Font size
Worksheetsதமிழ் - வினா, விடை வகைகள், பொருள்கோள்
Total questions: 20
Worksheet time: 9mins
தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை
பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும்
பொருட்டு வினவுவது ___________.
அறியாவினா
ஏவல் வினா
அறிவினா
ஐய வினா
‘இச்செயலைச் செய்தது மங்கையா?
மணிமேகலையா?’ என வினவுதல் ________ வினாவின் எடுத்துகாட்டு.
கொளல்வினா
அறியாவினா
அறிவினா
ஐய வினா
அறியாவினாவின் பொருள்.
ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.
தான் அறியாத ஒன்றை அறிந்து
கொள்வதற்காக வினவுவது.
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து
உதவும் பொருட்டு வினவுவது.
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது கொளல்வினா.
சரி
தவறு
“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம்
வினவி வேலையைச் சொல்லுதல் ______________.
அறிவினா
ஐய வினா
ஏவல் வினா
அறியாவினா
வினா எட்டு வகைப்படும்.
சரி
தவறு
விடை (a) வகைப்படும்.
முதல் ___________வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ___________விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.
5, 3
4, 5
3, 5
5, 4
வெளிப்படை விடைகளை தேர்ந்தெடுங்க
இனமொழி விடை
மறை விடை
ஏவல் விடை
நேர் விடை
‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக்
‘கால் வலிக்கும்’ என்று விடையளிப்பது ____________ விடை.
உறுவது கூறல் விடை
இனமொழி விடை
வினா எதிர் வினாதல் விடை
உற்றது உரைத்தல் விடை
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற
வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று
கூறுவது இனமொழி விடை.
சரி
தவறு
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை __________.
ஏவல் வினா
மறை விடை
நேர் விடை
ஏவல் விடை
செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும்
முறைக்குப் ____________ என்று பெயர்.
பெயர்கோள்
செய்யுள்கோள்
பொருள்கோள்
வினைகோள்
பொருள்கோள் (a) வகைப்படும்.
பாடலின் தொடக்கம்முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது __________ ஆகும்.
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
நிரல்நிறைப் பொருள்கோள்
முறை நிரல்நிறைப் பொருள்கோள்
நிரல்நிறைப் பொருள்கோளின் இருவகைகள் __________ மற்றும் ________________.
இடை நிரல்நிறைப் பொருள்கோள்
முறை நிரல்நிறைப் பொருள்கோள்
எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது'. இதில் பயன்றுவரும் பொருள்கோள்__________.
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
இடை நிரல்நிறைப் பொருள்கோள்
முறை நிரல்நிறைப் பொருள்கோள்
எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு.
இதில் பயன்றுவரும் பொருள்கோள்__________.
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
தாப்பிசைப் பொருள்கோள்
நிரல்நிறைப் பொருள்கோள்
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
விடையின் வேறு பெயர்கள்.
இறை
கறை
செப்பு
பதில்
நன்னூலாரின் வேறு பெயர்.
பரஞ்சோதி முனிவர்
கீரந்தையார்
பவணந்தி முனிவர்
பாவாணர்
