ்

b)

முப்பால்

c)

முக்கனி